| அங்கு அருளாற் பள்ளி அமர்ந்து - அருளால் - அருள்வயப்பட்டு; அருள் வயத்தாலன்றி அது துயிலுதற் கான இடமும் காலமுமல்ல என்பது குறிப்பு. "அருளாலோ?" (3202) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; அங்கு - வரும் வழியிடைக் கண்ட அப்பந்தரிடையே; பள்ளி அமர்ந்து - துயின்று; நம்பிகள் என்றஎழுவாய் தொக்குநின்றது. அருகணைந்தார்களும் - உம்மை இறந்ததுதழுவிய எச்சவும்மை. |
| சடைக்கரந்தார்....தாம்கரந்தார் - கரந்தார் - முன்னையது வினைப்பெயர்; பின்னையது வினைமுற்று; சொற்பின் வருநிலை. |
| 162 |
3317 | சித்தநிலை திரியாத திருநாவ லூர்மன்னர் அத்தகுதி யினிற்பள்ளி யுணர்ந்தவரைக் காணாமை "இத்தனையா மாற்ற மறிந்திலே" னெனவெடுத்து மெய்த்தகைய திருப்பதிகம் விளம்பியே சென்றடைந்தார். | |
| 163 |
| (இ-ள்.) சித்தநிலை...பள்ளியுணர்ந்து - மனநிலையின் ஒருசிறிதும் திரிதல் இல்லாத திருநாவலூர்த் தலைவராகிய நம்பிகள் அவ்வாற்றினிலே துயிலுணர்ந்து. அவரைக் காணாமை - அந்த மறைவேதியரைக் காணாமையால்; "இத்தனையாம்....எடுத்து" இத்தனை யாமாற்றம் அறிந்திலேன்" என்று தொடங்கி; மெய்த்தகைய....சென்றடைந்தார் - சத்தாந் தன்மையுடைய திருப்பதிகத்தினைப் பாடியருளியவாறே திருக்குருகாவூரினைச் சென்றடைந்தார். |
| (வி-ரை.) சித்தநிலை திரியாத - துயிலும்போதும் சித்தம் திரியாது அறிதுயில் கொண்டு சிவயோக நிலையில் சிவனை மறவாநிலையில் உள்ள; திரியாதவராயினும் இறைவர் காட்டினாலன்றி அறியுமாறில்லை என்பது குறிப்பு. |
| அத்தகுதியினிற்பள்ளி உணர்ந்து - அந்த நிலையில் நின்றவாறே துயிலுணர்ந்து - |
| காணாமை - காணாதபடியால்; அவரை - மறைவேதியராய்க் காணநின்று பொதிசோறும் நீரும் அளித்த அவரை; முன்னறிசுட்டு. |
| "இத்தனையா மாற்ற மறிந்திலேன்" என இப்பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு; மாற்றம் - மாறுதல்; எடுத்து - தொடங்கி. |
| மெய்த்தகைய - மெய்விளங்கும் தன்மையுடைய; சென்று - அவ்விடத்தினின்றும் திருக்குருகாவூருக்குச் சென்று. |
| திருக்குருகாவூர் வெள்ளடை |
| திருச்சிற்றம்பலம் | பண் - நட்டராகம் |
| இத்தனையா மாற்ற மறிந்திலே னெம்பெருமான் பித்தரே யென்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மணிதன்னை மாணிக்க முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | |
| (1) |
| ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை யாட்கோண்டாய் வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங் காவியங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. | |
| (2) |
| பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஓடுநன் கலனாக வுண்பலிக் குழல்வானே | |