148திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

உம்பரும் வானவரும் முடனேநிற்க வேயெனக்குச்
செம்பொன்னைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மானருளீ ரடியேனிட் டளங்கெடவே.

(2)

பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள் பரவையிவ டன்முகப்பே
அரசே தந்தருளா யடியேனிட்ட ளங்கெடவே.

(8)

ஏத்தா திருந்தறியே னிமையோர்தனி நாயகனே
மூத்தா யுலகுக்கெல்லா முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பரவையிவ டன்முகப்பே
கூத்தா! தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.

(9)

பிறையா ருஞ்சடையெம் பெருமானருளா யென்று
முறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயனாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளிதரஞ்சிவ லோகமதே.

(10)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- 3286. 3288 பாட்டுக்களில் ஆசிரியர் காட்டியருளியபடி கண்டுகொள்க. எனக்குத் தந்த பொன்னைப் பரவை வாடாது காண இவடன் முகப்பே கூத்தா! தந்தருள்வாய் என்பது; "எம்பெருமானருளாய்" (பதிகம் - 10); குறிப்பு - இப்பதிகம் திருவாரூர்க் கமலாலயத் திருக்குளக் கரையில் வடகீழ்ப்பக்கம் திருப்படியில் நீரினுள் நின்றபடி நம்பிகள் திருமுதுகுன்றத் திறைவரை நோக்கிப் பாடியருளியது.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) பொன் செய்த மேனி - பொன்போன்ற திருமேனி; செய்த - உவமவுருபு; "பொன்னார் மேனியனே" (தேவா) "பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி"; முன் செய்த - முன்னர் வரம் பெற்று உலகைஅழிவு செய்த; மின்செய்த - விளக்கமுடைய; முகப்பே - முன்பு; கண்காண; என் செய்தவாறு - பொன்வரத் தாழச் செய்து நகைக்கிடமாகும்படி செய்தபடி என்னே! கெடவே - கெடச் செய்யும்;- (2) உம்பரும்...தந்தருளி - "முட்ட இமையோரறிய முதுகுன்றிற்றந்த பொருள்" (3287) என்று இதனை ஆசிரியர் விரித்தருளினர்; இவ்வானவர் இங்கு வழிபட வந்திருப்போர்; வம்பமருங் குழலாள் - "முருகலர் பூங்குழற் பரவை" (3286) என்று இதனை உரை வகுத்தருளினர் ஆசிரியர். "விரை சேருங் குழலாள்" (8) "பூத்தாருங் குழலாள்" (9) எனமேலும் வருவன காண்க. கூந்தலின் இயற்கைமணங் குறித்த தெனினுமமையும். அப்பொருளில் பூ - என்பது பூவின் மணம் என்றுரைத்துக்கொள்க;- (3) பத்தா - பத்தி செய்தற்கிடமானவரே!; முத்தா - இயல்பாகவே பாசங்களினீங்கியவரே!; மைத்தாரும் - மைதீட்டிய; மைபோன்ற கரிய என்றலுமாம்; "வாடாமே" என்பன தந்தருளப் பெற்ற பொருள் கைக்கு வரப் பெறாது அடியார் பணி முட்டுப்பாடு பெறுதல் வாட்டம். "குணம்" என மேற்பாட்டில் வரும் குறிப்புமிது;- (4) அங்கணனே - அங்கண்மையுடையவரே! அங்கணனாதலில் எனக் காரணக் குறிப்புப் படக்கூறியது;- (5) "மையாரும் மீடறு...செய்யார் மேனி" - விரோத அணி;- (6) நெடியோன்...இறைஞ்ச -