| |
| தீயை ஒரு கையில் வளர்க்கின்ற;- (4) கொங்குஅணை சுரும்புண நெருங்கிய - கொங்கு - தேன். வண்டுகள் தேன் உண்ணும்படி நெருங்கிய பாளைகளையுடைய; புடைதர - மோத - ஒரு சொல்; புடைத்தல் - மோதுதல்; பக்கத்தில் தர - புடை - பக்கம் - என்றலுமாம். அலைகள் மோத;- (5) கொடுமழுவிரகினன் - கொடிய மழுவினை ஏந்திய தொழில் உடையவர்; கொடு - வளைந்த வடிவு என்றலுமாம்; விரகு - தொழிலுபாயம்; சிறுமையில் - சிறிய செயலினாலே; ஈண்டுச் சிரித்தே எரித்த செயல் குறித்தது; நிரவவல்லவன் - அழிக்க வல்லவன்; வல்லமை - வேறெவர்க்கு மியலாத ஆண்மை; படுமணி...அடைகரை - மணிகளும் முத்தும் பவளமும் மணலுடன் கலந்து அடையும் கரையினையுடைய; படுதல் - உண்டாதல்;- (6) கடம் - மதம்; கயல்...அணைகரை - கூட்டமாக நெருங்கியநெடிய பனைகளுடன் அடம்புக் கொடி படர்ந்து பொருந்திய பக்கங்களில் கயல் மீன்கள் வலம்புரி சலஞ்சலம் என்ற சங்குகளோடு கூடி வாரிக்கொண்டு பெரிய கடல் அணைகின்ற கரையினையுடைய; கயல் - வலம் புரி சலஞ்சல மணம் புணர்ந்து என்று கூட்டுக; மருங்கொடு - மருங்கின் கண் - ஒடு - ஏழனுருபுப் பொருளில்வந்தது; கடவுளதிடம் கரையிடத்தையுடைய வலம்புரம் என்று கூட்டுக; -(7) வரி - இசைப்பாட்டு; புரி - சூழ்ந்து; ஆலாபனம் என்பர்; நரிபுரி - புரிதல் - வாழ்தல், நாடியடைதல்; புரிசுரிவரி - புரி - பின்னிய; சுரிவரி சுழல் வண்டு; எரிஎரி - உலகம் எரிகின்ற தீ; சங்கார காலத்தில் வரும் தீ - ஊழித் தீ;- (8) பாறு - பேய் - பாறணி முடைதலை - பேய்கள் கொண்டு விளையாடும் முடைநாற்ற முடைய மண்டை ஓடு; கலன் - அணிகலம்; மாறணி வேறுடை ஒன்றற்கொன்று மலைந்து அழகுபொருந்த வரும் அலைகளையுடைய இடமும், வயலும் அழகிய பொழிலும் வெவ்வேறாகப் பொருந்த உடைய; அது - பகுதிப்பொருள் விகுதி; நெய்தலும் மருதமும் மயங்கிய திணை மயக்கம் குறித்தது;- (9) சட சட விடுபெனை - சல சல என்றச த்தமுடைய பனந்தோப்பு; இடவகை பட - இடத்திற்பொருந்த; பரப்பாக; வடகம் - மேலாடை; வடகத்தொடு பலிகலந் துலவிய .என்பது இறைவர் பிட்சாடனராகப் பலிக்கு வந்தபோது பலியிட வந்த தாருகவனத்து இருடி பன்னியர் மால்கொண்டு மேலாடை நழுவநின்ற நிலை குறித்தது; வடகத்தொடு பலி கலந்துலவிய - இடவந்த பலியுடனே மேலாடையினையும் கலந்து வீழ்த்து உலாவும் கடை கடை - முன் கடைதோறும்; இடிகரை - அலைகளால் இடிக்கப்பெறும் மணற்கரை; - (10) இப்பாட்டின் கருத்து விளங்கவில்லை; - (11) வரும் கலம் - கடலில் வரும் மரக்கலம்; மணிகள் என்றலுமாம்; கருங்கடலிருங்குலப் பிறப்பர் - கடல் வாழ்நர்; நெய்தனில மக்கள்; பெருங்குலம் - சிவனடியார் கணம். |
| தலவிசேடம் :- திருவலம்புரம் - காவிரித் தென்கரை 44-வது பதி; IV பக்கம் 148 பார்க்க. |
3302 | தேவர்பெரு மான்றன்னைத் திருச்சாய்க்காட் டினிற்பணிந்து பாவலர்செந் தமிழ்மாலைத் திருப்பதிகம் பாடிப்போய் மேவலர்தம் புரமெரித்தார் வெண்காடு பணிந்தேத்தி நாவலர்கா வலரடைந்தார் நனிபள்ளித் திருநகரில். | |
| 148 |
| (இ-ள்.) தேவர் பெருமான் தன்னை.....பாடிப்போய் - தேவர்களுடைய பெருமானைத் திருச்சாய்க்காட்டினிலே வணங்கிப் பாக்களின் தன்மை விளங்கும் செந்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தினைப் பாடியருளி மேற்சென்று; மேவலர்தம்...ஏத்தி - பகைவர்களது திரிபுரங்களையும் எரித்த இறைவரது திருவெண் காட்டினை வணங்கித் |