[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்103

3253
ங்கு நீடருள் பெற்று ளார்வ மிகப்பொ ழிந்தெழு மன்பினாற்
பொங்கு நாண்மலர்ப் பாத முன்பணிந் தேத்தி மீண்டு புறத்தணைந்
தெங்கு மாகி நிறைந்து நின்றவர் தாமகிழ்ந்த விடங்களிற்
றங்கு கோல மிறைஞ்சு வாரருட் டாவி லன்பரோ டெய்தினார்.

99

(இ-ள்.) அங்கு...புறத்தணைந்து - அவ்விடத்து நீடிய திருவருளினைப்பெற்று மனத்துள்ளேஆர்வம் மிகுதலின் மேலெழுந்து பொழியும் அன்பினாலே பொங்கும் புதிய பூவைப்போன்ற பாதங்களின் முன்னே பணிந்தேத்தி அங்குநின்றும் மீண்டு புறத்திற் சேர்ந்து; எங்குமாகி....இறைஞ்சுவார் - எங்கும் நீக்கமற முழுதும் நிறைந்து நின்றவராகிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளிய இடங்களில் உள்ள நிலைபெற்ற திருக்கோலங்களைச் சென்று வணங்குவாராகி (நம்பிகள்); அருள்தாவில்...ஏகினார் - அருள்பெற்ற குற்றமற்ற அன்பர்கள் உடன் சூழ்ந்துவர அவர்களுடனே சென்றனர்.
(வி-ரை.) ஏத்தி - இப்பதிகம் கிடைத்திலது!
எங்குமாகி நிறைந்து நின்றவர் - எங்கும் நிறைதல் இறைவரது முழுமுதற்றன்மை காட்டும் குணங்களுள் ஒன்று; சர்வவியாபகம் என்பது வடமொழி; நின்றவர் - எல்லாமாய் நிற்பவர்; எல்லாவற்றுள்ளும் நீங்காது நிற்பவர்; இத்தன்மை நின்ற திருத்தாண்டகம் - திருவுருத்திரம் முதலியவற்றுட் பேசப்படுவது.
மகிழ்ந்த இடங்களிற் றங்குகோலம் - எங்கும் நிறைந்து நின்றவரை எங்கும் காணலாமே; அதன் பொருட்டுப் பல இடங்களுக்கும் செல்வானேன்? எனின், சில விடங்களில் மகிழ்ந்து தயிரினெய் போல விளங்கியும், மற்ற இடங்களில் விளங்காது பாலினெய்போல மறைந்தும் வீற்றிருப்பார் இறைவராதலின், விளங்கி உள்ள இடங்களிற் சென்று கண்டு வணங்குதல் வேண்டப்படும் என்க; "அவன் மற்றிவ்விடங்களிற் (பத்தரது திருவேடமும் சிவாலயமும்) பிரகாசமாய் நின்றே" என்று சிவஞான போதத்தினுள் (சூ.12) மூன்றாமதிகரணத்துள் சிவாலய வழி பாட்டின் இன்றியமையாமைக்கு ஏதும் கூறியவாற்றான் அறிக; தங்குகோலம் என்ற குறிப்புமிது; வெளிப்பட நின்றிடுதல்.
இறைஞ்சுவார் - வினைப்பெயர்.
தாவில் அன்பரோடு - குற்றமற்ற மெய்யன்பர்கள்.

99

வேறு

3254
ம்புநீ டலங்கன் மார்பின் வன்றொண்டர் வன்னி கொன்றை
தும்பைவெள் ளடம்பு திங்க டூயநீ ரணிந்த சென்னித்
தம்பிரா னமர்ந்த தானம் பலபல சார்ந்து தாழ்ந்து
கொம்பனா ராட னீடு கூடலை யாற்றூர் சார,

100

3255
செப்பரும் பதியிற் சேரார் திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் செல்லு மொருவழி யுமையா ளோடு
மெய்ப்பரம் பொருளா யுள்ளார் வேதிய ராகி நின்றார்
முப்புரி நூலும் தாங்கி நம்பியா ரூரர் முன்பு.

101

3254. (இ-ள்.) வம்பு...வன்றொண்டர் - மணமிகுந்த மாலையினை அணிந்த மார்பினையுடைய நம்பிகள்; வன்னி...தாழ்ந்து - வன்னி, கொன்றை, தும்பை.