170 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| | | தொடர்ந்த - வழிபட்ட; பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து - பரவுதலாலும் உள்குதலாலும் பாச நீக்கமும், வந்து நுன்பரதத்தை யடைந்தேன் - என்றலால் சிவப்பேறும் குறிப்பாலுணர்த்தப்பட்டன; "ஏகனாகி யிறைபணி நிற்க" என்றும், "அயரா அன்பி னரன்கழல் செலுமே" என்றும் வரும் போதம் 10-11-ம் சூத்திரக் கருத்துக்கள் காண்க; மொழி மனம் மெய் என்ற மூன்றானும் ஒன்றித்த வழிபாடும் குறிக்கப்பட்டது கண்டுகொள்க. அத்தகு - அத்தகுதி; அகரம் பண்டறிசுட்டு; சிறப்புணர்த்திற்று; - (5) சந்தி - மூன்றிலும் -நல்கிய - காலை - நண்பகல் - மாலை என்ற மூன்றும் சந்தி எனப்படும்; தாபர நிறுத்தி - தாபரத்தினால் - விதித்த மண் முதலியவற்றால் - சிவலிங்கம் தாபித்து; சகளி செய்து இறைஞ்சு - அத்தாபரத்தின்கண் பாவனை, மந்திரம், செயல் என்ற மூன்றானும் அகமும் புறமும் சிவாகம விதிப்படி பூசிக்கும்; பொதியிற் சேர்வு - பொதிகையிலிருக்கையும் அங்குக் காட்சி காண வரமும்; இந்திரர்களுள் ஒருவன் வழிபட வானாட்சி யருளியதும் தல வரலாறுகளுள் ஒன்று;- (6) ஆலநிழலில் அறமுறைத்த வரலாறு குறிக்கப்பட்டது; காது பொத்தரைக்கின்னரர் - இறைவரது உபதேச மொழிகள் சிறிதும் புறஞ் செல்லாது முழுதும் செவிப்புலனுழையும்படி காதுகளைப் பொத்தியபடியிருந்த கின்னரர்; பசுக்கள் முதலியவை, சத்தம் கேட்கும்போது செவிகள் ஒருமுகமாகக் குவித்துக்கொள்ளும் இயல்பும் காண்க. உழுவை - புலி; பன்னகம் - பாம்பு; சீயம் - சிங்கம்; மாதவர் குழு - முனிவர்கள்; (நால்வர்?) ஆல்நிழற் கீழறம் பகர - இவ்வாறு புலி முதலியவையும், கின்னரர் முனிவர்களும் கேட்க ஆலநிழலில் இறைவர் அறம் சொன்ன வரலாற்றுக்கேற்ப உள்ள திருவுருவம் பரதகண்டத்தின் வடக்கில் சிந்து நதிக்கரையில் புதைந்திருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மொகஞ்சோதாரோ ஹரப்பா என்ற மிகப் பழ நகரங்களிற் கண்ட சிலாவுருவங்களுட் பெறப்பட்டுள்ளன; தென்னாட்டில் உள்ள கோயில்களுள் இத்தகைய உருவம் காணப்படவில்லை. காது பொத்தரைக்கின்னரர் என்றது "போர்த்த நீள்செவி யாளரந் தணர்க்குப் பொழில்கொளானிழற் கீழறம் புரிந்து" (திருப்புன்கூர் - 7) என்றவிடத்து நம்பிகள் அருளியவாற்றாலும்; ஏனைப், புலி நாகம் முதலியவற்றுக்கும் கின்னரர் முதலியோர்க்கும் அருளியது "இயக்கர் கின்னரர் நமனொடு வருண ரியங்கு தீவளி ஞாயிறு திங்கள், மயக்கமில்புலி வானரர் நாகம் வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம், அயர்ப்பொன் றின்றி நின் றிருவடி யதனை யர்ச்சித் தார்பெறு மாரருள்" (மேற்படி - 6) என்றதனாலு மறிக. போர்த்த - பொத்திய; நீள்செவி - உபதேசங் கேட்கும் வசதிப் பொருட்டு நீண்டசெவியினைப் பெற்றனர் என்பர். ஏதஞ் செய்தவர் - ஏதம் - நன்மை - நற்செயல் என்ற பொருளில் வந்த அரிய வழக்கு; "ஏத நன்னில மீரறு வேலி" (தேவா) என்றது காண்க. இதனை வகர உடம்படு மெய்யாய் வந்தமை எண்ணாது, வேதம் செய்தவர் என்று பிழைபடக்கொண்டு, வேதங்கள் இறைவர் வாக்கன்று - இருடிகள் - முனிவர்கள் வாக்கு என்ற தமது பிழைபட்ட நவீனக் கொள்கைகளுக்குத் தேவார ஆதரவு தேடி அபசாரப்படுவோரு முளர்; ஏதம் என்றதற்குரிய மோனையாக எய்திய இன்பம் - இயானும் இணையடி என்று மேல் வருவனவற்றையும் அவர் ஓராராயினர்;- (7) ஐராவதம் வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறு; கோடு நான்குடைக் குஞ்சரம் - நான்கு கொம்புகளையுடைய யானை; ஐராவதம் இந்திரனது யானை; பீடும் வான்மிசைப் பெருமையும் - பீடு - மண்ணின்மேல் காட்டானையாகத் திரிக என்ற துர்வாசரது சாப விமோசனம்; விண்மிசைப் பெருமை - மீளவும் தேவலோக இருப்பு; பேடை....கிள்ளையுமென - மஞ்ஞை - மயில்; கன்று - மான்கன்று; பிள்ளைக் |
|
|
|
|