[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 107 |
| | | உமையோடும் - அம்மையோடும் கூட வேதியராகி நின்றார் என்பது; "உமையாளோடும்" (3255) என்றதற்கு அகச்சான்று. அம்மையோடும் எனப் பதிகப்பாட்டுத்தோறும் கூறுதல் காண்க. இறைவரது அருளினையே இவ்வாறு கூறினார் என்றலுமாம். புரிகுழலம்மை என்பது இப்பதியில் அம்மை பெயர்; கூடலையாற்றூருக்கு வழிகாட்டிப் போந்தாராதலின் இப்பதியிற் சுவாமி பெயர் நெறி காட்டு நாயகர் எனவழங்கும்; "குறிகளும் அடையாளமும் கோயிலும், நெறிகளும் அவர்நின்றதோர் நேர்மையும்" (தேவா - பாசுரம்); கூடலையாற்றூரில் அடிகள் இவ்வழிபோந்த - என்றதனால் இறைவர் வழிகாட்டிக் கூடலையாற்றூரின் அணிமைவரை எழுந்தருளி மறைந்தனர் என்பது கருதப்படும்; "காணார் - ஏத்திக் கூடலையாற்றூர்புக்கார்" (3257) என்பதனாலும் இக்குறிப்புப் பெறப்படும்; அறியேனே - முன்கண்டபோது அறிந்திலேனாயினேன்; திருவதிகையில் இறைவர் திருவடி சூட்டி மறைந்த போதும் "தம்மானை அறியாத" (தேவா) என்றது காண்க. "இவ்வழி போந்த வதிசய மறியேனே" பதிகக் கருத்தாகிய மகுடம். அடிகள் - ஐயன் - ஆர்வன் - அந்தணன் - ஆதி - அத்தன் - அழகன் - அறவன் - ஆலன் - ஆடலுகந்தான் என்று இப்பதிகத்தினுள் நம்பிகள் இறைவரது கருணைப் பெருக்கினைப் பாராட்டும் அருமைப்பாடுகள் குறிக்க; இதனையே "கொண்டெழும் விருப்பினோடும்" (3257) என்று அருளினர். குறிப்பு - இப்பதிகம் செல்வழித் துணையாய் உடன் றொடர்ந்து வந்த இறைவர் மறைந்தருளிய இடத்தினின்று பாடியருளியவாறே நகரினுள் வரும்போது பாடப்பட்டது:- (2) கொய் - மலரரும்புகள்;- (3) ஆர்வன் - அடியார்க்கருளும் செயலில் ஆர்வமுடையோன்;- (4) சந்து - பெருமை; அழகு; அணவுதல் - உடன் விரவுதல்; அந்தணன் - முன் காட்டிய வேதிய வடிவம்; முனிவர் என்றலுமாம்;- (5) வேதியர் - முன்பு காட்டிய உருவக் குறிப்பு; வேதியராகிய ஆதி என்று கூட்டுக;- (6) வித்தகம் - பெருமை; நன்மை; பெருமையாவது உலகம் புனருற் பத்திக்குக் காரணமாகிய நாதத்தை உளதாக்குதல்; வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" (தேவா) - (7) குழை - இலைக்கொத்துக்கள்; அழகன் - இறைவர் தம் முன்பு காட்டிய வடிவத்தில் நம்பிகளது மனம் ஈடுண்டு விருப்ப மிகுந்த நிலைகாட்டிற்று; (9) கோலமதுருவாகி - வேதியர் கோலங்கொண்டு காட்டிப் போந்த சரிதக்குறிப்பு; அகச்சான்று;- (10) ஆடல் - காட்டிக் கூறி மறைந்த திருவிளையாட்டுச் சரிதக் குறிப்பாகிய சான்று. | | தலவிசேடம் :- திருக்கூடலையாற்றூர் - நடுநாட்டில் மூன்றாவது பதி; திருமணி முத்தாறும், வசிஷ்டநதி கூடிய பின்வரும் வடவெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ளமையால் இப்பெயர் பெற்றது; வசிட்டநதி வடவெள்ளாற்றுடன் கூடிய பின் நிவாநதி என வழங்கப் பெறும். ஆளுடைய நம்பிகள் திருப்புறம் பயத்தினின்றும் வடக்கு நோக்கிப் பல பதிகளையும் வணங்கித் திருமுதுகுன்றத்திற்குச் செல்ல நினைந்து செல்பவர், வழியில் கூடலையாற்றூரிற் சேராது செல்லும்போது, அவ்வழியில் வேதியர் வடிவுடன் நின்ற இறைவரைத் திருமுதுகுன்றத்துக்கு வழி எது என்று வினவக், "கூடலையாற்றூர் ஏறச்சென்றது இவ்வழி" ரிறையவனார்" என்றுணர்ந்து வியந்து "வடிவுடைமழு" என்ற பதிகம்பாடி அடைந்த பெருமை பெற்ற பதி. விரிவு புராணத்துட் காண்க. (3254 - 3258) (ஏயர்கோன் - புரா 100 - 104) அதுகாரணமாகச் சுவாமி - நெறிகாட்டுநாதர் எனப்படுவர்; அம்மை - புரிகுழனாயகி; பதிகம் 1. |
|
|
|
|