| |
| றானே" (அம்மையார் - அற் - அந்); பாட்டினிற் பண் உள்ளது; பண்ணினுள்ளவர் பாட்டிலும் உள்ளவர் இறைவர்; அத்துவிதக் கலப்பு உணர்த்தியபடி; "அவையே யாய்" நிற்கும் நிலை; கண்ணுளீராய் - உள்ளே விரவியிருப்பவராக; காணும் வண்ணம் மண்ணுளீராய் - உலகில் வெளிப்படக் காணும்படி; மதியம் வைத்தீர் - பிறையினைக்காணும் தோறும் அதுகொண்டு இறைவரையும் அங்கே காணும்படி பிறையினைக் காணவைத்தீர்;- (5) குடம் - திருமஞ்சனக்குடம்; வடம் - அணிகலம் (6) மாறுபட்ட - பகைத்த; கூறு - ஒரு பாகம்; கொடி - கொடி போல்வாராகிய உமையம்மையார்; வேறுபட்டு - வேற்றுக்கோலம் காட்டி; (7) ஏழில் - இசை; ஏழு சுரங்களை உடையது;- (8) குரவு - குராமலர்; கொங்கை மாதர் கங்கை - மாதராகிய கங்கை; பழிகள் - குற்றங்கள்; முன் வந்தனவும் இனி வருவனவுமாகிய பழிச்சொற்கள்; "பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை வாராமே தவிரப் பணிப்பானை" (நம்பி - ஆரூர் - தக்கேசி - 2); "கட்டமும் பிணியும்...விட்ட வேட்கை வெந்நோய்" - என்பனவும் காண்க;- (9) நிச்சயத்தால்...நினைப்புளார் - பிறழாத உறுதியாகிய பற்று; - (10) வேலைசூழ் - கடற்கரையின் அணிமையில் உள்ள; கேட்ட மாலை பத்தும் - என்னே? என்று வினாவாகக் கேட்டுப் பரவிய; மாலை பத்து - ஒவ்வொரு பாட்டும் தனித்தனி மாலை எனப்படும்; "பனுவல்" என்றும் கூறுப. |
| தலவிசேடம் :- திருவெண்காடு - காவிரி வடகரை 11வது பதி; IV - பக்கம் 157 பார்க்க.தலவிசேடம் :- திருவெண்காடு - காவிரி வடகரை 11வது பதி; IV - பக்கம் 157 பார்க்க. |
3303 | நனிபள்ளி யமர்ந்தபிரான் கழல்வணங்கி நற்றமிழின் புனிதநறுந் தொடைபுனைந்து திருச்செம்பொன் பள்ளிமுதற் பனிமதிசேர் சடையார் தம் பதிபலவும் பணிந்துபோய்த் தனிவிடைமேல் வருவார்தந் திருநின்றி யூர்சார்ந்தார். | |
| 149 |
| (இ-ள்.) நனிபள்ளி...புனைந்து - திருநனிபள்ளியில் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமானது திருவடிகளைப் பணிந்து நல்ல தமிழின் இனிய தூய நறிய மாலையினைப் புனைந்து; திருச்செம்பொன்பள்ளி...பணிந்துபோய் - திருச்செம்பொன் பள்ளி முதலாகக் குளிர்ச்சி பொருந்திய சந்திரனை முடித்த சடையினையுடைய இறைவரது பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று; தனிவிடைமேல்...சரர்ந்தார் - ஒப்பற்ற இடபத்தின்மேல் வரும் இறைவரது திருநின்றியூரினைச் சார்ந்தருளினர். |
| (வி-ரை.) நற்றிமிழின் புனித நறுந்தொடை - நன்மை, இனிமை, தூய்மை, நறுமை என்பன இப்பதிகச் சிறப்புக்கள். இவற்றைத் தனித்தனி இப்பதிகத்தினுள் வைத்துக் கண்டுகொள்க; "நாதிலன்" "நாடுடை நம்பெருமான்" "நானுடை மாடு", "நங்கட்கருளும்", "காலமு நாழிகையும் நனிபள்ளி மனத்தினுள்கி" என்பன முதலியவை சிந்திக்க. |
| பதி பலவும் - இது திருப்பறியலூர், திருவிளநகர், திருமயிலாடுதுறை, திருக்கஞ்சாறு முதலாயின என்பது கருதப்படும். |
| தனிவிடை - தனி - ஒப்பற்ற; ஒன்று என்றலுமாம். "நரை வெள்ளேறொன் றுடையானை" "ஊர்வதோர்விடை யொன்றுடையான்" "ஒன்று கொலாமவரூர்வது தானே" (தேவா). |
| 149 |