16திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

3172. (இ-ள்.) மனிதரால்.....என்ன - இத்த நெல்மலையின் பெருக்கம் மனிதர்களால் சுமந்தெடுக்கும் அளவுட்பட்டதன்று; இனி, இது என்னாற் செய்யக் கூடிய பணியன்று என்று சொல்ல; கேட்டு - (நம்பியாரூரர்) அதனைக் கேட்டு; பனிமதி....மொழிந்து - "குளிர்ந்த சந்திரனை முடித்த சிவபெருமானன்றே அருள் சுரந்து இந்நெல்லினை உமக்கு அளித்தார்" என்று இனிய மொழிகளைக் கூறி; தாமும்....வந்தார் - தாமும் குண்டையூரினைச் சார வந்தருளினார்.
16
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன.
3171. (வி-ரை) எதிர்கொண்டு - நம்பியாரூரரை எதிர்கொண்டு வந்து.
கோதில் வாய்மை - கோதில் - என்றது தன்மை விளக்கி நின்றது.
பண்டெல்லாம்....பணி - முன்னாளிலெல்லாம் அடியேன் உமக்கு அமுதுபடி சமைத்து வந்த பணி.
அண்டர் தம்பிரானார் தாமே - நான் வேண்டிக்கொள்ளாமலே அவர் தாமே தமது கருணைப் பெருக்கினாலே. என்று - என்ன - என வரும் பாட்டுடன் முடிக்க.
அளித்தார் - கருணையினால் அருளினார்என்ற குறிப்பு.

17

3172. (வி-ரை.) மனிதரால்.....ஆக்கம் - மனிதரால் சுமந்தெடுத்து இங்குக் கொண்டு வந்து உய்க்கும் அளவில் அடங்குவதன்றெனவே, இறைவரருளப் பூதங்களாலேதான் இயல்வது என்றது. ஆக்கம் - பெருக்கம்.
இனி....இது - இது - இந்நெல்லைச் சுமந்து வந்து திருமாளிகையில் உய்க்கும் பணி. செய்யலாகும் - செய்யக்கூடிய.
பனிமதில்......நெல் என்று - இறைவர்தாமே உமக்கு நெல் அளித்தார் என்பது என்பொருட்டளித்தாராயின் திருவாரூரில் அளித்திருப்பர்; அவ்வாறன்றிக் குண்டையூரில் அளித்து உமக்கு அருளியமையால் உமது அன்பின் பொருட்டேயளித்தனர் என்றவாறாம். இனியன - இனிமையான மொழிகளை. தாமும் - அவருடனே தாமும் கூடி.
நென் மலையினோக்கம் - என்பதும் பாடம்.

18

3173
விண்ணினை யளக்கு நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி யதிசய மிகவு மெய்தி
"எண்ணில்சீர்ப் பரவை யில்லத் திந்நெல்லை யெடுக்க வாளுந்
தண்ணில வணிந்தார்தாமே தரிலன்றி யொண்ணா" தென்று,

19

வேறு

3174
ளிடவேண் டிக்கொள்வா ரருகுதிருப் பதியான
கோளிலியிற் றம்பெருமான் கோயிலினை வந்தெய்தி
"வாளன கண்மடவாள் வருந்தாமே" யெனும்பதிகம்
மூளவருங் காதலுடன் முன்றொழுது பாடுதலும்,

20

3175
"பகற்பொழுது கழிந்ததற்பின் பரவைமனை யளவன்றி
மிகப்பெருகு நெல்லுலகில் விளங்கியவா ரூர்நிறையப்
புகப்பெய்து தருவனநம் பூதங்க" ளெனவிசும்பில்
நிகர்ப்பரிய தொருவாக்கு நிகழ்ந்ததுநின் மலனருளால்.

21