194திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

 
சென்று சென்று தொழுமின் றேவர் பிரானிடங்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
 

(1)

 
பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடங்
கல்லில் வெள்ளை யருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரடோ ளூரன் வனப்பினாற்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு:- எங்கள் பிரானதிடம் திருக்கழுக்குன்றமே; "பாவம்வினைகடாம்பல நீங்க, வெளிறு தீரச் சென்று தொழுமின்" என்று கருணையினால் உலகத்தவரை வழிப்படுத்தியது; (ஆற்றுப்படை.)
  பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) கொன்று செய்த - கொடுமை - கொன்ற கொடுமையால் வந்த பாவம்; நின்ற பாவம் வினைகள் தாம்பல - வேறெவ்வாற்றாலும் வரும் ஏனைப் பாவமும் தீவினைப் பயனும்; கொலைப்பாவம் ஒன்றே ஏனை எல்லாப் பாவங்களும் கூடிய தொகுதிக்கும் சமமாகும் எனக், கொன்ற கொடுமை என்றும், பாவம் வினைகடாம்பல என்றும் பிரித்துக் காட்டியவாறு; சென்று சென்று அடுக்குப் பலமுறையும் சென்று என்றதாம். இயன்ற அளவிற் சென்று என்றலுமாம்; தொழுமின் - ஏனை உலக மக்களை நோக்கிக் கூறியது; ஆற்றுப்படுத்த வகை; மேல்வருவனவும் இவ்வாறே கண்டுகொள்க; கன்று - யானைக் கன்று; கன்று - பிடி குறிஞ்சிக் கரு;- (2) இறங்கி - ஆணவமுனைப் பெழுச்சியினின்றும் கீழிறங்கி - வணங்கி; நிறங்கள் செய்த மணிகள் - பலநிறமுடைய மணிகள்; இவை நித்திலமொழிந்த ஏனையவை; நித்திலம் - முத்து; பிரித்துக் கூறியது சிறப்பு நோக்கி; இவை மலையிற் படுவன; வெள்ளை யருவி - தெளிந்த நீருடன் வீழும் அருவி;- (3) நீள - மிகவும்; ஆளும் - உயிர்களை அடிமைப்படுத்தி ஆளும்; அல்கி - வலிகுன்றி;- (4) வெளிறு - அறியாமை. "அரியகற் றாசற்றார்...அரிதே வெளிறு" (குறள்); இங்கு அறியாமையைச் செய்யும் ஆணவமலங் குறித்தது; ஆகுபெயர்; முளிறு - ஒளி; கூர்மை என்றலுமாம்; பிளிறு - யானையின் முழக்கம்; களிற்றினோடு என்பது எதுகைநோக்கிக் களிறினோடு என வந்தது;- (5) புலைகள் - கொலை முதலாகிய குற்றங்கள்; குட்டியொடுமுசு - பாயும் - குரங்குகள் குட்டியோடு தாவிப் பாய்ந்து செல்லுமியல்பு குறித்தது; புறவு - முல்லைப்புறவு;- (6) மடம் - ஈண்டு ஏழைமை; ஏனையவற்றை உணராமை குறித்தது; "ஏழையடி யாரவர்கள்" (தேவா) உற - கொள்ள; மனத்தே யுற - மனத்தில் பொருந்தவைக்க; உறப்பயிலும் - என்று கூட்டுக; மேல்வரும் பாட்டும் பார்க்க; கடம் - காடு; அரவு - பாம்பு; அரவன் - பாம்பினைப் பூண்டவன்;- (7) உற - ஆடி - என்று கூட்டுக; உற - உறும்படி; பொருந்த; ஆடி - ஆடுபவர்; பெயர்; நவிலும் - விளங்கும்; ஊனம் - பிறவி பற்றிய அறியாமை; ஞானமூர்த்தி - ஊனத்தை ஒழிப்பவன் என்றது குறிப்பு; தேன் - வண்டு வகை; கானமஞ்ஞை - மஞ்ஞை - மயில்; குறிஞ்சிக் கரு; கானம் - முல்லையிற் கூடுதல் திணைமயக்கம்;- (8) அந்தமில்லா அடியார் - எல்லையில்லாத அடிமைத் திறம் பூண்ட அடியார்கள்; "அந்தமில் புகழா னன்புக் களவின்மை கண்டேன்" (593); மடமுடைய என்றும், ஊனமில்லா என்றும், அந்தமில்லா என்றும் அடியார் தன்மைகளைப் பற்றி எடுத்துப் பாராட்டியவாறும் காண்க; உற - வந்து - சேர என்று கூட்டி முடிக்க. "நாடி நாரண னான்முக னென்றிவர், தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ7...அம்பலத்