| கிள்ளை - கிளிப்பிள்ளை; இவை இயலாலும் நடையாலும் பேச்சாலும் பெண்களுக்கு உவமமாயின; என - போல; உவமவுருபு; என்று சொல்லும்படி; என நிலாவு - என்று கூட்டுக. |
| தலவிசேடம் :- திருநின்றியூர் - III - பக்கம் 283 பார்க்க. காவிரி வடகரை 19-வது பதி. |
3305 | அப்பதியி லன்பருட னமர்ந்தகல்வா ரகலிடத்திற் செப்பரிய புகழ்நீடூர் பணியாது செல்பொழுதில் ஒப்பரிய வுணர்வினா னினைந்தருளித் தொழலுறுவார் மெய்ப்பொருள்வண் டமிழ்மாலை விளம்பியே மீண்டணைந்தார். | |
| 151 |
| (இ-ள்.) அப்பதியில்....அகல்வார் - அப்பதியின்கண் அன்பர்களுடன் கூடி விரும்பி எழுந்தருளியிருந்து மேற்செல்வாராகி; அகலிடத்தில்....செல்பொழுதில் - சொல்லுதற்கரிய தாகிய புகழ் நீடூரினைப் பணியாமற் செல்லும்போது; ஒப்பரிய...தொழலுறுவார் - ஒப்பில்லாத மெய்யுணர்வினால் நினைந்தருளி வந்து தொழுவதனை மேற்கொள்வாராகிய நம்பிகள்; மெய்ப்பொருள்....மீண்டணைந்தார் - மெய்ப்பொருளை விரிக்கும் வளப்பமுடைய தமிழ்மாலைத் திருப்பதிகம் பாடியே மீண்டு வந்து அணைந்தருளினர். |
| (வி-ரை.) அகலிடத்தில் செப்பரிய புகழ் நீடூர் - அகலிடம் - இடமகன்ற நிலவுலகம்; புகழினையுடைய நீடூர் என்றும், புகழ் நீடும் ஊர் என்றும் சிலேடை நயம்படக் கூறிய கவிநலம் காண்க. "செல்வ நீடூர் திருநீடூர்" (முனையடுவார் புரா. 1) |
| பணியாது செல்பொழுதின் - திருநின்றியூரினின்றும் செல்லும்பொழுது அணிமையில் உள்ள திருநீடூரிற் சென்று பணியாது மேலே செல்லத் தொடங்கியபோது; |
| ஒப்பரிய உணர்வினால் உணர்ந்தருளி - ஒப்பரிய உணர்வு - மெய்யுணர்வு; இது எஞ்ஞான்றும் சிவனை மறவாத நிலையினால் உண்டாவது; செல்லும் வழியில் ஒரு சிவாலயம் இருப்பின் அடியார்கள் அதனைச் சென்று வழிபட்டன்றி மேற்செல்லலாகாது என்பது விதி; அவ்விதி கடந்து செல்வது பிழையாமென்பது உணர்வினில் தானே உணர வருவது மெய்யுணர்வின் இலக்கணம். "நானேது மறியாமே யென்னுள் வந்து நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்" (தேவா). |
| தொழல் உறுவார் - தொழுவதனை மேற்கொண்டார். |
| மெய்ப்பொருள் வண் தமிழ்மாலை - உண்மைப் பொருளைப்பற்றி வெளிப்போந்த வளப்பமுடைய திருப்பதிகம்; மெய்ப்பொருள் - மெய்யுணர்வினால் வருவது; வண்மை - அதனை உலகுக்கறிவித்து உய்விப்பது. விளம்பியே - பாடியருளியவாறே; ஏகாரம் அதன் வண்மை உணர்த்திற்று; மேற்பாட்டும் பார்க்க. இப்பதிகம் மீண்டணையும் வழியில் அருளியது. |
| 151 |
3306 | "மடலாரும் புனனீடூர் மருவினர்தாள் வணங்காது விடலாமே "யெனுங்காதல் விருப்புறுமத் திருப்பதிகம் அடலார்சூ லப்படையார் தமைப்பாடி யடிவணங்கி உடலாரு மயிர்ப்புளகம் மிகப்பணிந்தங் குறைகின்றார். | |
| 152 |
3307 | அங்கணினி தமர்ந்தருளாற் றிருப்புன்கூ ரணைந்திறைஞ்சிக் கொங்கலரு மலர்ச்சோலைத் திருக்கோலக் காவணையக் | |