| |
| சமையலறை எனக் கொண்டும் சமையலறையில் தர என்றுரைப்பாருமுண்டு;-(2) உமை - பங்குடையாய் "மாதர்நல்லார்வருத் தமதுநீயு மறிதி யன்றே" (3) "இடத்தில் வைத்தாய்";-(4) (5) (6) (7) (மேற்படி) ஆதலின் பரவையாரின் வருத்தம் நீ அறிவாய் என்பது குறிப்பு. அண்டமதாயவன்; -(6) விசுவரூபி.w "அவையே தானேயாய்" (போதம்);-(4) பூசல் - குற்றம்; அல்லல் - வாட்டம்;-(6) குரவு - மயிர்ச்சாந்து; குராமலருமாம். அறிதி - உயிர்க்குயிராய் அமர்ந்து உயிர்களின் நிகழ்ச்சிகளை உடனிருந்தறிவாய்;-(7) எப்பொழுதும் - "நீள" (1) ;- நெல்லிட ஆட்கள் வேண்டி - பதிகக் குறிப்பு. |
| தலவிசேடம் :- திருக்கோளிலி - முன் 2413-ன் கீழ் உரைத்தவை பார்க்க. |
| 3175. (வி-ரை.) "பகற்பொழுது....பூதங்கள்" என - இது பதிகங்கேட்டவுடன் இறைவர் விசும்பிடை நின்று கூறிய அசரீரி வாக்கு. |
| பகற்பொழுது கழிந்ததற்பின் - சிவகணங்களின் செயல் மக்கள் கண்ணுக்குப் புலப்படா வகை நிகழுமாதலால் சென்மலை முழுதும் குண்டையூரினின்றும் 10 நாழிகையளவில் திருவாரூரில் உய்க்கும் நிலை, மக்கள் காணாவண்ணம் பகற்பொழுது கழிந்ததற்பின் - பெய்து தருவன என்றார். |
| பரவை மனையன்றி - ஆரூர் நிறைய - பின் விளைவு (3182) காண்க. இந் நெல்மலை முழுதும் பரவையார்மாளிகையொன்றின்கட் சேர்க்க இயலாதென்பது கருத்து. பரவை யில்லத்து எடுக்க ஆள் (3173) வேண்டிய நம்பியாரூரருக்கு இந்நெல் பரவையார்மனையளவின்றி ஆரூர்நிறையப் பெய்யப் பெறுவன என்றபடி. |
| உலகில் விளங்கிய - உலகத்தில் "ஊழிவெள்ளமும் கொள்ளாக் கழனிஆரூர்" என்றும், "முன்னோ பின்னோ திருவாரூர்கோயிலாக்கொண்ட நாளே" என்றும் மேலும் புகழநின்ற பண்பினாலும் திருத்தொண்டத் தொகை பெறநின்ற பண்பினாலும், பலவாற்றானும் விளக்கம் பொருந்திய. |
| நம் பூதங்கள் - நமது சிவகணங்களாகிய குண்டைக் குறட் பூதங்கள்; "நீடு தேவர்நிலைகளும் வேண்டிடின், நாடு மைப்பெரும் பூதமு நாட்டுவ" (16) என இவைகளின் தன்மையை நூன்முகத்தே உரைத்தவை இங்கு நினைவு கூர்தற்பாலன. |
| விசும்பில் - அருளால் - வாக்கு நிகழ்ந்தது என்க. அசரீரி வாக்கு என்பார் நிகர்ப்பரிய என்றார். ஒலி வெளிப்படுதற்குரிய கருவிகளின்றி நிகழ்வதாலும், சிவனருள் புலப்பட வருதலானும் நிகர்ப்பரி தாயிற்று. |
| 21 |
3176 | தம்பிரா னருள்போற்றித் தரையின்மிசை விழுந்தெழுந்தே உம்பரா லுணர்வரிய திருப்பாதந் தொழுதேத்திச், செம்பொனேர்சடையாரைப் பிறபதியுந் தொழுதுபோய் நம்பரா ரூரணைந்தார்நாவலூர்நாவலனார். | |
| 22 |
| (இ-ள்.) தம்பிரான்.....எழுந்தே - தமது பெருமானாரது திருவருளினைத் துதித்து நிலத்தின்மேல் விழுந்து எழுந்தே; உம்பரால்....ஏத்தி தேவர்களாலும் உணர்தற்கரிய திருவடிகளைத் துதித்துப் பரவி; செம்பொன்நேர்....போய் - செவ்விய பொன்போல விளங்கும் சடையினையுடைய சிவபெருமானைப் பிற பதிகளிலும் வணங்கிச் சென்று; நம்பர்....நாவலனார் - திருநாவலூரில் வந்தருளிய நாவலராகிய நம்பியாரூரர் இறைவரது திருவாரூரை வந்து சேர்ந்தனர். |
| (வி-ரை.) அருள் - அசரீரியால் நிகழ்ந்த அருளிப்பாடாகிய மொழி. |