| |
| பாற் சாரும்; இது கன்ம நியதி - இறைவரது ஆணை; தீமை - தீமையின் பயன்; திண்ணம் - உறுதி; தவறாத உறுதிப்பாடு; இம்மை வினைப் பயன் மறுமையில் வரும் என்பர்; ஆனால் இக்கலிகாலத்தில் இம்மையே வரும் என்பதும், மிக்க நல்வினையும் இம்மையே பலிக்கும் என்பதும் நூன் முடிபுகளாம்;- (5) கள்ளி - கள்ளங்கொண்டு; கள்ளமாக; பறையும்படி - நீங்கும்படி; தெள்ளிதா - தெளிவு பெற்று; நள்ளி - நண்டு;- (6) பகடு - தேர்; கடை - இறுதியில்; தேரைவால் - தேரையில் வால் எவ்வாறு காணப்படாது தேய்ந்துள்ளதோ அதேபோல இல்லையாகும் என்பது. உருவகம்;- (7) முன்னை...ஆதலின் - இஃது உண்மை நூல்களின்றுணிபு; முன்னமே - அங்ஙனம் மூடும் முன்னமே; தியக்காது - மயங்காது; புன்னைக்கன்னி - புன்னை அரும்புகள்; கழிக்கண் நாறும் - கழி - கடற்கழி; புன்னை நெய்தற் கருப்பொருளாதலின் கடற்கழி யருகில் மலர்ந்து மணம் தருவன; கழியின் தீ நாற்றத்தை மாற்றி மேலெழுந்து மணந் தரும் என்பதும் குறிப்பு;- (8) மலம் - மும்மலங்களும்; வல்வினை - பழவினை - மூலமலங்களின் பயன்; சலம் - சஞ்சலம்; துயர்;- (9) பண்டு....பாவமும் - பழமலங்கள்; தீமையும் அதனால் வரும் பாவமும்; அரியன - அரியசாதனங்கள்; தொண்டு - தொண்டாக; அடிமைத்திறத்தில்;- (10) துஞ்சியும்....அஞ்சி - பிறவியிறவிகளால் வருந்துன்ப நீங்காத மயக்கத்தினை அஞ்சி; இது பதிகத்தினுட் குறிப்பு; பிள்ளையார் தேவாரம் 5-வது பாட்டுப் பார்க்க. தமிழ்ச்சீர் - "எங்கும் மன்னிய வின்னிசைப் பதிகம்" (3250); நெஞ்சினாலே...நினைத்தன - "சேருமுள்ளமிக்கெழ" (3249) என்று ஆசிரியர் இதனை எடுத்துக் காட்டியருளினர். |
| தலவிசேடம் :- திருப்புறம்பயம் - சோழநாட்டில் காவிரிக்கு வடகரை 46-வது பதி; 2139-ம் பாட்டின்கீழ்ப் பார்க்க. |
3251 | அப்ப திக்க ணமர்ந்த தொண்டரு "மன்று வெண்ணெய்நல் லூரினில் ஒப்ப ருந்தனி வேதி யன்பழ வோலை காட்டிநின் றாண்டவர் இப்பதிக்கண்வந் தெய்தவென்ன தவங்க"ளென்றெதிர் கொள்ளவே முப்பு ரங்க ளெரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார். | |
| 97 |
| (இ-ள்.) அப்பதிக்கண்...எதிர்கொள்ளவே - அந்தப் பதியிலே வாழ்ந்த தொண்டர்களும் "அன்று திருவெண்ணெய் நல்லூரிலே ஒப்பற்ற தனியாகிய வேதியனாய் வந்த இறைவரால் பழவோலையினைக்காட்டி நின்று ஆட்கொள்ளப் பெற்ற நம்பிகள் இந்தப் பதியில் வந்து சேர என்ன தவங்களைச் செய்தோம்" என்று மகிழ்ந்து எதிர்கொள்ளவே; முப்புரங்கள்...முன்னினார் - திரிபுரங்களையும் எரித்த இறைவரது திருக்கோயிலின் வாயில் முன்பு வந்து சேர்ந்தனர். |
| (வி-ரை.) "அன்று...தவங்கள்" என்று இது திருப்புறம்பயத்தின் தொண்டர்கள் எண்ணியும் சொல்லியும் மகிழ்ந்த கருத்து. |
| ஒப்பரும் தனிவேதியன் - "ஒப்பரும் - தனக்குவமையில்லாதான்" (குறள்); தனி - "ஒன்றே பதி" (போதம்); "தனியாய் நின்றான்" (198) "ஒருவர்" (174) என்றபடி அவ்வழக்கினும் வேறு யாரும் தன் பக்கம் சேர்வோரின்றித் தனியாய் நின்றவன் என்ற குறிப்புமாம்; தனிவேதியன் - 175 - 178 பார்க்க. |
| அன்று - தடுத்தாட்கொண்ட அன்று - முன்னை நாளில்; பண்டறிசுட்டு. |
| அன்று...ஆண்டவர் - அம்மையாரால் ஞானவமுதூட்டப்பெற்ற சிறப்பால் ஆளுடைய பிள்ளையாரையும், கன்மிதப்பிற் கடல் கடந்து போந்த தன்மையாலும் |