174திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

யாளும் பூதங்கள் பாடநின் றாடு மங்க ணன்றனை யெண்கண மிறைஞ்சுங்
கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்கோலக் காவினிற்கண்டுகொண்டேனே.
 

(8)

 
கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக்கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப்
பாட ரங்குடி யடியவர் விரும்பப் பயிலு நாவலா ரூரன்வன் றொண்டன்
நாடி ரங்கிமுன் னறியுமந் நெறியா னவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காட ரங்கென நடநவின் றான்பாற் கதியு மெய்துவர் பதியவர்க் கதுவே.
 

(8)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு : - இறைவர் எதிர்காட்சி கொடுத்தருளப் பெருவிருப்பாற் கண்டுகொண்டு அவரது அருளிப்பாடுகள் பலவற்றையும், தமக்கெளிவந்தருளிய தன்மையினையும், திருஞானசம்பந்த நாயனாருக்குத் தாளமீந் தருளியகருணையினையும், மற்றும் மெய்ப்பொருள் பலவற்றையும் போற்றியது.
  பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பாதமே தொழுவார் பற்றுகின்ற பெரிய துணைவர்; பாதமே தொழுவார்க்குத் துணைவராயும் எனக்கும் எளிவந்தவர். அவ்வாறல்லாத எனக்கும் என்க; உம்மை தொக்கது; வான் - பெரிய; பாதமே - ஏகாரம் பிரிநிலை; மேவரியான் - ஆன்ம முயற்சி - போதங்களாற் சென்று பொருந்த லரியவர்; "சென்றடையாத திருவுடையான்" (தேவா); முற்றலர் - பகைவர்; வரை வில்லாக, அரி அம்பாக - அங்கை ஏந்திய என்று கூட்டுக; "எயிலார் சாய எரித்த" (பிள். தேவா - கோலக்; 5); அம்பா - அம்பாக; அரி - விட்டுணு; கோலக் காவினிற் கண்டுகொண்டேனே என்ற குறிப்பு நகர்ப்புறத்து எதிர்காட்சி கொடுப்பக் கண்ட சரித நிலை குறித்தது. "கழுமல வளநகர்க் கண்டுகொண்டேனே" என்றது கருதத்தக்கது;- (2) தோளி - தோள்களையுடைய உமை அம்மையார்; தழல்மதி - கயநோயுடைய மதி; சந்திர சாபம் குறித்தது; தழல் - தீ - தீப்போல உள்ளிருந்து அழிக்கும் என்ற பொருளில் வந்தது; பிரிந்தார்க்குத் தழல் போல வெம்மைதரும் என்றலுமாம்; தனக்கென்று வேறு ஒளியின்றித் தழலுருவாயின இரவியினால் ஒளிபெற்று விளங்கும் மதி என்றலும் பொருந்தும்; குர - குரா மலர்; வெறி - மணம்;- (3) பாட்டகத்து இசையாகி - "பாட்டிற் பண்ணாம்" (தேவா); பரிவு இனியான் - அன்பினுள் இனிக்கின்றவன்; அன்பு செய்யச் செய்யச் சுவைதருபவன்; நாட்டகத் தேவர் செய்கையுளான் - நாட்டகம் - வான நாட்டில்; எந்நாட்டிலுமுள்ள என்றலுமாம். "நாடிரங்கி முன்னறியுமந் நெறியால்" (10); "நாட்டகத் தேவர்கள் நாடரும் பொருளே" (திருவா); கோட்டகம் - கரைகளிடையே; கோடு - கரை; - (4) ஆத்தம் ஆளுகந்தானை - நம்பிகள் சரித அகச்சான்று; ஆத்தம் - அன்பு உரிமை; ஆப்தம் என்றது ஆத்தமென நின்றது; மடமான் - மான் போன்ற உமையம்மையார்; குருமாமணி - குருவாகி வந்தருள்பவர்;- (5) அன்று...ஒளித்த - மணப்பந்தலில் யாவருங் காணவந்ததும், ஆளதாக என்று - "என்அடியான் இந்நாவலா ரூரன்" என்றதும், ஆவணங் காட்டி - ஆளோலை காட்டிய வரலாறும், நின்று வெண்ணெய் நல்லூர்மிசை ஒளித்த - வெண்ணெய் நல்லூரில் வழக்குவென்று திருக்கோயிலில் போய் ஒளித்ததும் ஆகிய நம்பிகள் சரிதப் பகுதிக்குப் பேராதரவாகிய அகச்சான்று; முத்திக் கொன்றினான் - முத்தி நிலையில் முத்தான்மாக்களுடன் பிரிப்பின்றி ஒன்றித்து நிற்பவர்; மெல்லியலுடனே - தாமும் தேவியாருமாக எதிர்காட்சி கொடுப்பக் கண்ட குறிப்பு;- (6) காற்று....நின்றானை - ஐம்பூதங்களுள் நிறைந்த