[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்173

3307. (வி-ரை.) அருளால் அருள் விடைபெற்று மேற்சென்று.
  கொங்கலரும் மலர்ச்சோலைக் கோலக்கா - தலப்பெயரைப் பொருள் விரித்தபடி; கொங்கு - மணம்; அலர்தல் - விரிந்து வீசுதல்; கோலம் - அழகு; கா - சோலை; காரணப்பெயர் என்றற்கேற்ப இன்றும் விளங்குவது காண்க; அணைய - அணையும்போது.
  எதிர் காட்சி கொடுத்தருள - "கோலக் காவினிற் கண்டுகொண் டேனே" என்ற பதிக மகுடம் இதற்கு அகச்சான்றாகும்.
  போற்றிசைப்பார் - போற்றிசைத்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. போற்றுவார் அருளிப்பாட்டினைப் போற்றிப் பாடினார் என்க.
  திருப்புன்கூர்அணைந்திறைஞ்சி - இதுபோழ்து நம்பிகளருளிய பதிகம் கிடைத்திலது! "அந்தணாளன்" என்ற பதிகம் பின்னர் அருளியது.
 

153

  3308. (வி-ரை.) திருஞானசம்பந்தர்....அளித்தபடி - திருத்தாளம் பெற்ற வரலாறு முழுமையும் சுருக்கிக்கூறிய கவிநயம் கண்டுகொள்க; திருஞானசம்பந்தர் திருக்கைகளா லொற்றி - "தாவில் தனிச் சிவஞான சம்பந்த ராயினார்" (1967) என்ற நிலைபெற்ற நாளை அடுத்த நாள் தாளம் பெறுதலால் திருஞானசம்பந்தர் என்ற இப்பெயராற் கூறினார் நம்பிகள் பதிகத்துள் இத்திருப்பெயராற் கூறியமையும் குறிப்பு.
  ஒற்றி - ஒத்தித் தாள ஒத்தறுத்தது.
  இரங்கி - பிள்ளையாரது பங்கயத்தினின் மிக்க மென்மையான கைம்மலர்கள் நேரம் என்று இரங்கி; "பாடலுக் கிரங்கும்" நம்பிகள் பதிகம் (8) பார்க்க.
  திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்து - அளித்த வரலாற்றினைப் பாராட்டி. பதிகம் (8) பார்க்க. திருத்தாளமுடையார் கோயில் எனப் பெயர் இன்றும் வழங்குதல் காண்க. இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதமாதலின் அதனைக் கூறிப்போற்றினார்; அவ்வற்புத அருள்நிகழ்ச்சி நடந்தது என்ற உண்மை பற்றிய தேவாரச்சான்றுமாம்.
 

பொருள்மாலைத் திருப்பதிகம் - இறைவரது பேரருட்டன்மைகளும் அவர் நம்பிகளை ஆட்கொண்ட வண்ணங்களும் பொருள்களாக எடுத்துக்கூறிய திருப்பதிகம்.

 

154

  திருக்கோலக்கா
  திருச்சிற்றம்பலம்

பண் - தக்கேசி

 
புற்றில் வாளர வார்த்த பிரானைப் பூத நாதனைப் பாதமே நினைவார்
பற்று வான்றுணை யெனக்கெளி வந்த பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரமொரு மூன்றும் பொன்ற வென்றிமால் வரையரி யம்பாக்
கொற்ற வில்லங்கை யேந்திய கோனைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
 
அன்று வந்தெனை யகலிடத் தவர்முன் னாள தாகவென் றாவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை யொளித்தநித்தி லத்திரட் டொத்தினை
முத்திக்
கொன்றி னான்றனை யும்பர் பிரானை யுயரும் வல்லர ணங்கெடச் சீறுங்
குன்ற வில்லியை மெல்லிய லுடனே கோலக் காவினிற் கண்டுகொண்டேனே.
 

(5)

 
நாளு மின்னிசை யாற்றிமிழ் பரப்பு ஞான சம்பந் தனுக்குல கவர்முன்
றாள மீந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை யாளனை யென்மனக் கருத்தை