| |
| காண்க; விண்டு பூசித்ததும், அருச்சுனன் பூசித்ததும் ஆகிய குறிப்புக்களும் பதிகத்துட் காணப் பெறுவன. அருச்சுனன் வாளினைப் புற்றில் ஒளித்தமையால் வாளொளி புற்றூர் என்று தலப் பெயர் வழங்குவதாமென்பதும் வரலாறு. பழ மண்ணிப்படிக்கரை நோக்கிச் செல்கின்ற நம்பிகள் வழிநடையில் உள்ள இப்பதியினை அடையாது போம்பொழுது திருவருளினால் நினைந்து மீண்டுவந்து வழிபட்ட பெருமையுடையது (3272). சுவாமி மாணிக்கவண்ணர்; அம்மை - வண்டமர் பூங்குழலி; பதிகம் 2. |
| இது திருப்புன்கூரினின்றும் மண்ணிப் பள்ளத்தை யடைந்து அங்கிருந்து மேற்கே மட்சாலையில் 11/2 நாழிகையில் உள்ளது; பழமண்ணிப்படிக்கரைக்குச் சொல்லியவை பார்க்க. |
| குறிப்பு :- நம்பிகள் பதிகம் 12 திருப்பாட்டுக்களைக் கொண்ட சிறப்புடையது. |
| 3273. (வி-ரை.) பாடியே - பாடிக்கொண்டபடியே. |
| உருப்பொலியும் - திருமேனி முழுதும் மேல் விளங்கும். இஃது இறைவர் நினைப்பித்தருள மீண்டுவந்து வழிபட்ட அருளிப் பாட்டின் நினைவினால் ஆகியது. |
| மயிர்ப்புளகம் விரவி - மயிர்க்கூச்செறிதல் பொருந்தி. |
| பூமென் கருப்பு வயல் - பூத்தபின் பயன்படும் ஒருவகை மெல்லிய கரும்பு. |
| கலந்த - அருகில் அணைந்த. |
| 119 |
| 3274. (வி-ரை.) சாரும்போது - புறநகரினைச் சார்ந்தபோது; முன்பாட்டில் கலந்த என்றது அணுக வந்த என்றதாம். |
| எதிர் காட்சி - நகரினுள்ளே செல்லு முன்னே புறநகரில் எதிர் தோன்றிக் காணக் காட்டும் காட்சி; திருக்கழுமலம், திருப்பனையூர் முதலிய பதிகளின் வழிபாட்டு வரலாறுகள் ஈண்டு நினைவுகூர்தற் பாலன. |
| "தூநாண்மென்....தொழுதேன்" என்று - இது பதிகக் கருத்தாகிய குறிப்பு; பதிக மகுடம் காண்க. |
| "வள்வாய்" என்னும் - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. |
| வண்டமிழின் தொடைமாலை மலரச்சாத்தி - பதிகத் திருப்பாட்டுக்களின் சொல் - பொருள் - இசை - அருள் - வளங்கள் குறிக்க வண்மை யுடைய என்றார்; தொடைமாலை - ஒவ்வொரு திருப்பாட்டும் தொடை எனப்படும்; மாலை - அவையனைத்தும் சேர்ந்த நிலை; மலர- விளங்க; சாத்தி - தொடை மாலை என்றதற்கேற்பச் சாத்தி என்றார்; உயர்ந்த தமிழ் இலக்கியப் பண்புகள் இப்பதிகத்துட் காணப்படும். |
| துணைப்பாதம் - இரண்டு பாதங்கள்; "உற்றா ரிலாதார்க் குறுதுணையா"கும் பாதம் என்ற குறிப்புமாம். |
| வானாளும் திருப்பதிகம் - வானவர்தங்கோனை, உலகம் விழுங்கி யுமிழ்ந்தானை நான்முகத்தினானை, உலகந்தானாய், பூதங்களைந்தாய் எண்குணத்தினானை, நாளை, யின்று, நெருநலாய், தேவர்கள் சூளாமணியை, விண்ணவர்தங்கோனை, அமரர்கடம் பெருமானை, பலவுருவந் தன்னுருவே யாய பெருமானை, மேவியவெந்நரகத்தி லழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேதமுதலானை, - என்றிவ்வாறு பலவும் இறைவரது முழுமுதற்றன்மைகளையும், தேவர் பெருமானாந் தன்மைகளையும் கூறிய நிலைகுறிக்க வானாளும் ‘வானவர்களை ஆட்கொண்டு செலுத்தும்ழு என்றார். திருக்கடைக்காப்பில் "வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர்தாமே" என்று பதிகப்பயன் கூறியருளியதும் குறிப்பு; வானாளும் - பயின்றாரை வானாளவைக்கும். |
| 120 |