[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்153

3295
ண்ணிறையும் வகை "பாறு தாங்கி"யென வெடுத்தருளி
உண்ணிறையு மனக்களிப்பா லுறுபுளக மயிர்முகிழ்ப்பக்
கண்ணிறையும் புனல்பொழியக் கரையிகந்த வானந்தம்
எண்ணிறந்த படிதோன்ற வேத்திமகிழ்ந் தின்புற்றார்.

141

  3294. (இ-ள்.) அணியாரூர்....ஒருநாளில் - அழகு பொருந்திய திருவாரூரில் மணிப்புற்றினிடமாக விரும்பி எழுந்தருளிய பெருமானை நியதமாகப் பணிவாராகிய நம்பிகள் அங்கு ஒரு நாளில்; பாராட்டும்...தலைசிறப்ப - இறைவரைப் போற்றுகின்ற திருப்பதிகத்தின்கண் தணிதலில்லாத ஆனந்தம் மேலிட; தொண்டருடன்.....பாடுவார் - திருத்தொண்டர்களுடனே துணிவுபடப் பேரருளின் திறங்களைத் தனித்தனி வினவுகின்ற வகையாலே தொழுதும் ஆடியும் பாடுவாராகி (நம்பிகள்).
  140
  3295. (இ-ள்.) பண்ணிறையும்...எடுத்தருளி - பண்ணின் இசை நிறைவு கொள்ளும் வகையாலே "பாறுதாங்கி" என்று தொடங்கியருளி; உண்ணிறையும்....தோன்ற - மனத்தின் உள்ளே நிறைகின்ற மகிழ்ச்சியினாலே திருமேனியில் மயிர்ப்புளகாங்கிதம் கொள்ளவும் கண்கள் நிறைய நீர்பொழியவும் எல்லையில்லாத ஆனந்தம் எண்ணிறைந்தபடி தோன்றவும்; ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் - துதித்து மகிழ்ந்து இன்பமடைந்தனர்.
 

141

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3294. (வி-ரை.) அணி ஆரூர் - "அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே" என்பது முதலாக வரும் திருத்தாண்டகங்கள் பார்க்க.
  அமர்ந்து அருளும் - விரும்பி யிடங்கொண்டிருந்து உயிர்களுக்கு அருள்புரியும்.
  பணிவார் - பாடுவார் - என்று கூட்டுக; பாடுவார் - ஏத்தி - இன்புற்றார் என வரும்பாட்டுடன் முடிக்க. பாராட்டும் - திருவருள் நிலைகளைப் பலவாறும் எடுத்துத்துதிக்கின்ற.
  தணியாத....வினவி - இது பதிகக் கருத்தாகிய குறிப்பு, பலபடப் பாராட்டுதலும் பொருள் வினவுதலும் பதிகப் பாட்டுத்தோறும் கண்டுகொள்க.
  தணியாத ஆனந்தம் தலைசிறப்ப - குறைவுபடாத சிவானந்தமாகிய பெருமகிழ்ச்சியின் அனுபவம் மேன்மேலும் சிறந்தோங்க; தலை சிறத்தல் - ஓங்குதல்.
  தொண்டருடன் - பொருள் வினவி - தொண்டர்களுடன் கலந்து இறைவரது பெருமைகளை அறியார் போன்று வினவிப்பாடுதல் திருவருளிற்றிளைக்கும் வகைகளுட் சிறந்தது; "அன்பரொடுமரீஇ" என்பது (போதம் - 12சூத்.) ஞான நூன் முடிபு.
  இது சீவன்முத்தர்களது தன்மைகளுள் ஒன்றாகப் பேசப்படும். திருக்கண்டியூர் பிள்ளையார் பதிகமும், திருவாரூரில் முதன் முறை சாரும்போது மூவர் பதிகங்களும் பார்க்க. திருத்தொண்டின் சிறப்புடைய பதி திருவாரூர் என்பதும் குறிக்கொள்ளத்தக்கது; "பத்தர் காள்பணிந் தேத்தி னேன்பணி யீர்" என்ற பதிக அகச்சான்று காண்க.
  துணிவாய பேரருள் - முடிந்த முடிபாகிய பேரருளாவது சிவனருள் வகையேயாம்; துணிவு - முடிந்த முடிபு.
  துணிவாய பேரருள் வினவி - என்பதும் பாடம்.
 

140