[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்149

முன் "உம்பரும் வானவரும் உடனே நிற்க" (2) என்று குறித்த இவ்வானவர்கள் இறைஞ்சுதற் பொருட்டு இங்கு வந்துள்ளோர் என்பது; படியாரும் இயலாள் - படி - இதன்படி என; உயர்ந்த இலக்கணத்துக் குதாரணமாகக் கூறும் இயல்;- (7) கொத்து - பூங்கொத்துக்கள்; வந்தணவும் - அணவுதல் - அருகுசார்தல்;- (8) பதினெண்கணம் - அமரர் முதல் போக பூமியர் ஈறாக வகுக்கப்படும் பதினெட்டு வகைத் தேவச் சாதியர். "உம்பரும் வானவரும்" என்று கூறிய இருவகையுள் மேல் "நெடியோ னான்முகனும்" என்ற விடத்து உம்பரும் - ஈண்டு "வானவரும்" குறிக்கப்பட்டனர்; முரசார் - முரசு முழக்குவோர்; அதிர - அதிர்க்க - முழக்க - எனப் பிறவினைப் பொருள் கொள்க; ஆர் - சிறப்பு விகுதி என்று கொண்டு முழவுகள் இயற்றுபவரின்றியும் தாமேவந்ததிர என்றலுமாம்; விரை - மலர் மணம்; இயற்கை மணம் என்றலுமாம்; இவ்வெட்டாவது பாட்டளவும் இறைவர் பொன் வருவியா தொழிந்தனர் என்பது ஆசிரியர் (3287) காட்டக் காணப்படும் பொருள்;- (9) ஏத்தாதிருந்தறியேன் - இங்கு இதன்பொருட்டன்றி, என்றும் எங்கும் ஏத்துதலை மறந்தறியேன்; ஆதலின் பாட்டுக் கேட்பதற்காக நீர் தாழ்க்க வேண்டா என்பது குறிப்பு; "பாதமே மனம் பாவித்தேன்" "நான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே" முதலியவை காண்க; மூத்தாயுலகுக் கெல்லாம் - முன்னே தோன்றியதனால் முதுகுன்ற மெனப்படும் பொருள் குறித்தது; கூத்தா - 3288-ன் கீழ் உரைத்தவை பார்க்க; கொடியேன் - முன் எல்லாப் பாட்டுக்களிலும் அடியேன் என்ற நம்பிகள் ஈண்டுக் கொடியேன் என்றது அடியேனாயின் முன்னரே வரப் பெற்றிருப்பேன்; அடியேனாதலன்றி, நான் கொடியேனாதலின் இதுவரை பெற்றிலேன் என்பது குறிப்பு. இப்பாட்டிற் பொன்வரப் பெற்றனர் என்பது ஆசிரியர் (3288- 3289) காட்டக் கண்டுகொள்க;- (10) முறையால்...வணங்கும் - 6 - 8- 9 பார்க்க; முறையாவது அவ்வவர்க்கேற்ற வரன்முறை. மறையார் - மறையவர்; குரிசில் - மேம்பட்டவர்; இறையார் - இறை - மேன்மை; இறை - "(அருளாய்" என்று செய்த) விண்ணப்பம் என்றலுமாம்.
தலவிசேடம் :- திருமுதுகுன்றம் - முன் III - பக்கம் 217 - பார்க்க.
3290
ஞாலம்வியப் பெய்தவரு நற்கனக மிடையெடுத்து
மூலமெனக் கொடுபோந்த வாணியின்முன் னுரைப்பிக்க,
நீலமிடற் றவரருளா லுரைதாழப், பின்னுநெடு
மாலயனுக் கரியகழல் வழுத்தினார் வன்றொண்டர்.
 

136

  (இ-ள்.) ஞாலம்....எடுத்து - முன் கூறியபடி உலகத்தார்கள் எல்லாம் வியந்து அற்புதமடையும்படி வந்த நல்ல பொன்னில் இடையில் எடுத்து, மூலமென...உரைப்பிக்க - மாற்றுக்கு மூலமாகத் தாம் மச்சம் எடுத்து வந்த மாற்றாணியோடு ஒப்பிடும்படி உரைத்துப் பார்க்க; நீலமிடற்றவர்....தாழ - திருநீலகண்டராகிய சிவபெருமானது திருவருளினாலே மாற்றுத் தாழ்ந்திருக்க; பின்னும்...வன்றொண்டர் - நெடுமாலுக்கும் பிரமனுக்கும் அரிய திருவடிகளை வன்றொண்டராகிய நம்பிகள் பின்னரும் துதித்தனர்.
  (வி-ரை.) ஞாலம் வியப் பெய்திய செயல் முன் பாட்டிற் கூறினார்.
  நற்கனகம் - இறைவர்பாற் பெறுதலானும் அடியார்களுக்குப் பயன்படுதலானும் நற்கனகம் என்றார்; ஏனையோர்பால் எல்லாம், கனகம் மாயாகாரியப் பண்ட