| |
| யும் அதன் காரணமாயும் உள்ள உரைகள்; சத்தப் பிரபஞ்சம் என்பர்; பொருள் - உரையால் நுதலப்படும் பொருட் பிரபஞ்சம்; "உரையின் வரையும் பொருளினளவும் இருவகைப் பட்ட எல்லை" (பட்டினத்து அடிகளார் - கோயி னான்மணிமாலை); இருள் அறுத்தலாவது இவை மயக்கங்களை உணர்த்தாது உண்மைஞான முணர்த்தும்படி காட்டுதல்; வெண்ணெய்நல்லூரில்...ஆனது கொண்டநற்பதம் - நம்பிகளைத் தடுத்தாட் கொண்ட சரிதவரலாற்றின் அகச்சான்று; நற்பதம் - திருவடி; பதம் - சொல் என்று கொண்டு, "இவன் என் அடியான்" என்று சொன்ன நல்ல திருவாக்குடையவர் என்றலுமாம்;- (7) மறவன் - வேடன்; பன்றிப்பின் சென்ற - அருச்சுனன் பொருட்டு வேடனாகிப் பன்றியைத் துரத்தி ஓடிய வரலாறு; நால்வர் - சனகாதி முனிவர்கள்; அறவன் - அறமுரைத்தவன்; அறம் உரைத்தவனை என்று விகுதி பிரித்துக் கூட்டுக. அமரர் - சேனைக்கு நாயகன் - முருகப்பெருமான்; தேவசேனாபதி; நான் செய்த குற்றங்கள் பொறுக்கும் - "துரிசுகள்" என மேற்பாட்டிற் கூறுவதும், "யான் செய்யுந் துரிசுகளுக் குடனாகி" (தேவா) என்பதும் காண்க;- (8) உடம்பு - இடம் - உடம்பில் ஒரு இடம் என்றும், இடப்பாகம் என்றும் சிலேடை நயம்பட உரைக்க நின்றது; வேதன் - வேதங்களைச் சொன்னவன், வேதங்களாற் சொல்லப்பட்டவன் என்றும், வேதிப்பவன்என்றும் உரைக்க நின்றது; வேதித்தல் - வினைகெடுத்து உயிரைத் தன் மயமாக்குதல்; அடியேற் கெளிவந்த தூதன் - பரவையார் ஊடல் தீர்க்கத் தூது சென்ற வரலாறு; இது பின்னர் நிகழ்வது; துரிசுகள் - குற்றங்கள்; இப்பதிகம் பின்னர் அருளப்பட்டதாமென்று கொள்ள நின்ற ஆதரவுகள் இவை;- (9) நாமம் - இராவணன் (அழுபவன்) என்ற பெயர்;- (10) "மறந்து...நான்மற்று - நினைப்பதேது என்று பதிகக் கருத்தும் குறிப்புமாம்; சிந்தை வல்லார்க்குப் பதிகத்தினைப் பயிலும் முறை; இறந்துபோக்கு இறப்பு; வரவு - பிறவி; இன்ப வெள்ளம் - மீளா நெறியில் துய்க்கப்படும் சிவானந்தம். |
| தலவிசேடம் :- திருநள்ளாறு - III - பக்கம் 407 பார்க்க. |
| திருக்கடவூர்த் திருமயானம் |
| திருச்சிற்றம்பலம் | பண் - பழம்பஞ்சுரம் |
| மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரம னிந்திரற்குந் தேவர் நாகர் தான வர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. | |
| (1) |
| மாட மல்கு கடவூரின் மறையோ ரேத்து மயானத்துப் பீடை தீர வடியாருக் கருளும் பெருமா னடிகள் சீர் நாடி நாவ லாரூர னம்பி சொன்ன நற்றமிழ்கள் பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- அடியார்க்குப் பீடை தீர அருளுபவர் திருக்கடவூர் மயானத்துப் பெரிய பெருமானடிகளே. (பதிகம் - 10 பார்க்க.) |