| |
| "புறம்பயந் தொழப் போதும்" என்று - இது பதிகக் குறிப்பும் கருத்துமாகிய மகுடம்; பதிகத்தின் "புறம்பயந் தொழப் போதுமே" என்று பாட்டுத்தோறும் முடிபு வருதல் காண்க. உடன் விரைவாக; ஆர்வங் குறித்தது. |
| செல்வர் - முத்திச் செல்வமுடையவர்; "செல்வப் புறம்பயம்" என்பது பதிகம். |
| சேரவே - எய்தினார் என்று கூட்டுக. வினைமுற்று முன் வந்தது செயல் முற்றின விரைவு குறித்தது. |
| 96 |
| திருப்புறம்பயம் |
| திருச்சிற்றம்பலம் | பண் - கொல்லி |
| அங்க மோதியோ ராறை மேற்றளி நின்றும் போந்துவந் தின்னம்பர்த் தங்கி னோமையு மின்ன தென்றில ரீச னாரெழு நெஞ்சமே கங்கு லேமங்கள் கொண்டு தேவர்க ளோதி வானவர் தாந்தொழும் பொங்கு மரல்விடை யேறி செல்வப் புறம்ப யந்தொழப் போதுமே. | |
| (1) |
| துஞ்சி யும்பிறந் துஞ்சிறந் துந்து யக்க றாதம யக்கிவை யஞ்சி யூரன் றிருப்பு றம்பயத் தப்ப னைத்தமிழ்ச் சீரினால் நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு துய்து மென்று நினைத்தன வஞ்சி யாதுரை செய்ய வல்லவர் வல்லவர் வானுல காள்வரே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- ஆசிரியர் முன் காட்டியருளியவாறு கண்டுகொள்க. (3250); பிறவியிறவிகளின் மயக்கினை உலகர் நீங்க வடையும் சாதனங்களை உபதேசித்த உட்குறிப்பு. (பதிகம் 10) |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அங்கம் - வேதாங்கங்களாகிய ஆறு; ஓர் - எண்ணுகின்ற; இன்னதென்றிலர் - அருள் செய்தாரிலர்; கங்குல் ஏமங்கள் - இரவில் உரிய யாமங்கள்; கொண்டு - காலங் குறிக்கொண்டு; ஏறி - யெயர்; ஏறியவருடைய;- (2) பதி - ஊர்; பண்டையரல்லர் - பண்டைக் காலந் தொட்டு உடனுள்ளவரல்லர்; இடையில் வந்து இடையில் நீங்குபவர்; சிவன் ஒருவரே "பண்டு மின்றும் என்றுமுள்ள பொருளாவார்"; ஆதலின் - என்பது சொல்லெச்சம்; பெண்டிரும் - வாழ்க்கையும் நிலை யென்ற நினைப்பொழி; எல்லி - இரவு; மல்லிகை - சண்பகம் முதலிய பூக்கள் மாலையில் மலர்ந்து இரவு முழுதும் மணம் வீசு மியல்புடையன;- (3) புறம்...தளர்ந்து - இவை மூப்பின் முடுகிய நிலை; தளர்ந்து...ஆண்மை - அவ்வாறு தளர்ந்தபின் அறத்தினை இடைவிடாது நினைப்பதும் செய்தலும் ஆளுதலும் அரிய; திறம்பியாது - ஆதலின் திறம்புதலின்றி; தயங்காமல் - தாமதியாமல்; ஆதலின் என்பது சொல்லெச்சம்; சிறுகாலை நாம் உறு வாணிபம் - சிறுபோதிலே; விரைவிலே; ஈண்டு அறம் - சிவ தர்மம்;- (4) குற்றொருவரை...திண்ணமே - குற்று - அடித்து; கூறைகொண்டு - துணியினையும் வழிப்பறி செய்து; கொலைகள் சூழ்ந்தகளவு - கொலையும், எண்ணமிட்டுச் செய்த களவும்; குற்றுதல் - கொலை வகையும், கூறைகொள்ளுதல் - களவு வகைகளும் குறித்தன; எல்லாம் - இத்தீமைகளின் பலவகைகள் எல்லாம்; செற்றொருவரை...தீமைகள் - கொலை களவாதியாகப் பிறரைச் செறுத்துச் செய்யும் தீங்குகள்; தீமைகள் இம்மையே வரும் - தீமைகளின் பயன் இம்மையிலேயே வந்து, செய்தார் |