114திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

பலவாறும் போற்றுதல் காண்க. மூரி - வலிமை; களிறு - மலைப்படுபொருள்; குறிஞ்சிக் கரு;- (3) கண்டகர்...சீர் - வேள்வி முழக்கு - இவை குறிஞ்சிநில மக்கள் செய்யும் வழிபாட்டு முழக்கு; கண்ணப்ப நாயனார் புராணம் பார்க்க;- (4) விளைப்பு - மேல் விளைவு; அளை - புற்று; பொருள் வேண்டிய உள்ளக் குறிப்பு;- (5) அம்மைச் செய்வதென் உமையாளுக்கோ? - அடியாருக்கும் அதில் பங்குண்டு என்பது குறிப்பு; அடியாரும் நீரும் என்றது அடியாரும் நீருமாகச் சேர்ந்து பாடிப்பெற்றதாதலின் அவர் பங்கு பெறுதற்குரியார் என்பது குறிப்பு; 8-வது பாட்டும் பார்க்க;1 - (6) கோடு - மலைச் சிகரம்; யானை - (பிடி) - ஆளி - குறிஞ்சிக் கரு; முழை - குகை;- (7) ஆளி - சிங்கம்; குறத்தி - குறிஞ்சிநில மக்கள்; கன்றிடும் - ஈனும்; குறத்திகள் முன்றிலிடைப் பிடிகன்றிடும் - பெண்மை இனம் பற்றிப் பெண் யானைகள் குறத்திகள் உள்ள முற்றத்திற் கன்று ஈன அதற்கு அவர்கள் வேண்டும் துணைக்காரியங்கள் செய்குவர் என்பது குறிப்பு. மலைவாணர் யானை முதலிய மிருகஇனங்களுடன் பழகும் நிலையும் குறித்தது; செடிச்சிகள் - இழிந்தோர்; குன்றில் - மலையிடங்கள்; - (8) மந்தி - பெண் குரங்கு; கடுவன் - ஆண் குரங்கு; மந்தி....உண்பழநாடி - விலங்கினத்துள்ளும் காணும் அன்பு நிகழ்ச்சி; உமது மலைவாழும் விலங்கினமும் அன்புச்செயல்கள் செய்தலால், நீர், உமக்கு அடிமைப்பட்ட வாழ்வுடைய எனக்கு ஈந்து அளிப்பது கடன் என்றது குறிப்பு;- (9) செட்டி - வாணிபம் செய்யும் சாதியீரே!; முருகனுக்குச் செட்டி என்று பெயர் வழங்கும் முறை குறித்தது; செட்டி...நிற்பதே - உமது தேவி ஊர்தோறும் அறங்களெல்லாம் செய்யவும் நீர்பிச்சை ஏற்பது தகாது; ஆதலின் "நான் பலி ஏற்பவன்; உனக்குப் பொருள் தருதல் எவ்வாறு?" என்று கூறிக் கழித்தலும் தகாது என்ற குறிப்பு. முட்டி - சார்ந்து;- (10) எத்திசையும்....கொண்மினோ? - எல்லா வுயிர்களிடத்தும் பொது நோக்கால் எழுந்தருளினும் பத்தி செய்வார் பக்கல் சிறப்பு நோக்கால் அருள்புரிதல் வேண்டுமென்பது குறிப்பு; எத்திசையும்....வலஞ் செய்யும் - திருமணி முத்தாறு எல்லாத் திசைகளிலும் திரைகளால் நீரினை வீசிப் புக்குவளம் செய்யினும் திருமுதுகுன்றத்தினிற் சிறப்பாகக் கரைகளின்மேல் முத்தி வலஞ் செய்து வழிபடும் என்பது. உமது ஆறுதானும் இவ்வாறு செய்தால்அதுபோல் நீரும் செய்தல் வேண்டுமென்பதும், ஆதலின் அடியானாகிய என் பக்கம் சிறப்பாக அருள்புரிதல் வேண்டுமென்பதும் குறிப்பு; முத்தி - மெதுவாக ஒத்தி வருடுதல்;- (11) பித்தனொப்பான்.... பிதற்றிவை - மனக் கருத்தினைப் புலப்படுத்தாது வேறு வகையாற் கூறுதலின் பித்தன் - பிதற்று என்றார்; பித்தனொப்பான் - அடிமைத் திறத்தினிற் பித்துக்கொண்டவன்; தத்துவ ஞானிகள்....தடுமாற்றிலர் - ஞானிகள் இதன் உட்பொருள் காணுதலில் மயங்கிலர்; எத்தவத்தோர் - ஏனையோர்.
II திருமுதுகுன்றம்
திருச்சிற்றம்பலம் ("நம்பி" என்ற திருப்பதிகம்) பண் - தக்கேசி
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி வேதநான் கும்விரித் தோதியோர்நம்பி
கையிலோர் வெண்மழு வேந்தியோர் நம்பி கண்ணு மூன்றுமுடை யாயொருநம்பி
செய்ய நம்பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பியென்னை யாளுடை நம்பி யெழுபிறப்பு மெங்க ணம்பிகண்டாயே.

(1)

கரத்தி நம்பி கசியாதவர் தம்மைக் கசிந்த வர்க்கிம்மையோ டம்மையி லின்பம்
பெருக்கு நம்பி பெருகக் கருத்தா

(10)

திருச்சிற்றம்பலம்


இஃது இந்நாள் தொழிலாள ரியக்கக் கருத்தின் முளைபோலும்!