142திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

கொள்ளும் ஆசாரியராம் தன்மைப் பெரு நலம் குறித்தற் கென்க; தனி என்ற குறிப்புமிது. பொன்னைத் தாமே சென்றெடுத்துத் தரலாமாயினும் நம்பிகள் அவரையும் "உடன் போதுவாய்" என்று கூட்டிச்சென்ற குறிப்பு மிதுவே என்க; பிறர் பிறவா றெல்லாமெண்ணி அபசாரப்படுதல் உண்மையறிவில்லாமையாலா மென்க; இது பற்றிய மேல் அருட் சரித விளைவு வரலாறும் காண்க; துணைவர் என்ற குறிப்பும் கருதுக; தனித் துணைவர் - தம்மையடைந்த அடியார்கள் யாவர்க்கும் நல்லாறு செலுத்தும் துணைவரே யாயினும், பரவையாருக்குச் சிறப்பாகிய துணைவர் என்பது.
புராதனர் - கால எல்லை கடந்த பழமை; "முன்னோ பின்னோ" என்ற திருத்தாண்டகக் கருத்துக் காண்க.
புனிதர் கழல் - என்பதும் பாடம்.

129

3284
மற்றதனில் வடகீழ்பாற் கரைமீது வந்தருளி
முற்றிழையார் தமைநிறுத்தி முனைப்பாடித் திருநாடர்
கற்றைவார் சடையாரைக் கைதொழுது குளத்திலிழிந்
தற்றைநா ளிட்டெடுப்பார் போலங்குத் தடவுதலும்,

130

3285
நீற்றழகர் பாட்டுவந்து திருவிளையாட் டினினின்று
மாற்றுறுசெம் பொன்குளத்து வருவியா தொழிந்தருள
"ஆற்றினிலிட் டுக்குளத்திற் றேடுவீ! ரருளிதுவோ?
சாற்று"மெனக் கோற்றொடியார்மொழிந்தருளத்தனித்தொண்டர்.

131

3286
"முன்செய்த வருள்வழியே முருகலர்பூங் குழற்பரவை
தன்செய்ய வாயினகை தாராமே தாரு"மென
மின்செய்த நூன்மார்பின் வேதியர்தா முதுகுன்றிற்
"பொன்செய்த மேனியினீ" ரெனப்பதிகம் போற்றிசைத்து,

132

3287
முட்டவிமை யோரறிய முதுகுன்றிற் றந்தபொருள்
சட்டநான் பெறாதொழிந்த தளர்வினாற் கையறவாம்
இட்டளத்தை யிவளெதிரே கெடுத்தருளு" மெனுந்திருப்பாட்
டெட்டளவும் பொன்காட்டா தொழிந்தருள வேத்துவார்,

133

3288
"ஏத்தாதே யிருந்தறியே" னெனுந்திருப்பாட் டெவ்வுலகுங்
காத்தாடு மம்பலத்துக் கண்ணுளனாங் கண்ணுதலைக்
"கூத்தா!தந் தருளாயிக் கோமளத்தின் முன்"னென்று
நீத்தாருந் தொடர்வரிய நெறிநின்றார் பரவுதலும்,

134

3289
கொந்தவிழ்பூங் கொன்றைமுடிக் கூத்தனார் திருவருளால்
வந்தெழுபொன் றிரளெடுத்து வரன்முறையாற் கரையேற்ற,
அந்தரத்து மலர்மாரி பொழிந்திழிந்த தவனியுள்ளோர்
"இந்தவதி சயமென்னே! யார்பெறுவா" ரெனத்தொழுதார்.

135

3284. (இ-ள்.) மற்றதனில்...வந்தருளி - அக்குளத்தின் வடகிழக்குப் பக்கம் உள்ள கரையின்மேல் வந்தருளி; முற்றிழையார் தமை நிறுத்தி - பரவையாரை நிறுத்தி; முனைப்பாடித் திருநாடர் - திருமுனைப்பாடி நாடராகிய நம்பிகள்; கற்றைவார்...தடவுதலும் - கற்றையாகிய நீண்ட சடையினையுடைய சிவபெருமானைக்