144திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

பிள்ளையார் என்று இச்சரித சம்பந்தமாகிய பெயருடன் பிள்ளையார் கோயில் உள்ளதும் காணலாம்.
முற்றிழையார் - தொழில் நிரம்பிய அணிகளை அணிந்த பரவையம்மையார்; தொழில் முற்றிய இழை; வினைத்தொகை.
கற்றைவார் சடையாரைக் கைதொழுது - திருவருள் வெளிப்பட உள்ள பெருஞ் செயலிற் புகுகின்றாராதலின் இறைவரைத் தொழுதுபுகுகின்றார். இஃது எஞ்ஞான்றும் சிவனை மறவாது தம் செயலற்ற பெரியோர் நிலை - "தழைத்த வஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்" (544); "கைதொழுது நடமாடுங் கழலுன்னியழல்புக்கார்" (1072); "அஞ்செழுத் தோதிப் பாற்ற டம்புனற் பொய்கையில் மூழ்கினார் பணியால்" (1635) என்பன முதலியவை காண்க.
அற்றைநாள் இட்டு எடுப்பார்போல் - அங்குத்தடவுதல் - அன்றே அப்பொழுதுதான் புகவிட்டுத் தடவி எடுக்க முயலும் பாவனை போல்.
இழிந்து - உள்ளிறங்கி.
தடவுதலும் (3284), ஒழிந்தருள - மொழிந்தருளத் - தனித்தொண்டர் (3285), போற்றிசைத்து (3286), ஏத்துவார் (3287), என்று - பரவுதலும் (3288), எடுத்துக் - கரையேற்றப், பொழிந்திழிந்தது - தொழுதார் (3289) என்று இந்த ஆறு பாட்டுக்களையும் கூட்டி முடிபுகொள்க.

130

3285. (வி-ரை.) நீற்றழகர் - சிவபெருமான். நீறு - சங்காரக் குறிப்பு; சங்காரத்தின்பின் புனருற்பவம் நிகழ்தல்போல ஈண்டு முன் மறைந்த பொன் மீளத்தரப்படும் நிலைக்குறிப்பு.
பாட்டு உவந்து - நம்பிகள் இனிப்பாடும் திருப்பதிகத்தினைக் கேட்டலில் விருப்பமுற்று; "பண்ணி னேரு மொழியாளென் றெடுத்துப் பாடப் பயன்றுய்ப்பான்" (1533) என்பது முதலியவை காண்க. "படியிலா நின்பாட்டிற் பெருவிருப்பன் பரமனென்ப, தடியனே னறிந்தனன்" (நால்வர் - நான்மணிமாலை) என்றும், "உறழ்ந்த கல்வி யுடையானு மொருவன் வேண்டு மெனவிருந்து....நினைத்தோழமை கொண்டான்" என்றும் இதனை விதந்து போற்றினார் பிற்காலத்து விளங்கிய சிவப்பிரகாசர்.
திருவிளையாட்டினின்று - வருவியா தொழிந்தருள - சிறிது தாமதித்தலே ஈண்டுத் திருவிளையாட்டு எனப்பட்டது; அதன் பயனாவது பரவையம்மையார் தாம் கொண்ட கருத்தினையே உறுதி என்றுகொண்டு மீண்டும் "ஆற்றினில்...சாற்றும்" என மகிழ்ந்து கேட்கும் இன்பம் சிறிதுநேரம் பெறவைத்தலும், பின்னர் நம்பிகள் பொன்பெற வேண்டிப் பதிகம் பாட வைத்தலும், அதனால் உலகின்புற வைத்தலும், பிறவுமாம்.
மாற்றுறு செம்பொன் - உயர்ந்த மாற்றினை உடைய - "ஆயிரத்தெட்டுமாற்றாக வொளிவிடும் பொன்" (தாயுமா). மாற்று உறு - முன் கொடுத்ததனிலும் உரை தாழ்ந்துசிறிது மாறுதல் பெறும் பொன் என்ற பிற் சரிதக் குறிப்பும் ஆம்.
வருவியா தொழிதல் - சிறிது நேரம் தாழ்த்தல்.
ஆற்றினில்....அருளிதுவோ? - இஃது ஆற்றிலிட்டுக் குளத்திற்றேடுதல் என்ற பழமொழியை உள்ளடக்கி வினாவியபடி; வீண் காரியம் என்றது உட்கோள்; ஆற்றினில் புக இட்டபொருள் ஆற்றினில் அவ்விடத்துத் தேடினும் அகப்படுதல் அரிதாயிருக்க, அங்கு விட்டு முற்றும் வேறாகிய குளத்திற்கிட்டுதல் இயலாத காரியம் என்றபடி பழமொழி ஈண்டு முதுகுன்றின் மணிமுத்தாறும் ஆரூரின் கமலாலயக் குளமுமாக