[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்167

  திருநனிபள்ளி
  திருச்சிற்றம்பலம்

பண் - பஞ்சமம்

 
ஆதியன் னாதிரையன் னயன் மாலறி தற்கரிய
சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் காமறை நான்கினையும்
ஓதிய னும்பர்தங்கோ னுல கத்தினு ளெவ்வுயிர்க்கும்
நாதிய னம்பெருமா னண்ணு மூர்நனி பள்ளியதே.
 

(1)

 
காலமு நாழிகையுந் நனி பள்ளி மனத்தினுள்கிக்
கோலம தாயவனைக் குளிர் நாவல வூரன்சொன்ன
மாலை மதித்துரைப்பார் மண் மறந்துவா னோருலகிற்
சாலநல் லின்பமெய்தித் தவ லோகத் திருப்பாரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- "நம்பெருமான் நண்ணுமூர் நனிபள்ளியதே" என்றபதிக மகுடம் காண்க.
  பதிகப் பாட்டுக் குறிப்பு :- ஆதிரையன் - "ஆதிரை நாளுகந்தான்" (தேவா); சொற்பொருளாய் - சொல்லுக்கெல்லாம் பொருளாயுள்ளவன்; ஓதியன்...உலகத்தினுளெவ் வுயிர்க்கு நாதியன் - எண்பத்துநான்கு நூறாயிரமாம் யோனிபேதம்....உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்" (தேவா); நாதியன் நாதன்; தலைவன்; ஆதரவு தருபவன்;- (2) உறவிலி - "ஆருற்றார்" (திருவா); அற இலகும் - அறமுற்றி; இலகுதல் - விளங்குதல்; வண்டு மருளார் பொழில் அறையும் "வண்டு மருள்பாடும்" மருள் - இசை வகை; நற(வு) - தேன்; (3) அமர்ந்தான் - விரும்பினான்; தீ....புகுந்தான் - உடலில் உயிர்த் தீ உருவாய்ப் போந்து உயிருள்ளளவும் நிற்பவன்; மாடு - செல்வம்;- (4) இடமாமலை....நாடுடை - ஏழ்மலையு மேழ்கடலும் சூழ்ந்த எல்லா நாடுகளையும் தன்னதாகவுடையவன்;- (5) பண்ணற்கரிய - கால்விரலால் வட்டமாகக்கீறி எடுக்கப்பட்ட ஆழியாதலின் வேறு யாவராலும் செய்தற்கரிய; படைத்து - கால்விரலால் வட்டங்கீறி உளதாக்கி; கண்ணற்கருள் புரிந்தான் - "சலந்தரனைப் பிளந்த சுடராழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக்கருளி" (தேவா - நம்பி - கலயநல்லூர் - 2); கருதாதவர் - தக்கன்; உண்ணற்கு - உண்டதன் பொருட்டு; ஓட உதைத்துகந்து - வீரபத்திரரால் தக்கயாக சங்காரம் நிகழ்த்தி;- (6) ஆரணன் - வேதங்களின் பொருளானவர்; (8) நுண்ணியனாய் - யானேது மறியாமே என்னுள் வந்து" (தேவா). ஏழ்பிறப்பும்...நங்கட் பிணி களைவானாகிய அருமாமருந்து என்க; (9) ஞானம் - சிவஞானங் குழைத்த அமுது; (10) காலமுநாழிகையும்...உள்கி - இடை விடாது எக்காலமும் நினைந்து; தவலோகம் - சிவனுலகம்; தவத்தின் பயனாகிய உலகம்; தவம் - சிவபூசை.
  தலவிசேடம்:- திருநனிபள்ளி - காவிரித் தென்கரை 43-வது பதி; III பக்கம் 284 பார்க்க.
3304
நின்றியூர் மேயாரை நேயத்தாற் புக்கிறைஞ்சி
ஒன்றியவன் புள்ளுருகப் பாடுவா ருடையவர
சென்றுமுல கிடர்நீங்கப் பாடியவே ழெழுநூறும்
அன்றுசிறப் பித்தஞ்சொற் றிருப்பதிக மருள்செய்தார்.
 

150