| நிலை; மால்விடையான் - காத்தற்றொழில் குறித்தது; நீற்றுத் தீயுரு - ஊழித்தீ; நீற்று - நீற்றுகின்ற தீ; தொழுமவன் - மார்க்கண்டர்; போக்குவான் வந்த கூற்றை என்று கூட்டுக வந்த - சொல்லெச்சம்; போக்குவான் - போக்கும் பொருட்டு; கூற்றை உயிர் நீக்கிடத் தாளால் தீங்கு செய் என்று கூட்டு; கழல் - வெற்றிக் குறிப்பு;-(7) குழகன் - அழகன்; "குழகன் கோலக்கா" (பிள். தேவா - 3);- (8) திருஞான சம்பந்த நாயனாருக்கு இப்பதியிற் றிருப்பொற்றாளம் அளித்த சரிதம் போற்றப்பட்டது. ஆசிரியர் (3308) எடுத்துக்காட்டி யருளினர்; சரித ஆதரவு. ஆளும் பூதங்கள் - சிவபெருமானால் ஆளப்படும் எனப் பிறவினைப் பொருள் கொள்க; "குழுக்கொள் பூதப்படையான்" (பிள். தேவா. கோலக். 4); இறைவராணைப்படி உலகை ஆளும் என்றலுமாம்;- (9) இரங்கியவென்றி - ஆற்றல் அழித்ததற்கு மேலாய், இரக்கங் கொண்டதே பெருவெற்றி என்பது குறிப்பு. பரக்கும்....அரியானை - பாரளிக்கும் அரசர் தமது உலகபோக உயர்வு தோன்றச் செயல் செய்கின்றமையால் அவர்கள் வந்து பணிதற்கரியவன் என்றார்; உலகபோகம் நிலையழிந்தபோதேஇறைவர்பாற் பணிவு வரும் என்பது; சிரக்கண்....தீர்த்த - சிரம் கண் வாய் செவி மூக்கு என்ற அவயவங்களைக் கொண்ட உடம்பினைக் கொடுத்து, அதனுள்ளே வாழும்உயிருடன் அறியவாராதபடி தாமும் பிணைந்து நின்று, தீவினைகளைப் பயன் தூய்ப்பித்துத் தீர்க்கும்; தக்க யாகத்தில் தேவர்கள்பால் செய் வீரங்கள் என்றலுமாம்;- (10) கோடரம் - கோடர் - சிகரம்; (குவடு?) அம் - சாரியை; கோடரம்பயில் - சிகரமாக முடித்துக் கட்டிய; மெய்ம்மானப் பாடர் - உண்மையும் பெருமையும் கொண்ட பாட்டுக்களைப் பாடுபவர்களாகி; பாட்டர் - என்பது பாடர் என நின்றது. பாடு - பெருமையெனக் கொண்டு பெருமையையுடையோர் என்றலுமாம். இப்பொருளில் மானப்பாடு - இருபெயரொட்டு; அம்குடி அடியவர் - அழகிய குடிமைக் கண் அடியினை அடைந்தவர்; அடியே குடியாகஅடிந்தவர்; அம் - அழகிய; நாடிரங்கி...நெறியால் - உலகம் உய்ய; இரங்கி - அன்பினாற் குழைந்து; காடு அரங்கென - சுடுகாடே ஆடரங்காக; நடநவிலுதல் - கூத்தாடுதல். நவிலுதல் - மரபு வழக்கு; பதி - நிலையான இருப்பிடம்; பதி - பதிந்த என்றதும் குறிப்பு; அது நடமுடையான்பாற் சாருநிலை. |
| தலவிசேடம் :- திருக்கோலக்கா - காவிரி வடகரை 15வது பதி; IV - பக்கம் 132 பார்க்க. (பாட்டு 2002-ன் கீழ்). |
3309 | மூவாத முழுமுதலார் முதற்கோலக் காவகன்று தாவாத புகழ்ச்சண்பை வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி நாவார்முத் தமிழ்விரகர் நற்பதங்கள் பரவிப்போய் மேவார்தம் புரஞ்செற்றார் குருகாவூர் மேவுவார், | |
| 155 |
3310 | உண்ணீரின் வேட்கையுட னுறுபசியான் மிகவருந்திப் பண்ணீர்மை மொழிப்பரவை யார்கொழுநர் வரும்பாங்கர்க் கண்ணீடு திருநுதலார் காதலவர் கருத்தறிந்து தண்ணீரும் பொதிசோறுங் கொண்டுவழிச் சார்கின்றார். | | | 156 |
3311 | வேனிலுறு வெயில்வெம்மை தணிப்பதற்கு விரைகுளிர்மென் பானன்மலர்த் தடம்போலும் பந்தரொரு பாலமைத்தே | |