| |
| துதித்து அதன் பின்பு; நாவலர் காவலர்....திருநகரில் - நாவலர் பெருமானாகிய நம்பிகள் சென்று திருநனிபள்ளித் திருநகரத்தினை அடைந்தருளினார்கள். |
| (வி-ரை.) பாவலர் செந்தமிழ் மாலைத் திருப்பதிகம் - பா-அலர் - பா பாட்டின் தன்மைகள்; அலர் - விளங்கும்; இஃது இத்திருப்பதிகத்தின் தன்மை குறித்தது. இத்திருப்பதிகம் இப்போது கிடைத்திலது! |
| மேவலர் - பகைவர்; முப்புரவாணர்களாகிய அரக்கர். |
| பணிந்தேத்தி - "படங்கொணாகம்" என்ற திருப்பதிகம் போற்றிசைத்து. |
| நாவலர் காவலர் - தமிழ் நாவலர் பெருமான்; திருநாவலூரார் தலைவர் என்றலுமாம். |
| 148 |
| திருச்சாய்க்காடு - நம்பிகள் பதிகம் கிடைத்திலது! தலவிசேடம் - காவிரி வடகரை 9-வது பதி; IV பக்கம் 151 பார்க்க. |
| திருவெண்காடு |
| திருச்சிற்றம்பலம் | பண் - இந்தளம் |
| படங்கொ ணாகஞ் சென்னி சேர்த்திப் பாய்பு லித்தோ லரையில் வீக்கி அடங்க லாரூ ரெரியச் சீறி யன்று மூவர்க் கருள்பு ரிந்தீர் மடங்க லானைச் செற்று கந்தீர் மனைக டோறுந் தலைகை யேந்தி விடங்க ராகித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காடனீரே. | |
| (1) |
| விரித்த வேத மோத வல்லார் வேலை சூழ்வெண் காடு மேய விருத்த னாய வேதன் றன்னை விரிபொ ழிற்றிரு நாவ லூரன் அருத்தி யாலா ரூரன் றொண்ட னடியன் கேட்ட மாலை பத்துந் தெரித்த வண்ண மொழிய வல்லார் செம்மை யாளர் வானு ளாரே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- வேலை சூழ் வெண்காடனீரே! தலை கையேந்தி விடங்கராகித் திரிவதென்னே? விழித்துகந்த வெற்றி யென்னே? என்பன முதலியனவாக இறைவரது அருட் செயல்களை வினாவும் வகையாற் பரவியது. "அடியன் கேட்ட மாலை". |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அடங்கலார் - பகைவர்; மூவர் - முப்புரங்களின் அரக்கர்களுள் அன்பர் மூவர்; மடங்கலான் - நரசிங்கம்; விடங்கர் - அழகிய நக்க உருவம்; தாமாகவே மேற்கொண்ட தென்பதும் குறிப்பு;- (2) முன்னை வேடம் இழித்துகந்தீர் - சிவனும் சத்தியுமாய் முன்கொண்டவேடத்தை மாற்றினீர்; இமையவர்க்கும்....உகந்தீர் - மோனநிலை மேற்கொண்டீர்; உயர்தவம் - கல்லாலின் கீழ் அமர்ந்த குரு மூர்த்த வேடம்; தாதை காண அழித்துகந்த - தாதை - விட்டுணு - வெற்றி - காத்தற் கடவுளான விட்டுணுவும் காக்க மாட்டாமையால் தாமே முழுமுதல்வர் என்றறிவித்தமை;- (3) பாரிடம் - பூதகணம்; பாரிடம் உம் - பாதம் போற்ற என்க; பாரிடமும் போற்ற என்றலுமாம். உம்மையன்றே - வாய் திறவாமல் வாளா இருத்தலின் உம்மைத் தானே வினவுகின்றேன் என்று அவரது கவனத்தைப்பெறக் குறித்தழைக்கும் மொழி; கரணம் - படிறு செய்யும் கோலம்;- (4) பண்ணுளீராய்ப் பாட்டு மானீர் - "பாட்டிற் பண்ணாம்" (தேவா) "இன்னிசை வீணையி லிசைந்தோன் காண்க, அன்னதொன் றவ்வயி னறிந்தோன் காண்க" (திருவா); "அறிவானுந் தானே அறிவிப்பான் றானே, அறிவா யறிகின்றான் |