| |
| பதிகம் "எனக்கினி" - ஓதி - எனக்கினி என்று தொடங்கும் பதிகம் பாடியருளி; முதற் குறிப்பு. |
| போய் - அத்திருப்பதியினை அகன்று மேற் சென்று; |
| சங்கநிரையோடு...கொண்டிறைஞ்சும் - சங்கநிரை - வாத்தியமாக; இது வழிபாட்டு முறையில் வரும் ஒரு உபசார வகை; தூபம், தீபம், பூ இவை இன்றியமையாத வேறு வகை; இன்றியமையாத உபகரணங்களின் வகையாம். ஆதலின் முன்னதனை ஓடு உருபு தந்து வேறு பிரித்துக் கூறினார். |
| துமித்தூபம் - அலைநீர்த் திவலைகள் தூபப் புகையாகவும்; மணித்தீபம் - நவ - மணிகள் தீபங்களாகவும், நித்திலப்பூ - முத்துக்கள் வெண் மலர்களாகவும், திரை இவற்றை ஏந்தும் கைகளாகவும், ஓதம் - வழிபடும் அன்பராகவும் உருவகப் படுத்தினார்; இஃதே கதேசவுருவகம். சிவமயமாகிய தெய்வக்கண் கொண்டு காண்பார்க்கே இவ்வுருவக நிலை காணப்படும்; 1905 - 1907 முதலியவை பார்க்க. ஓதம் - பூசைக்குரிய நீரும் குறித்தது. "வம்பு லாமலர் நீரால்வழிபட்டு....இறைஞ்சலின்" (57) என்று காவிரிக்குச் சொல்லியவை இங்கு நினைவு கூர்தற்பாலன. தற்குறிப்பேற்ற அணியும் உருவகமும் விரவி வந்தது. |
| ஓதம் தூப தீபம் பூக்கொண்டிறைஞ்சும் - திருச்சாய்க்காடு - இப்பதி கடற்கரையில் உள்ள நிலையும் உணர்த்தப்பட்டது. |
| 147 |
| திருவலம்புரம் |
| திருச்சிற்றம்பலம் | பண் - காந்தாரம் |
| எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன் பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல் எனக்கினி யவன்றமர்க் கினியவ னெழுமையும் மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே. | |
| (1) |
| வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல் இருங்குலப் பிறப்பர்த மிடம்வலம் புரத்தினை அங்குலத் தருந்தமி ழூரன்வன் றொண்டன்சொற் பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- "எழுமையும் எனக்கினியவன் றன திடம்வலம்புரமே" என்ற பதிக மகுடம் பார்க்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இனி எனக்குத் தினைத்தனைப் புகலிடம் - இதுவரை எனக்குப் பற்றுக்கோடாகிய புகலிடம் காணாதிருந்த நான் ஒரு சிறிது பற்றுக்கோடு உள்ளதென்று; தினைத்தனை - தினையின் அளவு; "தினைத்தனையுள்ளது" (திருவா) தனை - அளவு; பனைக்கனிப் பழம் - பனையின் கனிந்த பழம்; பரவை - கடல்; எழுமை - எழுவகைப் பிறப்பு; மனக்கு - உயிருக்கு; மனம் - உயிர்; "மனமணி யிலிங்கமாக" (தேவா) வலம்புரமேயிடம் என்க; இடம் வலம்புரம் - சொல்லணி; பனை - நெய்தற்கரு;- (2) வளைந்த - பயன்படுத்தப் படாது வளைந்த மட்டில் அமைந்து புரம் எரிதர; அரவுரியிரந்தவன் - பாம்பும் யானை உரியும் அணிந்து பிச்சை ஏற்பவன்? (3) நெருப்புமிழ் - தீப்போன்ற மூச்சுக்காற்று; தீவிடம் என்றலுமாம்; கூறணி கொடுமழு - துண்டப்படுத்தும் வளைந்த வடிவுடைய மழுவாயுதம்; அழல்வளர் - |