[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்157

  பாங்கு அமைந்த பதிகள் - பாங்கு பக்கம்; இவை முன்னர் உரைக்கப்பட்டன. திருவிளமர், திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயின என்பது கருதப்படும்.
  துரிசறு நற் பெருந் தொண்டர் - திருவாரூர் நம்பிகள். துரிசு அறும் - வந்து அடைந்து வழிபடும் மக்களது துரிசுகள் அறுதற் கேதுவாகிய; அறுவிக்கும்.
  புரிவுறும் - இறைவரது பணிகளையும் அடியார் பணியினையுமே எப்போதும் நினைந்திருப்பவர்; புரிதல் - இடைவிடாது செய்தல்; திருத்தொண்டர் - திருநள்ளாற்றில் உள்ள தொண்டர்கள்; எதிர்கொள்ள - வந்து எதிர்கொள்ளச் சென்று.
  புக்கு - திருநள்ளாற்றினுள்ளே புகுந்து.
 

143

3298
விண்டடவு கோபுரத்தைப் பணிந்துகர மேற்குவித்துக்
கொண்டுபுகுந் தண்ணலார் கோயிலினை வலஞ்செய்து
மண்டியபே ரன்பினொடு மன்னுதிரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்தநில மிசைப்பணிந்தார்.
 

144

  (இ-ள்.) விண்தடவு...புகுந்து - ஆகாயத்தை அளாவிய திருக்கோபுரத்தின் முன்பு நிலமுறப் பணிந்து எழுந்து கைகளை உச்சிமேற் குவித்துக்கொண்டுஉள்ளே புகுந்து; அண்ணலார்....வலஞ் செய்து - நம்பிகள் திருக்கோயிலினை வலமாக வந்து; மண்டிய.....பணிந்தார் - மிக்கெழுந்த பேரன்பினோடும் நிலை பெற்ற திருநள்ளாற்றிறைவரது தாமரை போன்ற அழகிய திருவடிகளிலே பொருந்தும்படி நிலமுற வீழ்ந்து வணங்கினார்.
  (வி-ரை.) விண் தடவுதல் - விண்ணின்மேல் மிக உயர்தல். அண்ணலார் - நம்பிகள்; அண்ணலார் கோயில் என்று கூட்டி இறைவரது கோயில் என்றுரைப்பாரு முண்டு;
  மண்டிய - செறிந்து மிக்கு மேலெழுந்த.
  நள்ளாறர் - "நள்ளாறனை அமுதை" என்பது பதிக ஆட்சி.
  சேவடிக்கீழ்ப் பொருந்த நிலமிசைப் பணிந்தார் - அடி யென்பது நிலமுற உள்ள தென்பது ஏனையோர்க்கு ஒக்குமாயினும் இறைவர்பால் உபசார மாத்திரையாய் நிற்கும்; அவ்வுபசார வழக்கே பற்றி இவ்வாறு கூறினார். இறைவர் திருமுன்பு நிலமுற வீழ்ந்து பணிதல் தம்மை முழுதும் அவர் வசமாக்கும் நிலைகாட்டுவதாம்.
 

144

3299
ங்கணரைப் பணிந்தேத்தி யருளினாற் றொழுதுபோய்
மங்குலணி மணிமாடத் திருக்கடவூர் வந்தெய்தித்
திங்கள்வளர் முடியார்தந் திருமயா னமும் பணிந்து
பொங்குமிசைப் பதிக"மரு வார்கொன்றை" யெனப்போற்றி,
 

145

3300
திருவீரட் டானத்துத் தேவர்பிரான் சினக்கூற்றின்
பொருவீரந் தொலைத்தகழல் பணிந்து "பொடி யார்மேனி"
மருவீரத் தமிழ்மாலை புனைந்தேத்தி மலைவளைத்த
பெருவீரர் வலம்புரத்துப் பெருகார்வத் தொடுஞ்சென்றார்.
 

146

  3299. (இ-ள்.) அங்கணரை...போய் - இறைவரை வணங்கித் துதித்துத் திருவருள் விடை பெற்றுத் தொழுது சென்று; மங்குலணி....வந்தெய்தி - மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில் வந்து சேர்ந்து; திங்கள்...பணிந்து - சந்திரன் வளர்தற்கிடமாகிய திருமுடியினை உடைய இறைவரது திருக்