| 
			
			| | [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]  29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 131 | 
 
 |   |   |
 |  |  |  |  | 6) "செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு மிலைக்குடைக்கீழ்ச் செய்வார் செந்நெல்,   வெறிகதிர்ச்சா மரையிரட்ட விளவன்னம் வீற்றிருக்கு மிழலை யாமே" (1 - 9 - மேகரா - மிழலை.   2) கரும்புயர்ந்து....விளை - தன்மையணி; கரும்பு உயர விளைதல் - நெல் நெருங்கி   விளைதல்; செழிப்பும் பயன் மிகுதியும் காட்டுவன - கரும்பு போல உயர்ந்து நெல்விளை என்றுரைத்தலுமாம்;   கரும்பும் நெல்லும் பக்கம் பக்கம் விளைக்கும் பயிர்கள் என்பது சேர்த்துக் கூறிய கருத்து;   "கரும்பல்ல நெல்லென்ன" (65); - (4) பூளை - சிவபெருமானுக்குச் சாத்தும் பூக்களுள்   ஒன்று; புனலாகி....ஐந்தாய் - புவனமாய் நின்ற தன்மை; புனல் முதலிய பூதங்கள் ஐந்து   என்றபடி; நாளை - யின்று - நெருநலாய் - காலங்களாய் நின்ற தன்மை, நெருநல்   - நேற்றைப்பொழுது - எதிர் - நிகழ்வு - இறந்த காலங்கள்; ஆகாச...மதி - அட்ட மூர்த்தக்   குறிப்பு; நின்ற - நின்ற திருத்தாண்டகம் பார்க்க; பரன் - அப்பாற்பட்டவன்;   அவையேயாய் நின்ற தன்றி வேறாயும், உடனாயும் நிற்கும் தன்மை; சூழல் - நெருங்கிச்சூழ்வன;  காளைவண்டு - இளவண்டு; ஆண்வண்டு என்றலுமாம்; பாட - ஆலும் - பாட்டுக்கேற்ப   அசையும் என்ற குறிப்புமாம்;- (5) செருக்கு வாய் - இடை நுழைக்கும் பற்களையுடைய   வாய்; கோபமுடைய என்றலுமாம்; சூளாமணி - தலையணி; முருக்கு வாய்மலர் - முருக்கமரத்தின்   செம்மலர்; ஒக்கும் - செந்நிற ஒற்றுமை; முன்னிலை - "மன்னு சிவன் சந்நிதியில்   மற்றுலகஞ் சேட்டித்தது" (போதம் - 5) என்றபடி தனது சந்நிதிக்கண் உலகத்தைச் சேட்டிப் பித்தற்குரிய   இயைபு; உலக வியல்கள் தம்மைத் தாக்காது சாட்சி மாத்திரையாய் நிற்றல்; "இரவிபோல் நிற்குமரன்"   (போதம் 5); "என்று மறையி னியல்" என்று கூறிய மறையின் கருத்து; இது தமிழ்மறை; இருக்கு   - வேதம்; வாய் - பயிலுதல்; எழுபிறப்புள் - ஏழு சுரங்களிலும்; நிதியம்   வழங்குதல் - வேள்விகளிற் செய்யும் தானங்கள். கற்றோர்க்கும் மற்றோர்க்கும் நிதி   வழங்குதலுமாம்; நகர் - இடங்கள்; சுருக்கு - வாள் போன்ற கூர்மை; பெண்ணை   பனை; மடல் குறித்தது;- (6) விடையரவக் கொடி அரவவிடை - என்று மாற்றிப் பாம்பணைப்   பள்ளியுடைய திருமால் என்றுகொண்டு, விடைக்கொடி என்க. விடை ஏந்தும் - என்றதனால்   இரட்டுற மொழிதலால் விடையாகி ஊர்தியினால் ஏந்தப்படும் என்று உரைக்கவும் நின்றது தமிழ்நலம்.   இப்பொருளில் ஏந்தும் - ஏந்தப்படும் என்று செயப்பாட்டு வினையாகப் பொருள்   கொள்க; வெள்ளத்து - பாற்கடலினுள் இருக்கும்; அடியிணையும் திருமுடியும் - நிரனிறை;  தையல்...ஆட - நீராட்டுச் சிறப்பு; குங்குமம் - அப்பெண்களின் மெய்ப்பூச்சு;   குங்கும மரங்கள் என்றலுமாம்; கடைகள் விடுவார் - வயலில் நீர் தேக்கமுறாது கடைக்   கழிவு நேர்படுத்தும் பொருட்டு; குவளை களைவாரும் - குவளைக் கொடிகள் நீர் ஓட்டத்தைத்   தடை செய்யாது களையாகப் பறித்து வாரி எறிவார்; வாரும் - பறிந்து வாரி எறியும்;-   (7) குரு - பரிய; குரு...திரைவாய் - "திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிக   டிரைக்கரத்தால், முகந்துதர விருமருங்கு முளரிமலர்க் கையேற்கும்" (1041) என்று ஆசிரியர் இக்கருத்தை   அழகுபட விரித்தமை காண்க;- (8) இழை - "ஒன்பது போலவர் மார்பினினூலிமை" (தேவா);  தழைதழுவு...அருகே - முன் 3-வது பாட்டுப்பார்க்க. கண்...நெல் - தண்மையும்செந்நிறமுமுடைய   நெல்; தடந்தாள - பருத்த தாள்களையுடைய; மென்கரும்பு - கரும்பின் ஒருவகை;  கழை - கரும்புத் தண்டுகள்; தழுவி - பிணைத்து; தேன் - தேன்கூடு;-   (9) குனிவினிய கதிர்மதியம் - குனிவு - வளைதல்; குனி மதியம் என்க. பனி உதிரும்   - குளிர்ந்த கங்கைநீர்த் திவலை; கங்கைப் பெருக்கினைச் சுருக்கிப் பனிபோலத் திவலையாய் | 
 | 
 | 
 |  |