184திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

 
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
 

(3)

 
வளங்கனி பொழின்மல்கு வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை யுறைவானை
இளங்கிளை யாரூரன் வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- இறைவரே! இத்தனையாம் மாறுதல் அடியேன் அறிந்திலேன்; தேவரீர் குருகாவூர் வெள்ளடை நாதர் நீரே யன்றோ? தேவரீர் எனது பசியினைப் போக்கினீர்; ஆவியைப் போகாமே தடுத்து ஆண்டருளினீர். இது சரித ஆதரவான பதிகம்.
  பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) இத்தனை ஆம் மாற்றம் - இவ்வளவும் ஆகும் மாறுதல்; முன் கூறிய சரித வரலாறு காண்க; இத்தனையாமாற்றை - என்பது பாடமாயின் ஆற்றை - ஆற்றினை (வழியை) என்க; அறிந்திலேன் - சித்தநிலை திரியா திருப்பினும் உமது திருவருள் காட்டினாலன்றி யறியுமாறில்லை; ஆதலின் அறிந்திலேன் என்றதாம்; பிறரெல்லாம் - பிறர் உம்மைப் பித்தர் என்னினும் நான் இனி அவ்வாறு சொல்லமாட்டேன் என்பது குறிப்பு; முத்தினை...வித்தனே - அருமைப்படப் பாராட்டிப் போற்றியது; வெள்ளடை - சுவாமி பெயர்;- (2) ஆவியை....ஆட்கொண்டாய் - இச்சரித வரலாற்றுக் குறிப்பாகிய ஆதரவு;- (3) பாடுவார் பசிதீர்ப்பாய் - சரித ஆதரவு; பாடுவாரது பசியினைத் தீர்ப்பீராயினும் நீர்உண்ணப் பலிதிரிவீர் என்று பாராட்டியது;- (4) வெப்பொடு பிணியெல்லாம் - பிறவிப்பிணி யுள்ளிட்ட எல்லாம்; மேல் (5) வரும்பழி என்றதும் காண்க;- (5) வரும் - வரக்கடவதாகிய; பழி - பிறவியால் வரும் கேடு;- (6) பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் - பண் தமிழ் மொழியின் சிறப்பியல்பாகிய பண்; பழத்தினிற் சுவை - அத்துவிதக் கலப்பு; கண்ணிடை மணி - காணுமுபகாரம்; கடுவிருட் சுடர் - காட்டுமுபகாரம்; பாடும் தமிழ் காரணமாகச் சுவை அமுது தந்து கண் காண நின்று ஒளித்தபின் உமது தன்மை விளங்க அறியவைத்தீர் என்றதொரு குறிப்பாகிய உள்ளுறையும் காண்க; மண்ணிடை....வாராமே - சரித ஆதரவு;- (7) போந்தனை - மறைந்து போயினை; நோம்தனை - வருந்துமளவு; நுன்னலது - உன்னையல்லாமல் வேறொன்றினையும் "மற்றுப் பற்றெனக்கின்றி" "மற்று நானறியேன் மறுமாற்றம்" முதலியவை காண்க; சாந்தனை வரும் மேலும் - மேலும் மேலும் இறத்தல் பிறத்தல்; தடுத்தாட்கொண்ட வரலாறும் குறிப்பு: இச்சரித வரலாறும் குறிப்பு; மேல்வரும் இரண்டு பாட்டுக்களும் பார்க்க;- (8) மலக்கு - துன்பம்; சலச்சல மிடுக்கு - மிகவும் துன்பம் செய்யும்வன்மை; கடுந்துயர் - மரணத் துன்பம்;- (9) படுவிப்பாய் - ஆளாக்குவாய், அல்லாதாரது (தொடக்கினைக்) கெடுவிப்பாய் என்க; குஞ், சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வையற" என்பது சிவஞானபோதம்; விடுவிப்பாய் - செல்லவிடுத்தல்;- (10) இளங்கிளை - சிறுவன்; இளையவன்; உரை - உரைக்கத்தக்க பொருள்.
  தலவிசேடம் :- திருக்குருகாவூர் - IV - பக்கம் 163 பார்க்க; காவிரி வடகரை, சோழநாட்டு 13-வது தலம்.