| |
| சேர்த்தி - கேடு தரும் குணங்களை நீக்கியதனோடு நில்லாது, வீடுதரும் அன்பினைக் கைக்கொண்டு; அன்பு நெறி சேராவிடில் குற்றங்களை நீங்கிய மட்டிற் பயனில்லை என்பதாம்; அன்பு - இறைவர்பாற் செலுத்துவது; குற்றம் நீங்கிய ஒழுக்கமே வீடுதரும்; இறைபணி வேண்டா என்பாரை நோக்கிக் கூறியது; மேல் வரும் பாட்டில் இதனை விரிவாய் உறுதிபடக் கூறல் காண்க;- (8) இன்பம்....உண்டு - இன்பம் - உலகவின்பம்; ஏழை - வலியற்ற; மோழைமை - அறியாமை; முட்டை - கீழ்மை; அன்பரல்லார்...சேரார் - எதிர்மறையாற் கூறியது உறுதிகுறித்தற்கு;- (9) எள் தனை - எள்ளினளவும் - சிறிதும்; தனை - அளவு. வந்து...காட்டும் - எந்தை - என்று கூட்டுக;- (10) மருது...மால் - கண்ணன் கதை; கண்ணனாய் வந்த விட்டுணு; சுருதி - கேட்கப்படுவது; கேட்கப்படுவதாக; முத்து - முத்துப் போன்ற; பத்தர்பந்தம் - பத்தர்கள் மனத்துட் பந்தித்து வைக்கும்; தொண்டர் - தொண்டர்களுக்கு. |
| தலவிசேடம் :- திருஎதிர்கொள்பாடி - சோழ நாட்டில் காவிரி வடகரை 24-வது பதி; மேலைத் திருமணஞ்சேரி என வழங்குவது; 25-வது பதியாகிய மணஞ்சேரி என்ற பதி இதனை அடுத்து மிக அணிமையில் (1/2 நாழிகையளவு) கிழக்கில் உள்ளது; மணக்கோலத்துடன் வந்த அன்பனாகிய அரசகுமார னொருவனை இறைவர் மாமனாய் எதிர்கொண்டு அழைத்துச் சென்ற வரலாற்றினால் இப்பெயர் பெற்ற தென்பர்; ஐராவதம் பூசித்துப் பேறு பெற்ற பதி; சுவாமி பெயர் பார்க்க; சுவாமி - ஐராவதேசுவரர்; அம்மை - மலர்க்குழனாயகி; பதிகம் 1. |
| இது வேள்விக்குடியினின்றும் வடக்கே கரைவழியாய் 1? நாழிகையில் உள்ளது. |
| திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும் |
| திருச்சிற்றம்பலம் | "முப்பது மில்லை" எனும் பதிகம் | பண் - நட்டராகம் |
| மூப்பது மில்லை, பிறப்பது மில்லை, யிறப்பதில்லைச் சேர்ப்பது காட்டகத் தூரினு மாகச்சிந் திக்கினல்லாற் காப்பது வேள்விக் குடிதண் டுருத்தியெங் கோனரைமேல் ஆர்ப்பது நாக மறிந்தோமே னாமிவர்க்காட்படோமே. | |
| (10) |
| கூடலர் மன்னன் குலநாவ லூர்க்கோ னலத்தமிழைப் பாடவல் லபர மன்னடி யார்க்கடி மைவழுவா நாடவல் லதொண்ட னாரூர னாட்படு மாறுசொல்லிப் பாடவல் லார்பர லோகத் திருப்பது பண்டமன்றே. | |
| (1) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- ஆட்படுமாறு சொல்லி நிந்தைத் துதியாகப் பாடித்துதித்தது. பதிகம் 10ம் பாட்டுப் பார்க்க. குறிப்பு: இப்பதிகம் - முதல் முறை நம்பிகள் இப்பதியினை வழிபட்டபோது பாடியருளியது; இரண்டாம் முறை பாடியருளியது (திருவொற்றியூரினின்றும் வரும் இடையில்) காந்தாரப்பண் - மின்னுமா மேகங்கள் என்ற பதிகம், நோய் நீங்கப் பெற்றுப் பாடியருளியது. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மூப்பதுமில்லை...ஊரினமாக - ஆர்ப்பது நாகம் முதலியவை மக்கள் நிலையில் எட்டாத இறைமைத் தன்மைகள்; இவ்வாறு எட்டமுடியாதவராதலின் நாம் ஆட்படிற் பயன் என்? என்றது குறிப்பு; மேல் வரும் பாட்டுக்களிற் கூறுவனவு மிவ்வாறே கண்டுகொள்க. நிந்தைத் துதிகள்; வேள் |