[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்159

  இப்பதிகக் குறிப்பு ஒன்றும் ஈண்டு ஆசிரியர் காட்டியருளவில்லை. இப்பதிகத்திற் காணப்படும் "அடியேற் கெளிவந்த தூதனை" "செய்த துரிசுகள் பொறுக்கும்" என்பவை இனிமேல் வரும் நிகழ்ச்சிகளைக் குறிப்பன; ஆதலின் இப்போதுமுள்ள "செம்பொன்மேனி" என்ற (தக்கேசிப் பண்) இப்பதிகம் பின்னர் வேறொரு சமயம் பாடியருளப்பட்டதென்பது கருதப்படும்; ஆயினும் அவ்வாறுள்ள வரலாறு ஆசிரியர் கூறியருளாமையானும், திருநள்ளாற்றுக்கு நம்பிகள் பதிகம் இஃதொன்றே கிடைத்துள்ளமையானும் இப்பதிகம் ஈண்டுத் தந்து குறிப்புக்களும் தரப்படுவன.
 

146

  திருநள்ளாறு
  திருச்சிற்றம்பலம்

பண் - தக்கேசி

 
செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக் கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழ லங்கையி னானைச் சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக் கோவின் மேல்வருங் கோவினை நங்கள்
நம்ப னைநள் ளாறனை யமுதை நாயி ளேன்மறந் தென்னினைக் கேனே.
 

(1)

 
மறவ னையன்று பன்றிப்பின் சென்ற மாயனை நால்வர்க் காலின்கீ ழுரைத்த
அறவ னையம ரர்க்கரி யானை யமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற கோனை நான்செய்த குற்றங்கள்
பொறுக்கும்
நறைவி ரியுநள் ளாறனை யமுதை நாயி னேன்மறந் தென்னினைக் கேனே.
 

(7)

 
மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேத னைவேத வேள்வியர் வணங்கும் விமல னையடி யேற்கெளி வந்த
தூத னைத்தன்னைத் தோழமை யருளித் தொண்ட னேன்செய்த
துரிசுகள்பொறுக்கும்
நாத னைநள் ளாறனை யமுதை நாயி னேன்மறந் தென்னினைக் கேனே.
 

(8

 
செறிந்த சோலைகள் சூழ்ந்தநள் ளாற்றெஞ் சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை
"மறந்து நான்மற்று நினைப்பதே" தென்று வனப்ப கையப்ப னூரன்வன்
றொண்டன்
சிறந்த மாலைகொ டைஞ்சினோ டைஞ்சுஞ் சிந்தை யுள்ளுரு கிச்செப்ப
வல்லார்க்
கிறத்து போக்கில்லை வரவில்லை யாகி யின்ப வெள்ளத்து
ளிருப்பர்க ளினிதே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- திருநள்ளாற் றிறைவரை நாயினேன் மறந்து என்னினைக்கேன். "மறந்து நான்மற்று நினைப்பதேது" (பதிகம் 10)
  பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) செம்மை - வெண்மை - கருமை - விரோத அணி; முரண்டொடையுமாம். கும்பமாகரி - கும்பம் போன்ற மத்தகத்தையுடைய பெரிய யானை; கோவின் மேல்வரும் கோ - கோ - பசு; எருது; கோ - தலைவர்;- (2) பரசுவார் - துதிப்பவர்; குரை...கோனை - கடலேழு; வரை ஏழு; உலகேழு; என்பது;- (3) பூவில் வாசம் - பூவில் மணம் போல எங்கும் அத்துவிதமாகப் பரந்து கலந்திருப்பவன்; புவியை...வெளி - ஐம்பூதங்கள்; காமரம் - சீகாமரப்பண்;- (4) நீங்ககில்லானை - நீங்கமாட்டாதானை;- (5) ஏழையேற்கெளிவந்த பிரானை - நம்பிகள் சரித அகச்சான்று; மேல் 8-வது பாட்டுப் பார்க்க;- (6) காமகோபன் - காமனைச் சினந்து எரித்தவன். இவ்வரிய சொற்றொடரின் தமிழ்ச்சுவை அநுபவிக்கத் தக்கது; சொற்பதப் பொருள்...சோதியை - சொற்பதம் - சொல்லாயும்