108திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

இது சிதம்பரத்தினின்றும் மேற்கே செல்லும் குமாரகுடிக் கற்சாலையில் 4 நாழிகையளவில் அடையத்தக்கது. இவ்வழியில் 11/2 நாழிகையளவு மட்சாலையிற் செல்லுதல் வேண்டும். இவ்வழி நிவாநதியின் தென்கரையில் உள்ளது; (2) திருமுதுகுன்றம் நிலயத்தினின்றும் திருமணி முத்தாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிச் செல்லும் கற்சாலைவழி 6 நாழிகையளவில் எறும்பூரையடைந்து, நிவாநதியைக் கடந்து தென்மேற்கில் 2 நாழிகையளவில் அடைவது மற்றொரு வழி; (3) திருமுதுகுன்றம் நிலையத்தினின்றும் தெற்கிலேனும் திருப்பெண்ணாகடம் நிலையத்தினின்று கிழக்கிலேனுங் கற்சாலைகள் வழி நிவாநதி வடகரைவழி 4 நாழிகைவந்து அவ்வழி நிவாநதியினைத் தாண்டி 2 நாழிகையில் நதியின் தென்கரையில் திருஎருக்கத்தம்புலியூரை அடைந்து அங்கு நின்றும் நிவாநதியின் தென்கரை வழியாய்க் கிழக்கில் 4 நாழிகையளவில் இதனை அடைவது மற்றுமொரு வழி; திருப்புறம்பயத்தி்னின்றும் தெற்கு நின்று நம்பிகள் வந்த வழி வேறு; எவ்வழியேயாயினும், ஆறு கடந்தும், மட்சாலை, ஒற்றையடிப்பாதைகளின் வழிச் சிரமத்துடன் தான்இவ்வூர் சேரத்தக்கது: மழை நாளில் மிகக் கடினம்.
3258
கூடலை யாற்றூர் மேவுங் கொன்றைவார் சடையி னார்தம்
பீடுயர் கோயில் புக்குப் பெருகிய வார்வம் பொங்க
ஆடகப் பொதுவி லாடு மறைகழல் வணங்கிப் போற்றி
நீடருள் பெற்றுப் போந்து திருமுது குன்றி னேர்ந்தார்.

104

(இ-ள்.) கூடலையாற்றூர்...புக்கு - திருக்கூடலை யாற்றூரில் மேவும் கொன்றை மாலை சூடிய நீண்ட சடையினையுடைய இறைவரது பெருமையினாலுயர்ந்த திருக்கோயிலினுள்ளே புகுந்து; பெருகிய...பொங்க - பெருகி எழும் ஆசையானது மேலும் அதிகரிக்க; ஆடகப் பொதுவில்...போந்து - பொன்னம்பலத்ததில் ஆடுகின்ற சத்திக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளை வணங்கித்துதித்து நீடுகின்ற திருவருள் விடை பெற்றுச் சென்று; திருமுதுகுன்றில் நேர்ந்தார் - திருமுதுகுன்றத்திற் போய்ச் சேர்ந்தனர்.
(வி-ரை.) பீடு உயர் - "பீடி னாலுயர்ந்தோர்களும்" (தேவா); பீடு - பெருமை.
பெருகிய ஆர்வம் பொங்க - முன்னமே பெருகியுள்ள பெருவிருப்பம் மேன்மேலும் அதிகரிக்க.
ஆடகப் பொது - பொன்னம்பலம்; ஆடகம் - பொன் - இங்கு ஞானமயமான சிற்றம்பலம் என்ற பொருளில் வந்தது; புறத்துப் பொன் மேய்ந்து விளங்குகின்றது அதன் புறத்தோற்றமாகிய குறியீடு.
நீடு அருள் - என்றும் நீடுகின்ற திருஅருள் விடை.
நேர்தல் - சென்று சேர்தல்.

104

3259
டநிலைக் கோபு ரத்தைத் தாழ்ந்துமுன் னிறைஞ்சிக் கோயில்
புடைவலங் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து
நடநவில் வாரை "நஞ்சி யிடை"யெனுஞ் செஞ்சொன் மாலைத்
தொடைநிகழ் பதிகம் பாடித் தொழுதுகை சுமந்து நின்று.

105

3260
நாதர்பாற் பொருடாம் வேண்டி நண்ணிய வண்ண மெல்லாங்
கோதறு மனத்துட் கொண்ட குறிப்பொடும் பரவும் போது