| |
| எண்ணில் புகழ்ப் பதிகம் - பதிகத்தின் சிறப்புணர்த்தியபடி; பதிகக்குறிப்பும் பாட்டுக் குறிப்பும் பார்க்க. |
| முன்னவன் - பதிக முதற் குறிப்பாகிய தொடக்கம். |
| வாழ்கொளிபுத்தூர் எய்தாது...போம்பொழுது - நினைந்து மீண்டு புகுகின்றார் - திருக்கருப்பறியலூரினின்றும் மேற்கு நோக்கிப் பழ மண்ணிப் படிக்கரை செல்கின்ற நம்பிகள் இடையில் உள்ள திருவாழ்கொளிபுத்துரினைச் சேர்ந்து வழிபட்டுச் செல்லுதல் மரபும் கடமையு மாதலின்; அவ்வாறு அதிற் சேராது செல்லும் போது நினைவுகொண்டு மீண்டுவந்து சேர்கின்றார். "வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்தென்னினைக்கேனே" என்ற பதிகத்தின் மகுடம் இதன் அகச்சான்றாகும். இவ்வாறே "நீடூர் பணியா விடலாமே" (நம்பி) என்று நினைந்து மீண்டு போந்து திருநீடூரினை வந்து வழிபட்ட வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது. |
| புகுகின்றார் - முற்றெச்சம்; புகுகின்றார் - போற்றி - எய்தி என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துரைத்துக் கொள்க. |
| தலைக்கலன் - பதிக முதற் குறிப்பு; எடுத்து - தொடங்கி. |
| போற்றி - துதித்தவாறே; "பாடியே" என்று மேற்கூறுதல் காண்க. இப்பதிகம் தலத்தைச் சாருமுன் வழியில் அருளியது; பதிகக் குறிப்பும் பதிக மகுடமும் பார்க்க. |
| புண்ணியனார் - சிவபுண்ணிய விளைவாயுள்ளவர். "முடிவிலாத சிவபோக முதிர்ந்து முறுகி விளைந்ததால்" (வெள். சருக்.2) |
| 118 |
| திருப்பழமண்ணிப்படிக்கரை |
| திருச்சிற்றம்பலம் | பண் - நட்டராகம் |
| முன்னவ னெங்கள் பிரான் முதல் காண்பரி தாயபிரான் சென்னியி லெங்கள் பிரான் றிரு நீல மிடற்றெம்பிரான் மன்னிய வெங்கள் பிரான் மறை நான்குங்கல் லானிழற்கீழ்ப் பன்னிய வெங்கள்பிரான் பழ மண்ணிப் படிக்கரையே. | |
| (1) |
| பல்லுயிர் வாழுந் தெண்ணீர்ப் பழ மண்ணிப் படிக்கரையை அல்லியந் தாமரைத்தா ராரூர னுரைத்ததமிழ் சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்கு குந்தமர்க்குங் கிளைக்கும் எல்லியு நண்பகலுமிடர் கூருத லில்லை யன்றே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- இறைவனது இடம் பழமண்ணிப்படிக்கரையே; இறைவரது தன்மைகள் இவையிவை; அன்புடையீர்! அவரை அடைந்து வழிபடுமின்! என்றது. இறைவர் புகழ்களைக் கூறுதல்பற்றி இதனை "எண்ணில் புகழ்ப் பதிகம்" என்றார். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முன்னவன் - "முன்னைப் பழம்பொருட்குமுன்னைப் பழம்பொருள்" (திருவா); "முளைத்தானை எல்லார்க்கு முன்னேதோன்றி" (தேவா); முதல் - அடியும் முடியும் ஆகிய மூலம்; அளவிலாற்றலுடைமை - பேரருளுடைமை முதலிய இறைமைக் குணங்கள் கூறப்பட்டன; எங்கள் பிரானதுஇடம் என்க. இடம் என்பது சொல்லெச்சம்; ஆறனுருபு விரிக்க; திருநீலமிடற்றெம் பிரான் - தலச்சுவாமிபேர்;- (2) அண்டம் கபாலம் சென்னி - அண்டமுகட்டுக்கப்பாலும் நீண்ட சென்னியை யுடையவன்; தொண்டு - தொண்டர்கள்; ஏத்தி - ஏத்தப் பெறுபவன்; சென்னியானும், ஏத்தப்படுபவனும், ஆகிய இறைவர் நின்றாடும் இடம்; |