| |
| ஒளிவளர் கனகமன்று - ஒளியாகிய இறைவர் வளர்ந்தாடும் பொன்னம்பலம்; "ஓங்குமொளி வெளியேநின் றுலகுதொழ நடமாடும்" (கோயிற் புராணம்.) |
| நாடகச் செய்ய தாள் - ஆடும் சேவடி; எடுத்த திருவடி. |
| நண்ணுற - அணுகச் செல்ல. |
| இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| உள் நிறைந்து....பாய - உள்நிறைந்து பாய - உள்ளே நிறைந்தமையால் மேல் பொங்கி வழிய; வெள்ள - நீர் என்க; நிரந்து - வரிசைப்பட இடையறாது பரவி. பாய்தல் - வழிதல். |
| அம்பொனீள் கோபுரம் - என்பதும் பாடம். |
| 113 |
| 3268. (வி-ரை.) பரவுவாய் குழறி - பரவுகின்ற திருவாய் அவ்வாறு செய்ய இயலாது குழறித் தழுதழுத்து. |
| காதல்படி திருப்படி - திருக்களிற்றுப் படி; 251ம் பாட்டின் கீழ் இதுபற்றி உரைத்தவை பார்க்க. மி- பக். 295. காதல்படி - பேரன்பு அழுந்தும்; படிதல் - பொருந்திக் கிடத்தல். |
| அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி - ஐந்து அங்கம் நிலமுற வணங்குதலும், எட்டு அங்கம் நிலமுற விழுந்து வணங்குதலும் செய்து; இவை முறையே பஞ்சாங்க அட்டாங்க நமக்காரம் எனப்படுவன; இவற்றின் விரிவு முன்னர் உரைக்கப்பட்டது. |
| வேட்கை உரனுறு - பேரன்பின் வலிமை பொருந்திக் கிடந்த; உரன் - திண்மை - அறிவு, "உரனென்னுந் தோட்டியான்" (குறள் - பரி. உரை.) |
| நெஞ்சிற் கரவிலாதவர் - ஒருசிறிதும் ஒளிக்காமல் தமது முழு ஆனந்தத்தினையும் உள்ளே நிறைய வெளிப்பட நின்றவர்; "கரவார்பால் விரவாடும் பெருமான்" (தேவா). வேட்கை - பெருகி என இயையும். |
| கரவிலாதவரைக் கண்ட நிறைவு - "தில்லை மன்றுணின் றாட னீடிய கோல"த்தை நேர்காணத் திருப்பேரூரில் கண்ட மெய்யுணர்வினுள் நிறைந்த காட்சி அங்குக் கண்ட காட்சியினையே இங்கும் முழுமையும் காணும் நிலை. |
| கருத்திற் கொள்ளுதல் - மனத்தினுள் நிறைந்து கிடக்கப் பெறுதல். |
| அரனுறு - என்பதும் பாடம். |
| 114 |
| 3269. (வி-ரை.) மடித்தாடும் அடிமைக்கண் - இது பதிகத்தொடக்கமாகிய முதற்குறிப்பு; பதிகம் பார்க்க. |
| மன்னுயிர்கட்கு...தடுப்பானை - உயிர்களுக்கு அருள்புரியும் வகையாலே - தடுப்பான் என்று கூட்டுக. |
| அடுத்தாற்றும் நன்னெறிக் கண் நின்றார்கள் - முன்னை வினையின் வழித்தோன்றி அவ்வினைப் பயனை அனுபவித்துக் கழிக்கும் வகையாலே அவ்விதிவழி அறநெறியில் நிற்பவர்கள்; வழுவி - அந்நெறியினின்றும் விலகி - தவிர்ந்து; நரகணையா வண்ணம் - வழுவியதன் காரணமாக நரக லோகம் செல்லும் வழிபோகாதபடி; தடுப்பான் - தடுத்தாட் கொள்பவர்; நம்பிகள் தமது சுயசரித நிலைபற்றி எண்ணித் திருவருளைப் போற்றியகுறிப்பும் கண்டுகொள்க; தமக்குச் செய்த பேர்அருள்கள் எல்லாவற்றிலும் இதுவொன்றே மிகச் சிறந்தது என்பது நம்பிகள் திருவுள்ளத்தினுள் ஊன்றிக் கிடந்த தென்க. |
| நின்றாலும் வழுவினர்கள் என்ற பாடமுமுண்டு. அப்பாடத்துக்கு, அறத்தின் நன்னெறியிலே நிற்பினும் பிறவியில் வந்த வினைப்பயன் துய்ப்பதனோடுஅமையாது புதிது புதிது வினைகளைத் தேடிக்கொள்ளும் வகையால் வழுவியவர்கள் என்றுரைத்துக்கொள்க; இப்பொருட்கு நன்னெறிக்கண் நின்றாலும் என்றதற்கு உலக |