| |
| குண்டையூர் - திருவாரூரினின்றும் தென்கிழக்காய்த் திருஏமப்பேறூர், திருக்காறாயில், திருவலிவலம் என்ற இவற்றின் வழியாய் மட்சாலைவழி 10 நாழிகையளவில் அடையத் தக்கது. குண்டையூர் பெருந்தலமன்றாதலால் நம்பிகள் அருகில் உள்ளதும் சத்தவிடங்கத் தலங்களுள் ஒன்றும் ஆகிய திருக்கோளிலிக்குச் சென்று பதிகம் பாடியருளினர் போலும். குண்டையூரின் எல்லையடங்கவும் நென்மலைப் பிறங்கல் ஓங்கி ஆளியங்காவாறு வழி அடைத்ததாதலின் அருகு உள்ள பதியிற் சென்றனர்என்று கருதவுமிடமுண்டு. இந்நென்மலை பின்னர்த் திருவாரூர் அடங்கவும் நிறைந்து (3179) நெறிபலவும் போக்கரிதாக நிறையும் (3181) திறமும் இங்குக் கருதுக. |
| "வாளன கண்மடவாள் வருந்தாமே" என்னும் பதிகம் - பதிகக் கருத்துரைத்தது; பதிக முதற்பாட்டு; நெல்லிட ஆள் வேண்டுவதன் காரணம் கூறும் வகையில் இது பதிகக் குறிப்புமாயிற்று. பதிக முழுதும் இக்குறிப்பு விரவி வருதலும் காண்க. திருமுதுகுன்றப் பதிகமும் இவ்வாறே காணத் தக்கது. |
| மூளவரும் காதல் - மேன்மேற் பெருகும் பெருவிருப்பம்; மூளுதலாவது இந்நெல்லினால் இனித் திருவாரூர் வாழ்வாரும் அடியார்களும் பயன் பெற உள்ளநிலை பற்றி எழுவதாம். |
| முன் - திருமுன்பு; காலத்தால் முன்னர் என்றலுமாம். பதிகம் - பாடுமுன் தொழுது பாடுதல் மரபு. பதிகம் பாடித் திருவாக்குக் கேட்ட பின்பு தொழுதுல் மேற்காண்க. "தொழுதேத்தி" (3176) |
| பாடுதலும் - நிகழ்ந்தது - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| 20 |
| திருக்கோளிலி |
| திருச்சிற்றம்பலம் | பண் - நட்டராகம் |
| நீள நினைந்தடியே னுமை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி யெம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை யெம்பெருமா னவை யட்டித்தரப் பணியே. | |
| (1) |
| கொல்லை வளம்புறவிற் றிருக் கோளிலி மேயவனை நல்லவர்தாம்பரவுந் திரு நாவல வூரனவன் நெல்லிட வாட்கள்வேண்டி நினைந் தேத்திய பத்தும்வல்லார் அல்லல் களைந்துலகி லண்டர்வானுல காள்பவரே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- பரவையார் வருந்தாமே ஆரூருக்கு நெல்லெடுக்க ஆள் தரவேண்டும். 3174-ல் ஆசிரியர் கூறியவாறும், "ஆளிலை எம்பெருமான் அவையட்டித்தரப் பணியே" (1), "பரவை பசிவருத்தம் அது நீயுமறிதியன்றே" (6), "பரவையவள் வாடுகின்றாள்" (8), "நெல்லிட ஆட்கள் வேண்டி" (10) என்ற பதிகப் பகுதிகளும் பார்க்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நீள நினைந்து - நீள - முன்னை நிலையிலும், அத்தொடர்பறாது இம்மையிலும், இனி வருங்காலத்தும் என்பது குறிப்பு. மடவாள் - பரவையார். 8-ம் பாட்டும் பார்க்க. |
| வாடி வருந்தாமே - அடியார்க்கமுதளிக்க நெல்லில்லாமைபற்றி வருந்தாமல்; அட்டித்தர - கொண்டு உய்த்தல். அட்டிற்றர என்று பாடங் கொண்டும், அட்டில் - |