116திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

3266
பொற்றிரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவா யோங்கும்
நற்றிரு வாயி னண்ணி நறைமலி யலங்கன் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல் வணங்கியுட் புகுந்து பைம்பொற்
சுற்றுமா ளிகைசூழ் வந்து தொழுதுகை தலைமேற்கொள்வார்.

112

3267
டிய திருமுன் பான வம்பொனின் கோபு ரத்தின்
ஊடுபுக் கிறைஞ்சி யோங்கு மொளிவளர் கனக மன்றில்
நாடகச் செய்ய தாளை நண்ணுற வுண்ணி றைந்து
நீடுமா னந்த வெள்ளக் கண்கணீர் நிரந்து பாய,

113

3268
ரவுவாய் குளறிக் காதல் படிதிருப் படியைத் தாழ்ந்து
விரவுமெய் யங்க மைந்து மெட்டினும் வணங்கி வேட்கை
யுரனுறு திருக்கூத் துள்ள மார்தரப் பெருகி நெஞ்சிற்
கரவிலா தவரைக் கண்ட நிறைவுதங் கருத்திற் கொள்ள,

114

வேறு

3269
"மடித்தாடுமடிமைக்க"னென்றெடுத்துமன்னுயிர்கட்கருளுமாற்றால்
அடுத்தாற்று நன்னெறிக்க ணின்றார்கள் வழுவிநரகணையாவண்ணம்
தடுப்பானைப் பேரூரிற் கண்டநிலை சிறப்பித்துத் "தனிக்கூத்தென்றும்
நடிப்பானை நாமனமே பெற்றவா" றெனுங்களிப்பா னயந்து பாடி,

115

3270
மீளாத வருள்பெற்றுப் புறம் போந்து திருவீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன்றொண்ட ரந்தணர்க டாம்போற்ற வமர்ந்து வைகி,
மாளாத பேரன்பாற் பொற்பதியை வணங்கிப்போய், மறலி வீழத்
தாளாண்மை கொண்டவர் தங்கருப்பறியலூர்வணங்கிச்சென்றுசார்ந்தார்.

116

3266. (இ-ள்.) நறைமலி அலங்கல் மார்பர் - தேன் மிகும் மாலை தாங்கிய மார்புடைய நம்பிகள்; பொற்றிரு...நண்ணி - அழகிய திருவீதியினை வணங்கிப் புண்ணியத்தின் விளைவாகி ஓங்கி விளங்குகின்ற நல்ல திருவாயிலினைச் சேர்ந்து; மற்றதன்...வணங்கி - அதன் முன்பு நிலமுற விழுந்து வணங்கி; உட்புகுந்து - உள்ளே புகுந்து; பைம்பொன்...கொள்வார் - பசும்பொன் வேய்ந்த இடங்களையுடைய சுற்றுத் திருமாளிகையினைச் சூழ்ந்து வலம் வந்து தொழுது கைகளைத் தலைமேற்கொள்வாராகி,

112

3267. (இ-ள்.) ஆடிய...இறைஞ்சி - ஆனந்தக் கூத்தர்ஆடும் திருமுன்பாகிய அழகிய பொற்கோபுரத்தின் வழியே உட்சென்று வணங்கி; ஓங்கும்...நண்ணுற - பெருகும் ஒளிவளர்கின்ற பொன்னம்பலத்தில் ஆடுகின்ற சேவடியைச் சார; உள்நிறைந்து...பாய - உள்ளே நிறைந்து நீடுகின்ற ஆனந்த வெள்ளமாகிய கண்ணீர் இரு கண்களினின்றும் விடாது பொழிய,

113

3268. (இ-ள்.) பரவுவாய் குழறி - துதிக்கின்ற வாய் தழுதழுத்துக்குழறி; காதல்.....தாழ்ந்து - பெரு விருப்பம் படியும் திருக்களிற்றுப்படியினை வணங்கி; விரவும்...வணங்கி - மெய் பொருந்திய ஐந்தங்கம் எட்டங்கம் என்ற முறையில் வணங்கி; வேட்கை...பெருகி - பெருகியஆசை வலுப்படத் திருநடனம் மெய்யுணர்வினுள்ளே