[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்105

வேதியராகி - முப்புரிநூலும் தாங்கி - வேதியராகி என்றது பிழம்பும், புரிநூல் தாங்கி - உரிய அங்கமும் உணர்த்தியபடி; ஆகி - ஆக்கச் சொல் வெளிப்படும் இயல்புணர்த்திற்று; முப்புரிநூல் - வேடம் மேற்கொண்ட செயற்கை குறித்தது; ஆகி - வெளிப்பட்டு. ஒருவழி - ஒப்பற்ற சிவநெறியாகிய பெருவழி என்ற குறிப்புமாம்.
வன்றொண்டர் + (3264) - புகழார் செல்லும் வழி - உள்ளார் - முன்பு நின்றார் (3255) என இரண்டு பாட்டுகளையும் முடித்துக்கொள்க.
உள்ளார் - நின்றார் - முன்னமே யாண்டு நிறைந்து உள்ளவர் ஆயினும் வெளிப்பட்டு நின்றார்.

101

3256
நின்றவர் தம்மை நோக்கித் நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்
"இன்றியா முதுகுன் றெய்த வழியெமக் கியம்பு" மென்னக்
குன்றவில் லாளி யாருங் "கூடலை யாற்றூ ரேறச்
சென்றதிவ் வழிதா"னென்று செல்வழித் துணையாய்ச் செல்ல,

102

3257
கண்டவர் கைகள் கூப்பித் தொழுதுபின் றொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றை யாரை "வடிவுடைமழு" வென் றேத்தி
"அண்டர்தம் பெருமான் போந்த வதிசய மறியே" னென்று
கொண்டெழும் விருப்பி னோடுங் கூடலை யாற்றூர் புக்கார்.

103

3256. (இ-ள்.) நின்றவர்...தாழ்வார் - முன்கூறியவாறு தாம் செல்லும் ஒரு வழியில் நின்றவராகிய இறைவரை நோக்கி நம்பிகள் உருகிய மனத்தினையுடையவராய் வணங்கி; இன்று...என்ன - "இன்று நாம் திருமுதுகுன்றத்தினைச் சென்று சேர்வதற்கு உரிய வழியினை எமக்குச் சொல்லும்" என்று கேட்க; குன்றவில்லாளியாரும்..என்று - மலையை வில்லாக ஏந்திய இறைவரும் கூடலையாற்றூர் ஏற இவ்வழி சென்றது என்று கூறி; செல்வழித்துணையாய்ச் செல்ல - செல்லும் இடத்து வழித்துணையாகத் தாமும் உடன் செல்ல,

102

3257. (இ-ள்.) கண்டவர்...காணார் - முன் கூறியபடி செல்வழித்துணையாய்த் தம்முடன்செல்லக் கண்ட நம்பிகள்அவரைக் கைகூப்பித் தொழுது பின்அவ்வாறு தொடர்வாரைக் காணாராகி; வண்டலர்...ஏத்தி - வண்டுகள் ஊதி மலர்த்தும் கொன்றையினைச் சூடிய இறைவரை "வடிவுடைமழு" என்று தொடங்கித் துதித்து; அண்டர்தம்....என்று - தேவ தேவராகிய இறைவர் "வேடங் காட்டிக்கூட வந்து மறைந்து போயின அதிசயத்தை இன்னதென்றறியேன் என்று கூறிப்பதிகம் பாடி; கொண்டெழும்...புக்கார் - தம்மைப் பற்றிக்கொண்டு மேலெழுகின்ற விருப்பத்தினுடனே திருக்கூடலை யாற்றூரினிற் புகுந்தருளினர்.

103

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3256. (வி-ரை.) நின்றவர் - முன் கூறியபடி நம்பிகள் செல்லும் ஒரு வழி அவர் முன்பு நின்ற வேதியர்; நம்பிகளுள்ளும் நின்று தம்மை நோக்கும்படி செய்தவர் என்ற குறிப்புமாம்.
நெகிழ்ந்த சிந்தையராய் - "நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால்" (186) என்று இவ்வாறு நெகிழ்ச்சியுண்டாதற்குக் காரணத்தை முன் விரித்தவாறுகண்டு கொள்க; வேடம் மாறினும் பொருட்டன்மையின் முன்னைத் தொடர்புபற்றி நெகிழ்ச்சி கிளைப்பதாயிற்று என்க.
தாழ்வார் - வணங்குவாராய்; தாழ்தல் - விரும்புதலுமாம்.