130திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

திருக்கானாட்டுமுள்ளூர்
திருச்சிற்றம்பலம்

பண் - கொல்லிக் கௌவாணம்

வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை மறையவனை
   வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கி யுமிழ்ந் தானைப்
   பொன்னிறத்தின் முப்புரிநூ னான்முகத்தி னானை
முள்வாய மடறழுவி முடத்தாழை யீன்று
   மொட்டலர்ந்து விரைநாறு முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
   கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

(1)

திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
   செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானை
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
   கானாட்டு முள்ளூரிற் கண்டுகழ றொழுது
உரையினார் மதயானை நாவலா ரூர
   னுரிமையா லுரைசெய்த வொண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞால மாண்டவர்க்குந் தாம்போய்
   வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வள்வாய் - வளைந்த வாயினையுடைய; வள் - பகுதி; வள்வாயமதி - இஃது அருமையானதமிழாட்சி; மறையவனை வாய்மொழியை - மறை அவன் வாய்மொழி என்பது; புள்வாயை... உமிழ்ந்தான் - கண்ணன்; விட்டுணு; பொன்னிறத்தின்...முகத்தினானை - பிரமனாகி நின்ற சிவன்; தேவர்களை இயக்குபவர்; பிள்ளையாரது சிவபுரத் தேவாரம் காண்க. "அரியாகிக் காப்பான்அயனாய்ப் படைப்பான், அரனா யழிப்ப வனுந் தானே" (ஞான உலா). முள்வாயமடல் - ஓரங்களில் முட்களையுடைய மடல்; தழுவுதல் - மூடுதல்; முடத்தாழை - தாழை மரங்கள் நேராய் வளராது முடங்கி வளரும் இயல்பு குறித்தது; ஈன்று - பூத்து; கண்வளரும் - இதழ்கள் குவிந்த நிலை; கண்போல வளர்கின்ற என்றும் இரட்டுற மொழிந்துகொள்க; துயிலும் என்ற குறிப்புமாம். கண்டு தொழுதேனே - இறைவர் எதிர் காட்சி கொடுப்பக் கண்ட தன்மை; சரித அகச்சான்று (3274); கானாட்டு முள்ளூரில் ஊரைச் சாரும்போது;- (2) ஒரு -ஒப்பற்ற; ஒருமேக...புனைந்தவனை - இறைவர் எல்லாமாய் நின்ற தன்மை; "அவையே - யாய்" (போதம். 2. சூத்); பொரு - அலைகள் பொருந் தன்மை; பொரு - பொருதல்; ஈண்டு அலைகள் மோதி அலைத்தல் பொருதல் எனப்பட்டது; திருமேவு செல்வம் திரு - அருட்டிரு; அருளாகிய செல்வம்; கருமேதி...மேவும் - எருமைகள் மடுக்களில் தாமரைப் பூக்களை மேய்தல் அவற்றின் உயர் பண்பு குறித்தது (1273);- (3) எண் குணத்தினான் - "எண்குணத்தான்" (குறள்); சைவாகமங்களுட் கூறப்பட்ட தென்பர் பரிமேலழகர். சுரும்புயர்ந்த கொன்றை - தேனின் பொருட்டுக் கொன்றைப் பூக்களை வண்டுகள் மிக மொய்த்துச் சூழும்; அரும்புயர்ந்த - தாமரை அரும்புகள் நீரினிற் படர் கொடிகளின் மேலே தண்டு நீண்டு உயரும் தன்மை; அரவிந்த...விளையாடும் - "சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலி கதிர்வீச, வீற்றிருந்த வன்னங்காள்" (பிள். தேவா. தோணி - பழந்தக்க -