[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்127

சென்னி - ஏத்தி என்பன பெயர்கள் "விடையேறி" "பிறை சூடி" எனபுழிப்போல;- (3) இப்பாட்டு அடியார்களை நோக்கி அன்பு செய்யும் திறங்களைக் கூறியது. உமரோடெமர் - "உம்மன்பினோ டெம்மன்புசெய் தீசன்னுறைகோயில்" (தேவா); "கொண்டுங் கொடுத்துங் குடிகுடியீசற் காட்செய்மின் குழாம்புகுந்து" (திருப்பல்லாண்டு) வாடுமிவ் வாழ்க்கைதன்னை - வாழ்க்கை - உலக வாழ்க்கைப் பற்றுக்கள்; வாடுதல் - வெறுத்தல்; "தொண்டர்காள் தூசிசெல்லீர்; பத்தர்காள் சூழப்போகீர்" (திருவா - படையாட்சி 2);- (4) அடுதல் - சங்கரித்தல்; கெடுதல் - கேடுறும் வகை; நடுதல் - ஊன்றுதல்; வலித்து அழுத்துதல்; கோல் - அம்பு; நரி கான்றிட்ட - நரி நிணத்தை உண்டு கழித்த; படுதலை - இறந்தார் தலையோடு; மண்டை ஓடு; புரிந்தான் - நினைந்து நீங்காது எடுத்தான்;- (5) அலையார் கதிர் - அலைபோல வீசும் ஒளி;-(7) படுத்தவன் - பொருட்படுத்தி அருளீந்தவன்; - (8) அட்டபுட்பம் - புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்பவற்றின் பூக்கள்; இவை புலரி முதலிய காலங்களில் வேறுபடும். புட்பவிதி பார்க்க; அப்பூசையில் கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு என்னும் இவை அட்ட புட்பமாக இதய கமலத்தில் அஞ்செழுத்தானமைந்த இறைவரது ஞானத்திருமேனியிற் சாத்தல் வேண்டு மென்பது விதி; (போதம் - மாபாடியம் - 9-3); பரியவன் - பெரியவன்;- (9) பற்றர் - இப்பதியினைஇடமாகப்பற்றி வாழ்பவர்;- (10) பல்லுயிர் வாழும் தெண்ணீர் - வாழும் - உயிர் வருக்கங்கள் அனைத்தையும் செழிக்கச் செய்யும் வாழ்விக்கும் - என்று பிற வினைப்பொருள் கொள்க; இனி, இங்கு இவ்வாற்றின் மடுக்களில் முதலைகள் முதலிய பல உயிர்களும் வாழ்தலும் குறிப்பு; அல்லி - அகவிதழ்; தாமரைத் தார் - அந்தணர்களுக்குரியது; சொல்லுதல்... கிளைக்கும் - எல்லியும் நண்பகலும் - எல்லாருக்கும் எல்லாக் காலத்தும்; கூருதல் மிகுதல்.
தலவிசேடம் :- திருப்பழமண்ணிப்படிக்கரை - சோழநாட்டில் காவிரி வடகரை 30-வது பதி; இலுப்பைப் பட்டு என்று வழங்கப்படுகின்றது; இறைவர்விட முண்டபோது அம்மையார் அஃது உட்செல்லாதுறக் கையினாற்றடுத்துக் கழுத்தளவில் நிறுத்தியதால் திருநீலகண்டங் காட்டினார் என்பது தலவரலாறு; சுவாமி அம்மை பெயர்கள் காண்க; "திருநீலமிடற்றெம்பிரான்" என்ற சுவாமி பெயர் பதிகத்துட் போற்றப்படுதல் (1) காண்க; பாண்டவர்கள் வழிபட்ட ஐந்து இலிங்கங்கள் உண்டு; பதிகம் 1. சுவாமி - திருநீலகண்டர்; அம்மை - அமிர்தகரவல்லி.
இது வைத்தீசுவரன் கோயில் நிலயத்தினின்றும் மேற்கில் மட்சாலை வழி 6 நாழிகையில் அடையத்தக்கது; இடையில் 1 1/2 நாழிகையில் திருப்புன்கூரையும், அங்கு நின்று மேற்கே 2 நாழிகையில் மண்ணிப் பள்ளத்தையும், அங்கு நின்றும் மேற்கே 11/2 நாழிகையில் திருவாழ்கொளிபுத்தூரையும் (வாளொளிபுத்தூர் - வாளப் புற்றூர் என வழங்கும்) அடைந்து, அங்கு நின்றும் மேற்கே 1 நாழிகையில் அடையத்தக்கது.
திருவாழ்கொளிபுத்தூர்
திருச்சிற்றம்பலம்

பண் - தக்கேசி

தலைக்க லன்றலை மேற்றரித் தானைத் தன்னையென் னைநினைக் கத்தரு
வானைக்
கொலைக்கை யானையுரி போர்த்துகந் தானைக் கூற்றுதைத்தகுரை சேர்கழ
லானை
அலைத்த செங்கண்விடை யேறவல் லானை யாணை யாலடி யேனடி நாயேன்
லைத்தசெந்நெல்வயல்வாழ்கொளிபுத்தூர்மாணிக்கத்தைமறந்தென்னினைக்
கேனே.