| முத்தமிழ் விரகர் நற்பதங்கள் பரவிப்போய் - பிள்ளையார் அவதரித்த தலம் என்றதனாலே அங்கு மிதித்து உட்செல்லாது போந்தாராதலின், அவரது திருவடிகளைத் துதித்து மேற்சென்றருளினர் என்க. |
| மேவா...மேவுவார் - மேவார் - பகையினர்; முப்புரவாணர். | | மேவார்...மேவுவார் - விரோதவணி என்னுங் சொல்லணி, மேவுவார் - மேவுவாராகி; முற்றெச்சம்; பரவையார் கொழுநர் என்ற எழுவாய் மேற்பாட்டிலுள்ளதனுடன் கூட்டுக. | | நற்பதிகம் - என்பதும் பாடம். |
| 155 |
| 3310. (வி-ரை.) உண்நீரின் வேட்கை - தாகம் என்பர். நீர்வேட்கை என்பதே யமையும்; உண் - என்பது மிகையாம் பிறவெனின்? உண்ணும் நீர் தக்கபடி வேறாயமைக்கவும் கொள்ளவும் படுதல் வேண்டிய நிலை குறிக்க உண்ணீர் எனப்பட்டது; "வெயிலின்வைத், தாற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப, மடாஅ வொருவன் விடாஅ வேட்கை, தெண்ணீர்க் குற்றமன்று" (திருவிடை - மும். கோவை 6) என்ற பட்டினத்து அடிகளார் திருவாக்கும் காண்க; "தண்ணீரமுதம்" (புராண வரலாறு - 82) என்று இதனை விதந்து வேறு கூறியதும் கருதுக. |
| உறுபசி - உறு - பெரியோரிடத்தும் ஓரோர்பொழுது வந்து தாக்கும் தன்மையுள்ள; கனல் வாதை வந்தெய்தின்" (தாயுமா) என்று பெரியோர்களிடம் ஓரோர் கால் வந்து தோற்றப்படுவதன்றி ஏனையோரிடத்துப்போல எப்பொழுதும் உண்பதே தொழிலாயிருக்கும்படி வாராது என்ற குறிப்புப்படக் கூறியது ஈண்டு நினைவு கூர்தற்பாலது. |
| பண்ணீர்மை மொழி - உயர்ந்த சாதிப் பெண்களின் குரலில் பண் அமைந்திருத்தலின் மொழிகள் பண்ணின் தன்மை பொருந்தி வெளிவரும் என்பது. |
| வருந்தி - பசியும் நீர்வேட்கையும் வருத்தினும் அவற்றை அறியாது - பொருட்படுத்தாது - சிவத்தொண்டிற் பிறழாது செல்லுதல் பெரியோரியல்பு; "வழிபோம் பொழுது மிகவிளைத்து வருத்த முறநீர் வேட்கையொடும் அழிவாம் பசிவந்தணைந்திடவு மதற்குச் சித்த மலையாதே, மொழிவேந் தருமுன் னெழுந்தருள" (1569) என்ற அரசுகள் சரிதப்பகுதி ஈண்டு நினைவு கூர்தற்பாலது. |
| கண்நீடு திருநுதலார் கண்நீடு - என்பது அருட்கண் நீடியிருப்பவராதலின் என்று காரணக் குறிப்புப் பெறநின்றது. |
| காதலவர் - எஞ்ஞான்றும் மறவாது தம்பாற் பெருவிருப்புடையவர். |
| கருத்தறிந்து - கருத்து - உடல் வருத்தம் நோக்காது பணியினிற்கும் கருத்து; பசி நீர்வேட்கை வருத்தத்தினை நம்பிகள் அறியாது பணியினின்றாராதலின், அவரது கருத்தினுள் இருந்து, உயிர்க்குயிராகிய இறைவராதலின் அவற்றையெல்லாம் அறிந்தருளி என்பது; "கண்டு காட்டலின்" (போதம் - 11-சூ.) என்ற விடத்து "ஈண்டு அவனும் அவற்றது (உயிர்களது)விடயத்தை யுணரும்" என்று மேற்கோள் எடுத்துக்கூறி யதிகரணம் வகுத்தருளியதும், "முதல்வனும் உயிர்களா னுணரப்படும் விடயத்தை உடனின் றுணருவன்" என்று உரைவகுத்து விரித்தமையும், ஆண்டுரைத்தவையும் இங்கு வைத்துக் கண்டுகொள்க. |
| தண்ணீரும் பொதிசோறும் - நீர்வேட்கை தீர்க்கத் தண்ணீரும், உறுபசிதீர்க்கச் சோறும் என்று நிரனிறையாக் கொள்க; பொதிசோறு - கறியும் கூட்டு உணவு வகைகளும் கூட்டிக்கட்டியசோறு. கட்டுச்சோறு என்பது உலக வழக்கு; பசியினும் கொடியதாய் வருத்தும் சிறப்புப்பற்றி நீர் வேட்கையும், நீரும் முன் வைக்கப்பட்டன; |