[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்139

3281
"நாயனார் முதுகுன்றர் நமக்களித்த நன்னிதியந்
தூயமணி முத்தாற்றிற் புகவிட்டேந்; துணைவரவர்
கோயிலின்மா ளிகைமேல்பாற் குளத்திலவ ரருளாலே
போயெடுத்துக் கொடுபோதப் போதுவா" யெனப்புகல,.

127

3282
"என்னவதி சயமிதுதா? னென்சொன்ன வா?" றென்று
மின்னிடையார் சிறுமுறுவ லுடன்விளம்ப, மெய்யுணர்ந்தார்
"நன்னுதலா! யென்னுடைய நாதனரு ளாற்குளத்திற்
பொன்னடைய வெடுத்துனக்குத் தருவதுபொய் யா"தென்று,

128

3283
ஆங்கவரு முடன்போத வளவிறந்த விருப்பினுடன்
பூங்கோயி லுண்மகிழ்ந்த புராதனரைப் புக்கிறைஞ்சி,
ஓங்குதிரு மாளிகையை வலம்வந்தங் குடன்மேலைப்
பாங்குதிருக் குளத்தணைந்தார் பரவையார் தனித்துணைவர்.

129

3280. (இ-ள்.) பொங்குபெரு....அடி வணங்கி - மேன்மேல் அதிகரிக்கும் பெருவிருப்பத்தினுடனே பின்னிய புரிந்த கூந்தலையுடைய தோழியர்கள் பலரும் துதிக்கத் தாமரை மலரைப் போன்ற கண்களையும், கொவ்வைச் செங்கனி போன்ற வாயினையுமுடைய பரவையம்மையார் வந்து (நம்பிகளது) திருவடிகளில் வணங்கி; எங்களையும்...இயம்ப - எங்களையும் நினைந்து எழுந்தருளிய தேவரீரது கருணைக்கு யாம் தகுதியுடையோமா என்று கூற; இனிதளித்து...வைகுநாள் - அவருக்கு இனிய மொழியுரைத்து மங்கைநல்லாராகிய அவருடனே மகிழ்ச்சியுடன் வதிந்திருக்கு நாளிலே,

126

3281. (இ-ள்.) வெளிப்படை; "தலைவராகிய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளிய சிவபெருமான் நமக்கு அருளிய நன்னிதியமாகிய பொன்னினைத் தூய திருமணிமுத்தாற்றிலே புகும்படி இட்டோம்; அதனைத் துணைவராகிய அப்பெருமானது இத்திருக் கோயிலின் மாளிகையின் மேல்பாலுள்ள (கமலாலயத்) திருக்குளத்திலே அவர் திருவருளாலே போய் எடுத்துக்கொண்டு வருதற்குஉடன் போதுவாயாக!" என்று (நம்பிகள்) சொல்ல.

127

3282. (இ-ள்.) மின்னிடையார் - அதுகேட்ட மின்போலும் இடையினை உடைய பரவையம்மையார்; என்ன...என்று - இதுதான் என்ன அதிசயம்! சொல்லியவாறுதான் என்னே! என்று அற்புதத்துடன்; சிறுமுறுவலுடன் விளம்ப - புன்முறுவலுடன் நம்பிகள் "நல்லநுநதலினை யுடையவளே! என்னுடைய நாயகனாரது திருவருளாலே இக்குளத்தினிலே பொன் முழுதும் எடுத்து உனக்கு நான் தருவது பொய்யாகாது"என்று கூறி,

128

3283. (இ-ள்.) ஆங்கு அவரும் உடன் போத - ஆங்குத் தம்முடன் அப்பரவையாரும் வர; அளவிறந்த...வலம் வந்து - அளவு கடந்த விருப்பத்துடன் பூங்கோயிலினுள் மகிழ்ந்தெழுந்தருளியுள்ள புனிதராகிய இறைவர் திருவடிகளை அக்கோயிலுட் புகுந்து வணங்கி ஓங்கிய திருமாளிகையினை வலமாகச் சுற்றி வந்து; பாவையார் தனித் துணைவர் - பரவையாருடைய தனித் துணைவராகிய நம்பிகள்; அங்கு...அணைந்தார் - அவ்விடத்தினின்றும் உடனே மேலைப்பக்கத்திலுள்ள கமலாலயத் திருக்குளத்தில் அணைந்தருளினர்;

129

இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபுகொண் டுரைக்கநின்றன.