[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்155

  குன்றிமணி; ஒருபுறம் சிவப்பும் ஒருபுறம் கருமையும் (அம்மை - கரிய - பசிய; அப்பர் - சிவப்பு) கொண்ட வடிவமாதலின் குன்றி போல்வது என்றார். குறிப்பாகி - சங்கார காரணனாகியவதனால் - முழுமுதல்வனாகிய தலைவர் தாமே என்ற குறிப்பு. "இன்றியே....உடையராயிலராவரோ இலர் - பொருளில்லவர் ஐயமேற்பவர்; இவர் இலராதல் உண்மையில் பொருளில்லாமை பற்றியோ அன்றி எல்லாமுடையராயும் இல்லவராகியோ; பின் கூறியதே பொருள் என்றது வைப்புமுறையாற் பெறவைத்தார்; "பரந்துல கேழும் படைத்த பிரானை, யிரந்துணி யென்பர்க ளெற்றுக்கிரக்கும்" (திருமந்), அன்றியே - இலராதலன்றி; மிகஅறவர் - எல்லா அறங்கட்கும் இடமாகுவர்;- (4) செய்யர் - வெள்ளை நீற்றர் - விரோதவணி; மானை மேவிய - மான் கண் போன்ற; மேவிய - உவம உருபு;- (5) கோணல் - வளைவுடைய; கொடுகொட்டி...காலர் - கொடுகொட்டி - திரிபுரமெரித்த காலையில் சிவனாடிய கூத்து; பதினோராடல்களுள் ஒன்று; காலர் - ஆடும் காலினை உடையவர்; நாணதாக - அரைச்சாத்தும் கயிறாக; அரைநாண்;- (6) சாய் - அம்பு - திரிபுரமெரித்த நாள் அம்பாக வந்த கருவியின் தன்மை குறித்தது போலும்; மூடனேனுக்கு - திருத்தொண்டர்களின் முன்னே தம்மைச் சிறியராயொழுகும் நிலை;- (7) நமரங்காள் - நம்மவர்களே;- (8) நீடு வாழ்பதி - நிலைத்த இருப்பிடம்; இலயம்பட ஆடுவார் - இடத்தின் பாகுபாடுகள் அனைத்தும் ஒன்றிக்கைபட ஆடுதல்;- (9) நமணநந்தியும் - தருமசேனனும் - சமண குருமார் பெயர் மேற்கொள்ளும் வகை; அவை நந்தி - வீரன் - சேனன் - என்ற முடிபுகள் கொள்ளும் வழக்கு; (பிள் - ஆலவாய் - கொல்லி -4, 6 பார்க்க.) குமண மா மலை - பெருமலை; குமணம் - அழகில்லாத; விகாரமாகிய; குமணனது மாமலை என்பாருமுண்டு; மலைக் குன்று - பெருமலையின் சாரலில் உள்ள சிறு குன்று - உருவுஉவமம்; கூறையொன்று இன்றியே சமண குருமார் உடையின்றி நக்க உருவத்துடன் சரித்தல் குறிப்பு; ஞமண...ஞோணமென்றோதி - சமணர் மந்திரங்களின் வகைக் குறிப்பு; மூக்கினால் உச்சரிக்கும் மெல்லெழுத்துக்களா லாகியவை; "மூக்கினான் முரன் றோதி" (தேவா); யாரையுநாணிலா - யார்பக்கமும் நாணமில்லாதொழுகும்; ஆளுடைய அரசுகள், பிள்ளையார் இவர்களது அருட் செயல்களால் முன்னரே பெரும்பான்மை அழிவுபட்டொழிந்த சமணம் முற்றும் அழியாது அதற்கு ஏறக்குறைய முந்நூறாண்டுகளின் பின் நம்பிகளின் நாளினும் அங்கங்கும் சிறிது சிறிது தலைகாட்டிச் சைவத்தினைப் பழித்துத் திரிதந்ததென்பது சரித வரலாற்றானறியப்படும். அகச்சான்று; இந்நாளினும் அத்தகைய சமணம் உளது என்பதும் கருதுக. சமணரால் பழிப்பு - புறச்சமயங்களுட் பெரும்பான்மை பற்றிச் சமணத்தைக் கூறினும் இனம்பற்றி ஏனையபுத்தம் முதலியன வேதாகமநிந்தகரையும் உடன் கொள்க;- (10) படி செய் - நீர்மை - இதன்படி என்று உலகர் படியெடுத்து ஒழுகும் மேல் வரிச் சட்டமாகக் கொள்ளும்படி அன்பு செய்யும் தன்மை; அருள் பணியீர் - என்க; அருள் - அருளின் வண்ணங்கள்; வடிவிலான் - உருவில்லவன்; செடியன் - இழிசெயல் செய்வோன்; தீயன் - தீமை செய்வோன்; தம்மையே - அடிகளையே.
3296
ன்புற்றங் கமர்நாளி லீறிலரு மறைபரவும்
வன்புற்றினரவணிந்த மன்னவனா ரருள்பெற்றே
அன்புற்றகாதலுட னளவிறந்த பிறபதியும்
பொன்புகென் றிடவொளிருஞ் சடையாரைத்தொழப்போவார்;
 

142