[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்187

  கரையில் இருந்தமை அறியப்படும்; அஃது ஆற்றின் வெள்ளத்தில் அழிவு பட்டமையால் இப்போது சிவபுரியில் (3 திருநெல்வாயில்) சிறு தனியாலயமாகத் தாபிக்கப்பட்டுள்ளது. தலவிசேடம் பார்க்க. "கழியார் செல்வமல்கும்" (10) என்ற பதிகம் இதன் முன்னாட் பெருமை குறிப்பது. ஏத்தி - திருப்பதிகம் பார்க்க.
  அருள்கூர - மருங்கணைந்தார் - என்பனவும் பாடங்கள்.
 

166

  திருக்கழிப்பாலை
  திருச்சிற்றம்பலம்

பண் - நட்டராகம்

 
செடியேன் றீவினையிற் றடுமாறக் கண்டாலும்
அடியா னாவவெனா தொழிதல் தகவாமே?
முடிமேன் மாமதியும் மரவும் முடன்றுயிலும்
வடிவே தாமுடையார் மகிழுங் கழிப்பாலையதே.
 

(1)

 
பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி
கழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத்
தொழுவா னாவலர்கோ னாரூர னுரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார் வானோருல காள்பவரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- என்னை விலை ஆவணமுடையான்; என் வினை தீர்த்தாட் கொண்டவன்; அவனது இடம் கழிப்பாலையதே.
  பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) செடியேன் - குற்றமுடையவன்; ஆவ - இரக்கச்சொல்; தகவாமே - தகவன்று; வினா எதிர்மறை குறித்தது; மதியும் அரவும் உடன் துயிலும் - துயிலுதல் - ஈண்டுத் தங்குதல் என்ற பொருளில் வந்தது; பகைப்பொருள்களைப் பகைதீர்த் துடனிருக்கவைத்தல் இறைமைக்குணம்; "பாம்போடு திங்கள் பகை தீர்த்தாண்டாய்" (தேவா); அதுபோல் என்வினையின் கொடுமை தீர்த்து உடன் வைக்கவேண்டும் என்பது குறிப்பு; வடிவே - ஏகாரம் தேற்றம்; மேல் 3-5- பாட்டுக்களு மிக்கருத்தன;- (2) இறைவர் தமக்குச் செய்த பேரருளை வியந்து போற்றியது;- (3) நின் அருளில் ஒறுத்தாய் - அருட்குணங் காரணமாக என் குற்றங் கண்டபோது ஒறுத்தாய் - தண்டித்தாய்; ஒறுத்தல் - அருட்குணம்; "ஒறுத்தா லொன்றும் போதுமே"(திருவா); மேல் 5-வது பாட்டும் பார்க்க; "தந்தைதாய்...அடித்துத் தீய பந்தமு மிடுவர்...இந்த நீர் முறைமை யன்றோ வீசனார் முனிவு மென்றும்" (சித்தி. 2-15); அறியாமல் - பிறர் அதன் கொடுமையினை அறியாதபடி;- (4) சுரும்பார்...அடியார் - அடியார்களிலக்கணம்; அடியாரோடும் - தொண்டரோடு கூடுதல் - அணைந்தோர் தன்மை; (போதம் - 12சூத்) சைவத்திறத்தின் ஞானநூல்க ளுட்கண்ட அரிய உண்மைகளுள் ஒன்று; விரும்பேனுன்னை யல்லால் - எதிர்மறை உறுதி குறித்தது;- (5) விலை ஆவணமுடையாய் - ஆவணங் காட்டி ஆட்கொண்டமை; "மோதுவிப்பா யுகப்பாய் முனிவாய்" (தேவா);- (6) வினைகளவைபோகக் காத்தாய் - என்க; பார்த்தாயுனக்கு என்பது பார்த்தானுக்கு - என நின்றது;- (7) பருத்தாள் வன் பகடு - யானை; பரு - பரிய; வன் வலிய; பகடு - ஈண்டு யானை என்றபொருளில் வந்தது; படம் - போர்வை;- (8) உடைத்தாய் - அழித்தாய்;- (9) மெய்யே நின்றெரியும் விளக்கு - சத்துச் சொரூபமாக நிலைபெற்று ஒளிவிடும் விளக்கு;- (10) சேர்இல் - சேர்தல் இல்லாத; சேர் - முதனிலைத்