| |
| தொழுது (அதன்பின்); வீதியினில் அணைந்தார் - (நம்பிகள்) திருவீதியில் எழுந்தருளி வந்தனர். |
| (வி-ரை.) கனகமான தெல்லாம் - சுமை ஏற்றிப் பரவையாருடன் - மாளிகை போக்கி என்க. |
| நிரை ஆளிற் சுமையேற்றி - 12000 பொன் பெரும்பார மாதலின் ஒருவராற் சுமக்கலாற்றாது ஆளிற் சுமை ஏற்றல் வேண்டப்பட்டது. நிரை - ஒழுங்குபட; சுமையின் ஒழுங்கு; பல ஆட்களின் மேல் என்ற குறிப்புமாம்; சுமை - பாரம். |
| கனகமானதெல்லாம் சுமை ஏற்றி மாளிகை போக்கிப் பரவையாருடன் தொழுது என்று கூட்டி உரைத்தலுமாம். பொன்னைத் திருமாளிகையிற் சேர்த்தலுக்கு பணி ஆட்களே போதும் என்பது; என்னை? "செம்பொன் இட்டிகைகள் ஆள்மேனெருங்கி யணியாரூர்....பரவையார் தம் மாளிகையிற்புகத்தாமும்...பெருமானார் தம்மை வணங்கி யுவந்தணைந்தார்" (3208) என்ற வரலாறு போலக் காண்க. |
| திருமூலட்டானத்தார் - பாதம் தொழுது - "புராதனரைப் புக்கிறைஞ்சி" (3283)ப் போந்து அருள் வழியே பொன்வரப் பெற்றாராதலின், மீண்டு திரும்பும் போதும் அவரைத் தொழுது திருமாளிகையிற் சேர்தல் மரபு. இவை, எல்லாம் இறைவர் செயலேயாய்க் காணும் பெரியோர் செய்கை. |
| வீதி - இறைவர் கோயிலின்புறம் உள்ள வீதி; பரவையாரது திருமாளிகைக்குச் செல்லும் வழி பூங்கோயிலின் தெற்குத் திருவாயிலின் புறத்துத் தெற்கு நோக்கிச் செல்லும் திருவீதியில் உள்ளது. |
| நிரையேயாளிற் சுமத்தி - என்பதும் பாடம். |
| 138 |
3293 | வந்துதிரு மாளிகையி னுட்புகுந்து மங்கலவாழ்த் தந்தமிலா வகையேத்து மளவிறந்தா ரொலிசிறப்பச் சிந்தைநிறை மகிழ்ச்சியுடன் சேயிழையா ருடனமர்ந்தார் கந்தமலி மலர்ச்சோலை நாவலர்தங் காவலனார். | |
| 139 |
| (இ-ள்.) வந்து...புகுந்து - வந்து பரவையம்மையாரது திருமாளிகையினுள்ளே புகுந்து; மங்கல வாழ்த்து...சிறப்ப - அளவற்ற பேர்கள் எல்லையற்ற வகையால் ஏத்துகின்ற மங்கல வாழ்த்தின் ஒலி சிறந்து ஏங்க; கந்தமலி...காவலனார் - மணம் பொருந்திய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாவலூரவர்களின் காவலராகிய நம்பிகள்; சிந்தை நிறை...அமர்ந்தார் - மனநிறைவாகிய மகிழ்ச்சியோடும் பரவையாருடனே விரும்பி எழுந்தருளி யிருந்தனர். |
| (வி-ரை.) வந்து - முன் பாட்டிற் கூறியவாறு திருவீதியிலணைந்து வந்து. |
| அளவிறந்தார் அந்தமிலா வகை ஏத்தும் மங்கலவாழ்த்து ஒலி சிறப்ப - என்று கூட்டுக. |
| சேயிழையார் - பரவையம்மையார் |
| நாவலர் - நாவலூரர் என்றது நாவலர் என நின்றது. |
| காவலனார் - தலைவர். |
| 139 |
3294 | அணியாரூர் மணிப்புற்றி னமர்ந்தருளும் பரம்பொருளைப் பணிவாரங் கொருநாளிற் பாராட்டுந் திருப்பதிகந் தணியாத வானந்தந் தலைசிறப்பத் தொண்டருடன் பணிவாய்ப்பே ரருள்வினவித் தொழுதாடிப் பாடுவார், | |
| 140 |