| |
| 3280. (வி-ரை.) புரிகுழலார் - தோழியர்கள். |
| விருப்பினுடன் - போற்ற என்றும், விருப்பினுடன் - அடிவணங்கி - இயம்ப என்றும் கூட்டியுரைக்க நின்றது. |
| எங்களையும் நினைந்தருளிற்று - சிவபெருமானையே நினைத்தலன்றி வேறு நினையாத திருவுள்ளத்தில் நினைக்கத் தகாத எங்களையும் என உம்மை இழிவு சிறப்பும்மை; அருளிற்று - எழுந்தருளியது; அருள் துணைவினை எனக்கொண்டு, நினைந்தெழுந்தருளியது என்றலுமாம். நீண்ட நாட்பிரிந்த நிலைக்குறிப்பும் படக் கூறியது. |
| இனிது அளித்து - மலர் முகம் அளித்து இனியன கூறி. |
| மங்கை நல்லாரவர் - மங்கையருள் நல்லாராகிய அவர்; பரவையம்மையார். |
| |
| |
| |
| |
| |
| |
| |
| |
| வைகுநாள் - புகல - என மேல் வரும் பாட்டுடன் கூட்டுக. |
| அங்கயற்கண் - என்பதும் பாடம். |
| 126 |
| 3281. (வி-ரை.) நாயனார் முதுகுன்றர் - நாயனாராகிய திருமுதுகுன்றத்து இறைவர்; பெயரடைமொழி பண்பு குறித்து நின்றது; நாயனார் - தலைவர்; 759 - 774 முதலியவை பார்க்க. |
| நாயனார் - அளித்த - நாயனாராதலின் - அடியாரைக் காக்கும் கடமை பற்றி அளித்த என்று காரணப் பொருள்பட நின்றமையும் காண்க. |
| நன்னிதியம் - அசுத்த மாயாபுவன போகவகைப் பொருளாயினும் இறைவர் பாற் பெறும் அருட் பண்டமாதலின் நன்மை யுடையதாம் என்பது; "அறத்தாற்றி னீட்டப்பட்ட; அனையவை புனிதமான திறத்தாலே" (திருவிளை -புரா. வாதவூ-உ. ப. படலம் 62.) |
| புக இட்டோம் - புகும்படி ஆற்றில் இட்டோம். புக - அங்கு நின்றும் இங்குப் புகும்படி, விட்டோம் என்று பிரித்துரைப்பினுமமையும். |
| துணைவரவர் கோயில் மாளிகை - பூங்கோயிலின் மாளிகை; துணைவரவர் - திருமுதுகுன்றத்தின் நாயனார்; இங்குத் திருவாரூர்ப் புற்றிடங்கொண்டார் எழுந்தருளும் பூங்கோயிலைத் திருமுதுகுன்றத்து நாயனாரது கோயிலாகக் கூறியது அவரே இவர்; எங்கும் நிறைந்த முதல்வர் என்ற அனுபவ நிலை; அவரருளாலே என்ற கருத்துமது; அவரருளாவது திருமுதுகுன்றில் நம்பிகள் வேண்டியவாறே இறைவர் "செழுமணி முத்தாற் றிட்டிப் பொருளினை முழுது மாரூர்க் குளத்திற் போய்க் கொள்க" என்று தம்பிரானார் நல்குமின்னருள் (3263); அவ்வாற்றாற் பொன் முழுதும் நம்பிகளின் கைப் புகுமளவும் திருமுதுகுன்றரின் அருட்கடமைப் பாடாதல் நியமமாம் என்ற குறிப்பும் கண்டுகொள்க. |
| மேல்பாற்குளம் - இது கமலாலயம் என்று விளக்கமாய் வழங்கப்படுவது; இதுபற்றி நமிநந்தியடிகணாயனார் புராணத்தும், பிறாண்டுப் பார்க்க. |
| கொடுபோத - கொண்டு வர; போதுவாய் - உடன் செல்வாயாக என்ற ஏவல். |
| நமக்களித்த - நமக்கு என்றது பரவையாரை உள்ளிட்ட உளப்பாட்டுத் தன்மைப் பன்மை; மேல்வரும் பாட்டில் "என்னுடைய நாதன்" என்றும், "உனக்குத் தருவது" என்றும் தனிப்படுத்தி ஒருமையிற் கூறுதலின் காரணம் மேற்காண்க. |
| புகல - விளம்ப - என்று - இறைஞ்சி - அணைந்தார் - என மேல்வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க. |
| 127 |
| 3282. (வி-ரை.) "என்ன...வாறு" என்று - இது பரவையார் அதிசயப் பட்டுக் கூறிய மொழி. இஃதியலாதென்ற குறிப்புடன் கூறிய ஐயப்பாடு புலம்படும் மொழியுமாம்; என்ன அதிசயம்? என்சொன்னவாறு?-வினாக்கள் அதிசயமும் |