| |
| மேலும் மிகவும் பொருத்தமாய்ப் பரவையாரது நகைக்கிடமாதல் காண்க; "ஆற்றிற் கெடுத்துக் குளத்திற் றேடிய ஆதரைப் போல்" (திருநல்லூர் - திருவிருத்தம்.) என்று இதனை வீண் காரியத்துக்கு உவமித்தல் காண்க. |
| அருள் இதுவோ? - உமது அருள் எம்பால் நிகழ்வது இவ்வாறோ?" "அவரருளாலே" (3281) "என்னுடைய நாதனருளால்" (3282) என்று விதந்து பேசிய அருளின் தன்மை இதுதானோ என்ற குறிப்பும்படக் கூறியது. |
| மொழிந்தருள - பரவையம்மையார் மொழிந்தமையே பின்னர் வரும் அரிய திருப்பதிகத்துக்குக் காரணமாகி உலகமுய்யும் வழியாய் வருதலின் அருள என்றார். |
| தனித்தொண்டர் - இருவருள்ளே பரவையார் அவ்வாறு கூறத்திருவருளுண்மையில் தனித்து நின்ற என்றதும் குறிப்பு; தனி - ஒப்பற்ற. |
| 131 |
| 3286. (வி-ரை.) நகை தாராமே - முன் செய்த அருள் வழியே - தாரும் - என்று கூட்டுக. முன்செய்த அருளாவது "செழுமணி முத்தாற் றிட்டிப், பொருளினை முழுது மாரூர்க் குளத்திற்போய்க் கொள்க" (3262) என்று முன்னர்த் திருமுதுகுன்றிற் பொன் தந்து சொல்லியருளிய திருவாக்கு. அருள் வழியே - அவ்வருளின்படியே; முன்செய்த அருள்வழியன்றியும் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் தோழமைத் திறத்தினால் நம்பிகள் வேண்டிய வேண்டியாங்குத் தருபவர் இறைவர்; எனினும், முன்செய்த அருளின் வழியே தாரும் என்றது ஈண்டுப் பொன் தருவது இறைவரது திருவாக்கு நிறைவேறுதலுமாகும் என்று இறைவர்பால் இரட்டைக் கடமையாதல் நினைவூட்டியவாறாம். நம்பிகள் பொன்பெறுதல் திருவாரூர்ப் பெருமான்பால் வேண்டாது பிற பதிகளில் வேண்டிப் பெறுவது பற்றி முன் உரைத்தவை பார்க்க; ஈண்டுத் திருமுதுகுன்றரைப் போற்றுதல் அக்கருத்தும் பற்றியது. |
| முருகலர் பூங்குழல் - மலர்களை அலரும் பருவத்தே அணிதலும், அவை குழலில் அணிந்தபோது புதுப்பூவாய் அங்கு மலர்தலும், மரபும் பயனும் பற்றியன - "வம்பமருங் குழலாள் பரவை" (2); "பூத்தாருங் குழலாள்" என்பது பதிகம். |
| பரவைதன் செய்யவாயின் நகைதாராமே தாரும் - என்றதனால் பரவையார் நம்பிகளுடனே நின்று நகைத்துப் பரிகசித்து மொழிந்தமை பெறப்படும்; "பரவையிவடன்முகப்பே" என்ற பதிகம் இதற்கு அகச்சான்று. |
| நகை தாராமே - நகை செய்யாதபடி; தாராமே தாரும் - என்றது சொல் அணிநலம்; முரண்டொடை என்பர். |
| "முன் செய்த....தாரும்" என - இது பதிகக் கருத்தும் குறிப்புமாம். |
| மின்...வேதியர் - நம்பியாரூரர், |
| "பொன்செய்த மேனியினீர்" என - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. பொன் செய்த - செய்த - உவமவுருபு; மின் செய்த - செய்தல் - புலப்படுத்துதல் - விளைத்தல். |
| சாராமே தாரும் - என்பதும் பாடம். |
| 132 |
| 3287. (வி-ரை.) முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள் - முட்ட - எல்லாரும்; தேவர்கள் அறியத் திருமுதுகுன்றத்திற் பொன் தந்தமை "உம்பரும் வானவரும் முடனே நிற்கவே யெனக்குச், செம்பொன்னைத்தந்தருளித் திருமுதுகுன்றமர்ந்தீர்" (2) என்ற பதிகத்தால் விளங்கும் அகச்சான்றுடையது; இதனால் நம்பிகள் இறைவரைப் பொன் வேண்டிய செயலும் அவர் அருளியதும் உலகினர் எவரும் அறிய நிகழ்ந்தனவல்ல என்பதும் பெறப்படும்; ஆயின் "இங்கு உம்பரும் வானவரும் அறிய" என்று கூறியது "இறைவரே! உமது அருளுக்கும் திருவாக் |