| |
| கைதொழுது திருக்குளத்தினுள்ளே இறங்கி அன்று அப்போதுதானே போகவிட்டு எடுப்பவர்போல அங்குத் தடவுதலும், |
| 130 |
| 3285. (இ-ள்.) நீற்றழகர்......ஒழிந்தருள - திருநீற்றழகராகிய இறைவர் நம்பிகளது பாட்டினை உவந்தாராகித் திருவிளையாட்டினை உட்கொண்டு மாற்றுப் பொருந்திய செம்பொன்னினைத் திருக்குளத்தில் வருவிக்கா தொழிந்தருள; ஆற்றினிலிட்டு.....மொழிந்தருள - "ஆற்றினிற் போட்டுக் குளத்தினிலே தேடுவீர்! அருள் இருந்தது இவ்வாறுதானோ? கூறுவீர்!" என்று கோற்றொடியாராகிய பரவையம்மையார் மொழிந்தருளவே; தனித் தொண்டர் - ஒப்பற்ற தொண்டராகிய நம்பிகள், |
| 131 |
| 3286. (இ-ள்.) "முன் செய்த....தாரும்" என - மனம் அவிழும் பூக்களை முடித்த குழலினையுடைய பரவையாரது சிவந்த வாயின் நகை செய்யாதபடி, முன்னர்த் திருமுதுகுன்றத்திற் செய்த அருளின்படியே பொன்னினைத் தந்தருள்வீர் என்ற கருத்துடன்; மின்செய்த....வேதியர்தாம் - விளங்கும் பூணூலை அணிந்த மார்பினையுடைய நம்பிகள்; முதுகுன்றில்...போற்றிசைத்து - திருமுதுகுன்றத்திலே எழுந்தருளிய பொன்போன்ற திருமேனியுடையவரே என்று தொடங்கிய திருப்பதிகத்தினாற் றுதிசெய்து. |
| 132 |
| 3287. (இ-ள்.) முட்ட இமையோர்...எனும் - தேவர்கள் எல்லாரும் அறியும்படி திருமுதுகுன்றத்திலே தந்தருளிய பொருளினை விரைவில் நான் பெறாது விட்டதளர்ச்சியினால் வந்த செயலற்ற தன்மையதாம் துன்பத்தை இந்தப் பரவையின் எதிரிலே தீர்த்தருளும் என்னும் கருத்துடைய; திருப்பாட்டு...ஏத்துவார் - எட்டாவது திருப்பாட்டின் அளவும் பொன்னை இறைவர் அங்கு வருவித்துக் காட்டாமல் ஒழிய மேலும் துதிப்பாராகி, |
| 133 |
| 3288. (இ-ள்.) ஏத்தாதே...திருப்பாட்டு - எப்போதும் ஏத்தாமல் இருந்தறியேன் என்ற கருத்துடன் அத்தொடக்கமுடைய திருப்பாட்டினை; எவ்வுலகும்....கண்ணுதலை - எல்லாவுலகங்களையும் காத்து ஆளுகின்றாராய்த் திருவம்பலத்தின்கண் உள்ளாராகிய கண்ணுதற் பெருமானை; கூத்தா!....என்று - அருட்பெருங் கூத்தனே! இந்தக் கோமளமாகிய பரவையின் முன்னே தந்தருள்வாயாக! என்று; நீத்தாரும்....பரவுதலும் - நீத்தார்களாகிய துறவிகளாலும் தொடர்தற்கரிய நெறியில் நின்ற நம்பிகள் துதித்தலும், |
| 134 |
| 3289. (இ-ள்.) கொந்தவிழ்பூ....திருவருளால் - கொத்துக்களாக மலர்கின்ற கொன்றைப்பூக்களை முடித்த அருட்கூத்தப் பெருமானது திருவருளினாலே; வந்தெழு...கரையேற்ற - வந்தெழுந்த பொற்குவையினை எடுத்து முறைப்படி நம்பிகள் கரையேற்ற; அந்தரத்து...இழிந்தது - தேவர்களுலகத்தினின்றும் பூமழை பொழிந்து வீழ்ந்தது; அவனியுள்ளோர்...தொழுதார் - இவ்வுலகத்திலுள்ளோர்கள் இந்த அதிசயம்தான் இருந்தவாறென்னே! இவ்வாறு வேறு யார்தாம் பெறவல்லர்? (ஒருவருமிலர்) என்று கூறித் தொழுதார்கள். |
| 135 |
| இந்த ஆறு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3284. (வி-ரை.) "வடகீழ்பாற் கரையின்மீது - இது திருக்கோயிலினின்றும் நம்பிகள் போந்தருளிய மேலைத் திருவாயிலுக்கு அணிமையில் உள்ளது; ஈசானனுக்குரிய வடகிழக்காகிய பெருமையும் உடையது; இங்கு மாற்றுரைத்த |