| |
| விதிப்படி நல்லநெறி சென்றாலும், என்றுரைத்து, நன்னெறி - உலகியல் நெறியாகிய இல்லற முதலிய நிலைகள் என்று கொள்க; ஈண்டு நம்பிகள் புத்தூரில் முயன்ற திருமணம் உலகியலில் நன்னெறியே யன்றித் தீநெறி எனப்படா நிலையும் காண்க; ஆயினும் உயிர், மேலும் பிறவியில் விழுந்துவிடாது ஈடேறும் வகையால் முன்னர் வேண்டிய வரத்தின்படி அது வழுவேயாகி முடிந்து, தடுக்கப்பட நின்ற இயையும் கண்டுகொள்க. தடுப்பானை - தடுத்தாட் கொள்ளும் இறைவரை. |
| பேரூரிற் கண்டநிலை சிறப்பித்து - பதிகம் இறுதிப் பாட்டிற் "பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றாம்" என்பதனை ஆசிரியர் காட்டியருளியபடி. |
| தனிக்கூத்து என்றும் நடிப்பானை - புலியூர்ச் சிற்றம்பலத்தே கண்ட காட்சி. |
| பெற்றவாறு - காணப்பெற்ற பேற்றின் அருமைப்பாடுதான் என்னே! என வியந்தது; "பெற்றாமன்றே" என்ற பதிக மகுடத்தின் பொருள் விரித்துக்காட்டியபடி; களிப்பு - பேரானந்த விளைவு; பெறுதற்கரிய பொருள் பெற்றபோது விளையும் உள்ள நிகழ்ச்சி; நயப்பு - விருப்பம். |
| 115 |
| 3270. (வி-ரை.) மீளாத அருள் - பிரியா விடை; மீளாத - அங்கு நின்று பிரிய முடியாத; திருவீதி - "மாதவங்கள் நல்குந் திருவீதி நான்கும்"; கூத்தப்பிரான் திருத்தேரில் எழுந்தருளும் மாடவீதி. |
| அந்தணர்கள் - தில்லைவாழுந்தணர்கள்; அந்தணர்கள் தாம் போற்ற - "பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே" என்ற திருப்பதிகத்தைக் கேட்ட அந்தணர்கள், நம்பிகளை நோக்கித் தில்லைபோல வேறு ஒரு தலமும் உலகில் இலையாயிருப்பவும் பேரூரினை இங்குச் சிறப்பித்த தென்னை? எனவினவ, நம்பிகள் தில்லையம்பலத்திற் போலவே பேரூரில் அரசம்பலத்திலும் கூத்தப்பெருமான் எப்போதும் ஆனந்த நடனம் புரிந்தருளுவர் என்றுரைக்க, அது கேட்டு, அவ்வந்தணர்கள் அங்குச் சென்று அவ்வாறே கண்டு, அழகிய திருச்சிற்றம்பலம் என்றொரு தலத்தையும் தாபித்து வணங்கி மீண்டுவந்தனர் என்பது பேரூர்ப்புராணம்; வன்றொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற என்பது அக்குறிப்புத் தருவது; வன்றொண்டர் என்ற பேரூர்ப் புராணமும் கருதுக. |
| ஆரூரர் பேரூரை யணைந்திறைஞ்சிப் போய்த்தில்லை நீரூருஞ் சடையாரை நேர்வழுத்தும் பதிகத்திற் "பேரூரர் பெருமானைப் பெற்றா"மென் றிசைத்தமிழ் சீரூருந் தில்லைவா ழந்தணர்தஞ் செவிக்கேட்டார். | |
| (1) |
| தம்பிரான் றோழரவர் தமைநோக்கி வினவுவார் "எம்பிரா னமர்தில்லை யித்தலம்போ லொருதலமும் உம்பரார் தொழுமுலகி லுயர்ந்திருப்ப திலையன்றே! நம்பிபே ரூர்ச்சிறப்ப நயந்தெடுத்த தென்?" னென்றார் | |
| (2) |
| மாண்டகுணத் தந்தணர்கள் வினவுதலும் வன்றொண்டர் நீண்டமகிழ் வினராகி நிலைமைவர்க் கருள்செய்வார் "ஈண்டுநடம் புரிவதுபோ லெம்பிரான் போதிவனத் தாண்டுமன வரதமுநல் லானந்த நடம்புரியும்" | |
| (3) |
| பேரூர்ப்புராணம் - அழகிய திருச்சிற்றம்பலப் படலம் |
| பதியை வணங்கிப் போய் - பதியினை விட்டுப் புறப்படும்போது நகர் எல்லையில் பதியை வணங்கிச் செல்லுதல் சிறந்த மரபு. |