112திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

பொற்றுண்டம்; பொன் வினைஞர் அத்துறையில் வழங்கும் மரபுப் பெயர் - வெட்டி - பொற்கட்டியினின்றும் சிறு துண்டம் வெட்டி எடுத்தல் மரபு. இறைவர் தந்தவை பொற்கட்டிகளாக இருந்தன என்பது.
பொன்றிரள் - பொற்றிரள் எனற்பாலது எதுகைநோக்கி இயல்பாய்நின்றது.
புகவிட்டு - புகும்படி இட்டு என்றும், புகும்படி விட்டு என்றும் உரைக்க நின்றது.
போதுகின்றார் - வினைப் பெயர்; போதுகின்றாராகிய நம்பிகள்; போதுகின்றார் - என்று - என்று போந்தார் என மேல் வரும் பாட்டுடன் முடிக்க.
அன்று - முன்னாள்; பண்டறி சுட்டு; திருவெண்ணெய் நல்லூரில் சபைமுன் ஓலைகாட்டித் தடுத்தாட்கொண்ட அன்று என்க;
அருள் இதில் அறிவேன் - அருள் இன்னும் உள்ள தன்மையினை இச்செயல் நிகழ்ச்சியில் தெளிந்துகொள்வேன்.
இதில் - இனி இவ்வாக்கு நிறைவேற அருளும் நிலையினாலே; திருவாக்கின்படி திருவாரூர்க் குளத்தில் இப்பொன்னெல்லாம் தரும் நிலை.
மச்சம்வேண்டி - என்பதும் பாடம்.

108

3264. (வி-ரை.) மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்திபெற்றார் - பெரு விருப்பத்துடன் தொண்டு செய்வதே தமது உடம்பினாலாய பிறவித்தொழிலாகப் பெற்றவர்; மெய்விருத்தி - உடம்பினால் செய்யும் உறுதொழில்; "மாதொரு பாகனார்க்கு வழிவழி யடிமை செய்யும், வேதியர் குலத்துட்டோன்றி" னாராதலின் விருப்புடன் அகம்படித் தொண்டு செய்தல் உறுதொழிலாயிற்று; அதுவேயுமன்றி, அடியானாகத் தடுத்தாட்கொள்ளப் பெற்ற ஞான்று, "அருச்சனைபாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக" என்று இறைவர் ஏவியருளியபடி மெய்த்திருவாக்கின் றொண்டு செய்து சொல்லுதலும் விருத்தியாயிற்று; விருத்தி - தொழில்; சீவனோபாயம் என்பர். இவையேயன்றித் தமக்கு வேறு தொழி லில்லாமையால் அத்தொண்டினை ஏற்றுக்கொள்ளும் இறைவர்க்கு இவரைக் காத்தல் கடனாயிற்று; அதுபற்றியே பொருள் வேண்டிய வேண்டியவாறே வேண்டிய வேண்டிய காலத்தும் இடத்தும் பெறலாயினர் என்ற குறிப்பெல்லாம் கண்டுகொள்க.
ஆவியின் விருத்தி - பிறவிப்பயன் - ஆன்ம லாபம் என்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை; முன்னர் மெய்விருத்தியைக் கூறினார்; இங்கு உயிர்க்குறுதிப் பயன் கூறப்பட்டது. "ஊனாலு முயிராலு முள்ளபயன் கொளநினைந்து" (1421) என்ற கருத்து ஈண்டு வைத்துக் காணற்பாலது; ழுஊனடைந்த உடம் பின் பிறவியே, தானடைந்த உறுதியைச் சாருமால்...தாடொழ" (2) என்பதும், பிறவும் காண்க. ஈண்டு விருத்தி என்றது உறுதிப் பயன் என்ற பொருள் தந்துநின்றது; விருத்தியான - புலியூர் மன்று - என்று கூட்டுக.
மெய்விருத்தி - ஆவியின் விருத்தி - ஆக்கச் சொல் உளதாக்கும் என்ற பொருள் தந்துநின்றது. ஈண்டு, இவ்வாறன்றி, மெய்விருத்தி - மெய்ம்மையான சித்திவிருத்தி என்றும், ஆவியின் விருத்தி - அவி - என்பது ஆவி என முதனீண்டதென்று கொண்டு வேள்விகளை வேட்டலே தமது தொழிலாகக்கொண்ட என அந்தணருடன் கூட்டியும் உரைத்தனர் முன் உரைகாரர்கள்.
கும்பிடுவது - இது நம்பிகள் திருவுள்ளத்துட் கொண்ட துணிபு.
வழிக்கொள்வான் - வழிக்கொள்ளும் பொருட்டு; செல்லும் பொருட்டு.
வணங்கி - திருமுதுகுன்றரை வணங்கி விடைபெற்று.
கும்பிடுவனென்று - என்பதும் பாடம்.

110