|
  |  |  | 
|  | (10) மீகொங்கு - மேல் கொங்கு நாடு. கொங்கு நாடு, மேற்கு - வடக்கு - கிழக்கு என்று மூன்று   பெரும் பிரிவுகளை உடையது; காஞ்சி - நதி; அணி என்ற அடைமொழி என்றும் வற்றாத அதன் நீர்ச்   சிறப்பினால் வரும் வளம் குறித்தது; பேரூர் - திருப்பேரூர்; பேரூரர்....பெற்றாம் - இதனை   ஆசிரியர் (3269) விரித்தமை காண்க; "பேரூரிற் கண்ட நிலை" | 
|  | தலவிசேடம்:- கோயில் - (சிதம்பரம்) முன் உரைக்கப்பட்டது. | 
|  | வேறு | 
| 3271 |                       | கூற்றுதைத்தார் திருக்கொகுடிக் கோயி னண்ணிக் கோபுரத்தைத் தொழுதுபுகுந் தன்பர் சூழ
 ஏற்றபெருங் காதலினா லிறைஞ்சி யேத்தி
 யெல்லையிலாப் பெருமகிழ்ச்சி மனத்தி லெய்தப்
 போற்றிசைத்துப் புறத்தணைந்தப் பதியில் வைகிப்
 புனிதரவர் தமைநினையு மின்பங் கூறிச்
 சாற்றியமெய்த் திருப்பதிகஞ் "சிம்மாந்" தென்னுந்
 தமிழ்மாலை புனைந்தங்குச் சாரு நாளில்,
 |  | 
|  | 117 | 
| 3272 |                       | கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக் கைதொழுது நீங்கிப்போய்க் கயல்கள் பாயும்
 மண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு
 மாதொருபா கத்தவர் தாள் வணங்கிப் போற்றி
 எண்ணில்புகழ்ப் பதிகமு"முன் னவ"னென் றேத்தி
 யேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது
 புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு
 புகுகின்றார் "தலைக்கல"னென் றெடுத்துப் போற்றி;
 |  | 
|  | 118 | 
| 3273 |                       | திருப்பதிகம் பாடியே சென்றங் கெய்தித் தேவர்பெரு மானார்தங் கோயில் வாயில்
 உருப்பொலியு மயிர்ப்புளகம் விரவித் தாழ்ந்தே
 யுள்ளணைந்து பணிந்தேத்தி யுருகு மன்பாற்
 பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லானைப்
 போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப் பூமென்
 கருப்புவயல் வாழ்கொளிபுத் தூரை நீங்கிக்
 கானாட்டு முள்ளூரிற் கலந்த போது,
 |  | 
  |  | 119 | 
  | 3274 |                       | கானாட்டு முள்ளூரைச் சாரும் போது கண்ணுதலர ரெதிர் காட்சி கொடுப்பக் கண்டு
 "தூநாண்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய
 துணைப்பாத மலர்கண்டு தொழுதே"னென்று
 |  |